பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் (#ParisOlympics2024!) இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு ( @realmanubhaker ) வாழ்த்துகள். வெண்கலம் வென்றதற்குப் பாராட்டுகள். இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை மனுபாக்கர் பெற்றுள்ளார். அபாரமான சாதனை! #Cheer4Bharat"
A historic medal!
— Narendra Modi (@narendramodi) July 28, 2024
Well done, @realmanubhaker, for winning India’s FIRST medal at #ParisOlympics2024! Congrats for the Bronze. This success is even more special as she becomes the 1st woman to win a medal in shooting for India.
An incredible achievement!#Cheer4Bharat