கொரோனா தொற்று காரணமாக மார்ச் 11 2021 முதல் பெற்றோர் இருவரையும் அல்லது காப்பாளர்கள் இருவரையும் அல்லது தத்தெடுத்த பெற்றோர் இருவரையும் அல்லது உயிருடன் இருக்கும் ஒரே பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி மே 29 2021 அன்று குழந்தைகள் திட்டத்துக்கு பிஎம் கேர்ஸ் நிதியைப் பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு முழுமையான அக்கறை அளிக்கவும், குழந்தைகள் நீடித்த காலத்துக்கு பாதுகாப்பு பெறவும், உடல் நலத்தைக் காக்க மருத்துவ காப்பீடு வசதி பெறவும், கல்வி மூலம் அதிகாரம் அடையவும், தற்சார்பு பெறுவதையும் உறுதி செய்ய அவர்களது 23 ஆவது வயது வரை இத்திட்டம் உதவுகிறது,
பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை இந்த திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்தும், மாநிலங்களில் சிறார்களின் நீதி உள்ளிட்டவற்றை கையாளும் துறைகள் மாநில அளவில் இதனை செயல்படுத்தும் அமைப்புகளாக இருக்கும்.
இத்திட்டத்தை https://pmcaresforchildren.in/ என்ற இணையதளம் வாயிலாக அணுக முடியும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது கடந்த ஜுலை 15 2021 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, தகுதியுடைய குழந்தைகளை அடையாளம் காணுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தகுதியுடைய குழந்தைகள் குறித்து நாட்டில் உள்ள எந்த குடிமக்களும் இந்த இணையதளம் வாயிலாகத் தகவலைத் தெரிவிக்கலாம்,