ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2022-ல் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிஃப்ட் கவுர் சம்ரா, அஷி சவுக்சே மற்றும் மனினி கவுசிக் ஆகியோரைக் கொண்ட மகளிர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நமது மகளிர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் மிகவும் தகுதியான வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. அவர்கள் அசாதாரண திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். சிஃப்ட் கவுர் சம்ரா, அஷி சவுக்சே மற்றும் மனினி கவுசிக் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
Our dedicated and talented 50m Rifle 3 Positions Women's Team has clinched a well-deserved Silver Medal in the Asian Games. They have demonstrated extraordinary talent. Congratulations to Sift Kaur Samra, Ashi Chouksey and Manini Kaushik. pic.twitter.com/5HL6l9T8Fz
— Narendra Modi (@narendramodi) September 27, 2023