சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான ஈட்டி எறிதல்-எஃப் 37 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஹானிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான ஈட்டி எறிதல்-எஃப் 37 இல் தங்கப் பதக்கம் வென்றிருப்பது ஹானியின் மகத்தான சாதனை!
அவரது ஈடு இணையற்ற திறமை இந்தியாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
A stellar accomplishment by Haney, securing the Gold Medal in the Men's Javelin Throw-F37 at the Asian Para Games!
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
His unparalleled skill has ushered in boundless joy and pride for India. Best wishes for the endeavours ahead. pic.twitter.com/Wf6w4ei0Tf