“This decade will be an important decade to fulfill the dreams of Viksit Bharat”
“This is a decade to accomplish India’s dreams through the nation’s capability”
“This decade will be the decade of India's High Speed Connectivity, High Speed Mobility and High Speed Prosperity”
“India remains a beacon of faith as a strong democracy”
“India has proved that good politics can only happen with good economics”
“My entire focus is on increasing the speed and scale of the country's development”
“In the last 10 years, people have seen solutions, not slogans”
“The heights to which India will reach in the next decade will be unprecedented, unimaginable”

புதுதில்லியில் இன்று நடைபெற்ற ரிபப்ளிக் உச்சி மாநாடு 2024-ல் அடுத்த தசாப்தத்தில் பாரதம் என்ற கருப்பொருளில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த தசாப்தம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், இது அறிக்கை அரசியல் அல்ல என்ற உண்மையை இன்று உலகம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் நினைவு கூர்ந்தார். "இது இந்தியாவின் தசாப்தம் என்று உலகம் நம்புகிறது" என்று கூறிய அவர், கருப்பொருளின்படி அடுத்த தசாப்தத்தின் இந்தியா குறித்த விவாதத்தைத் தொடங்குவதற்கான குடியரசு அணியின் பார்வையைப் பாராட்டினார். வளர்ச்சியடைந்த பாரதத்தின் தீர்மானங்களை நிறைவேற்றும் ஊடகமாக நடப்புப் பத்தாண்டு மாறும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.

 

சுதந்திர இந்தியாவின் தற்போதைய பத்தாண்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், செங்கோட்டையில் இருந்து தாம் முழங்கியதை நினைவு கூர்ந்து, "இதுவே நேரம், இதுவே சரியான தருணம்" என்று கூறினார். இந்தத் தசாப்தம் திறமையான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும், ஒரு காலத்தில் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் ஒரு நேரம் என்று அவர் சுட்டிக் காட்டினார். "தேசத்தின் திறனின் மூலம் இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தசாப்தம் இது" என்று அவர் வலியுறுத்தினார். அடுத்த பத்தாண்டுகளில், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை மக்கள் காண்பார்கள் என்றும், உறுதியான வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு, மின்சாரம், குடிநீர், இணையம் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்தத் தசாப்தம் அதிவேக நெடுஞ்சாலைகள், அதிவேக ரயில்கள் மற்றும் உள்நாட்டு நீர்வழி கட்டமைப்புகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சியுடன் இருக்கும் என்றும், இந்தியா தனது முதல் புல்லட் ரயிலைப் பெறும் என்றும், முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்கள் கிடைக்கும் என்றும், இந்தியாவின் பெரிய நகரங்கள் நமோ அல்லது மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்தத் தசாப்தம் இந்தியாவின் அதிவேக இணைப்பு, இயக்கம் மற்றும் வளத்திற்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

 

இந்தியாவின் செயல்திறன் குறித்து பேசியப் பிரதமர், "தேசத்தின் தேவைகள் மற்றும் கனவுகளை நாங்கள் நிறைவேற்றியதால் இது நடந்தது, அதிகாரமளித்தல் குறித்து பணியாற்றும் போது செழிப்பில் கவனம் செலுத்தினோம்" என்று கூறினார். தனிநபர் வருமான வரியைக் குறைக்கும் போது பெரு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டதற்கு அவர் ஒரு உதாரணத்தையும் கூறினார். மேலும், நவீன உள்கட்டமைப்பில் சாதனை முதலீட்டுடன், இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான உறுதியான வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அவர் கூறினார். தொழில்துறைக்கான பி.எல்.ஐ ஊக்குவிப்புத் திட்டங்கள் இருந்தால், காப்பீடு மற்றும் விவசாயிகளுக்கும் வருவாய் ஈட்டும் வழிகள் இருந்தன. தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்வதுடன், இளைஞர்களின் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

 

வாரிசு அரசியலின் விளைவாக பல தசாப்தங்களாக இந்தியாவின் வளர்ச்சியை இழந்த நேரம் குறித்து தெரிவித்த பிரதமர், வளர்ச்சியடைந்த பாரத் உருவாக்கத்திற்காக இழந்த நேரத்தை மீட்டெடுக்க முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வேகமாகவும் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்ட அவர், நாட்டின் வளர்ச்சியின் வேகத்தையும் அளவையும் அதிகரிப்பதில் தனது கவனம் இருப்பதாக கூறினார்.

 

சாதனைகளின் பயணத்தில் கடின உழைப்பு, தொலைநோக்குப் பார்வை மற்றும் மனவுறுதி ஆகியவற்றின் பங்கைக் குறிப்பிட்ட பிரதமர், "இந்தப் பயணத்தில் இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா எட்டவிருக்கும் உயரங்கள் முன்னெப்போதும் இல்லாததாகவும், கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். இதுவும் மோடியின் உத்தரவாதம்" என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi