பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜனவரி 22 அன்று அயோத்தி தாமில் உள்ள கோவிலில் ஸ்ரீ ராம்லாலாவின் பிரான பிரதிஷ்டத்தை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்கை இன்று தொடங்கியுள்ளார். "இது ஒரு மிகப் பெரிய பொறுப்பு. தவிர, நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, கடவுள் வழிபாட்டிற்காக நமக்குள் யோகா மற்றும் தெய்வீக உணர்வை எழுப்ப வேண்டும். இதற்காக, குடமுழுக்கு நிகழ்வுக்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் மற்றும் கடுமையான விதிகள் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஆன்மீகப் பயணத்தில் சில புண்ணிய ஆத்மாக்கள் மற்றும் மகான்களிடமிருந்து எனக்குக் கிடைத்த வழிகாட்டுதலின்படியும், அவர்கள் பரிந்துரைத்த 'யம நியமங்களின்' படியும், இன்று முதல் 11 நாட்களுக்கு ஒரு சிறப்பு சடங்கைத் தொடங்குகிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.
பிரான பிரதிஷ்டையை முன்னிட்டு ஒட்டுமொத்த தேசத்தையும் ராம பக்தி மூழ்கடித்த உணர்வு குறித்து பிரதமர் தமது உணர்ச்சிகரமான செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தருணத்தை எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம் என்று அழைத்த பிரதமர், "நான் உணர்ச்சிகளால் மூழ்கியிருக்கிறேன்! என் வாழ்க்கையில் முதல் முறையாக, இதுபோன்ற உணர்வுகளை நான் கடந்து செல்கிறேன், நான் ஒரு வித்தியாசமான பக்தி உணர்வை அனுபவிக்கிறேன். என் உள்மனதின் இந்த உணர்ச்சிப் பயணம் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அல்ல, அனுபவத்திற்கானது. நான் விரும்பினாலும், அதன் ஆழத்தையும், அகலத்தையும், தீவிரத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என் நிலைமையை நீங்களும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
இந்த வாய்ப்பிற்கு பிரதமர் மோடி தமது நன்றியைத் தெரிவித்துள்ளர். "பல தலைமுறைகள் பல ஆண்டுகளாக ஒரு தீர்மானம் போல தங்கள் இதயங்களில் வாழ்ந்த கனவை நிறைவேற்றும் நேரத்தில் நான் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் என்னை உருவாக்கியுள்ளார். இது மிகப் பெரிய பொறுப்பு" என்றார்.
இந்த முயற்சிக்கு மக்கள், முனிவர்கள் மற்றும் கடவுளின் ஆசீர்வாதங்களைக் கோரிய பிரதமர், ராமர் கணிசமான நேரத்தைச் செலவிட்ட நாசிக் தாம் - பஞ்சவடியில் இருந்து இந்தச் சடங்கைத் தொடங்குவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சுவாமி விவேகானந்தர் மற்றும் மாதா ஜிஜாபாய் ஆகியோரின் பிறந்த நாளான இன்று மகிழ்ச்சியான இந்தத் தற்செயல் நிகழ்வைப் பற்றி குறிப்பிட்ட அவர், தேச உணர்வின் இரு ஜாம்பவான்களுக்கும் தமது மரியாதையைச் செலுத்தினார். சீதா-ராமர் மீது எப்போதும் பக்தி கொண்ட தமது சொந்தத் தாயை இந்தத் தருணத்தில் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
ராம பக்தர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், "நேரடியாக, அந்தப் புனிதமான தருணத்திற்கு நான் சாட்சியாக இருப்பேன், ஆனால் என் மனதில், என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும், 140 கோடி இந்தியர்கள் என்னுடன் இருப்பார்கள். நீங்கள் என்னுடன் இருப்பீர்கள்... ஒவ்வொரு ராம பக்தரும் என்னுடன் இருப்பார். இந்த உணர்வுபூர்வமான தருணம் நம் அனைவருக்கும் பகிரப்பட்ட அனுபவமாக இருக்கும். ராமர் கோயில் கட்டுவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த எண்ணற்ற ஆளுமைகளின் உத்வேகத்தை என்னுடன் எடுத்துச் செல்வேன்’’ என்று கூறினார்.
நாட்டு மக்கள் தம்முடன் இணைந்து வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், மக்களின் ஆசிர்வாதத்தையும், தங்கள் உணர்வுகளைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். கடவுள் 'உருவமற்றவர்' என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கடவுள், உடல் வடிவில் கூட, நமது ஆன்மீகப் பயணத்தை வலுப்படுத்துகிறார். மக்களிடம் கடவுளின் ஒரு வடிவம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். ஆனால் எனக்குக் கடவுளைப் போன்ற மக்கள் தங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தி ஆசீர்வாதம் செய்யும்போது, எனக்குள் புதிய சக்தி புகுத்தப்படுகிறது. இன்று, உங்கள் ஆசீர்வாதம் எனக்குத் தேவை", என்று பிரதமர் கூறியுள்ளார்.
अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा में केवल 11 दिन ही बचे हैं।
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
मेरा सौभाग्य है कि मैं भी इस पुण्य अवसर का साक्षी बनूंगा।
प्रभु ने मुझे प्राण प्रतिष्ठा के दौरान, सभी भारतवासियों का प्रतिनिधित्व करने का निमित्त बनाया है।
इसे ध्यान में रखते हुए मैं आज से 11 दिन का विशेष…