கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு உரிய வலுவான உத்தியை வகுக்குமாறு சார்க் நாடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பூமிக்கோளத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு உரிய பங்களிப்பை செலுத்தி, உலகுக்கே முன்மாதிரியாக சார்க் நாடுகள் திகழ வேண்டும் என்றும் அதற்கு, சார்க் நாடுகள் ஒன்று சேர்ந்து காணொலி காட்சி மூலம் விவாதித்து உரிய உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ள பிரதமர், உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ள தெற்காசியா அதன் மக்களுக்கு ஆரோக்கியத்தை உறுதிசெய்து வருகிறது என்பதை எடுத்துக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொவிட்-19 தொற்றை எதிர்த்து கட்டுப்படுத்த அரசு பல்வேறு மட்டத்தில் உரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
Our planet is battling the COVID-19 Novel Coronavirus. At various levels, governments and people are trying their best to combat it.
— Narendra Modi (@narendramodi) March 13, 2020
South Asia, which is home to a significant number of the global population should leave no stone unturned to ensure our people are healthy.
I would like to propose that the leadership of SAARC nations chalk out a strong strategy to fight Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 13, 2020
We could discuss, via video conferencing, ways to keep our citizens healthy.
Together, we can set an example to the world, and contribute to a healthier planet.