Quoteஅறிவியல் நகரத்தின் வெற்றி அரங்கு உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்
Quoteபிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு
Quote"துடிப்பான குஜராத் என்பது பிராண்டிங் நிகழ்வு மட்டுமல்ல, அதையும் தாண்டி இது ஒரு பிணைப்பு நிகழ்வும் கூட"
Quote"நாங்கள் புனரமைப்பு பற்றி மட்டுமல்ல, மாநிலத்தின் எதிர்காலத்திற்காகவும் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம், இதற்காக துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டை முக்கிய ஊடகமாக்கினோம் "
Quote"குஜராத்தின் முக்கிய ஈர்ப்பு நல்ல நிர்வாகம், நியாயமான மற்றும் கொள்கை சார்ந்த நிர்வாகம், சமமான வளர்ச்சி மற்றும் வெளிப்படைத்தன்மை"
Quote"துடிப்பான குஜராத்தின் வெற்றியின் முக்கிய கூறுகள் யோசனை, கற்பனை மற்றும் செயல்படுத்தல் ஆகும்"
Quote"துடிப்பான குஜராத் ஒரு முறை நிகழ்விலிருந்து ஒரு நிறுவனமாக மாறியுள்ளது"
Quote"இந்தியாவை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றுவதற்கான 2014 ஆம் ஆண்டின் குறிக்கோள் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்களிடையே எதிரொலிக்கிறது" என்று அவர் கூறினார்.
Quote"கடந்த 20 ஆண்டுகளை விட அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியம

அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தில் இன்று நடைபெற்ற துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 20 ஆண்டுகளுக்கு முன்பு 28 செப்டம்பர் 2003 அன்று அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. காலப்போக்கில், இது ஒரு உண்மையான உலகளாவிய நிகழ்வாக மாறியது, இது இந்தியாவின் முதன்மையான வணிக உச்சிமாநாடுகளில் ஒன்றாகும் என்ற அந்தஸ்தை அடைந்தது.

 

|

தொழில்துறை தலைவர்கள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்

வெல்ஸ்பன் தலைவர் திரு பி.கே.கோயங்கா, துடிப்பான குஜராத்தின் பயணத்தை நினைவு கூர்ந்து, துடிப்பான குஜராத் ஒரு உண்மையான உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ளது என்று கூறினார். முதலீட்டை ஊக்குவிப்பது ஒரு பணியாக இருந்த அப்போதைய முதலமைச்சர்  மற்றும் தற்போதைய பிரதமரின் தொலைநோக்கு பார்வையை அவர் நினைவு கூர்ந்தார். இந்நிகழ்வு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றார். முதல் துடிப்பான குஜராத்தின் போது, பூகம்பத்தால் சீரழிந்த கட்ச் பிராந்தியத்தை விரிவாக்கம் செய்யுமாறு திரு. மோடி அறிவுறுத்தியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்தார். பிரதமரின் ஆலோசனை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், அனைத்து ஆதரவுடன் மிகக் குறுகிய காலத்தில் உற்பத்தியைத் தொடங்க முடியும் என்றும் திரு கோயங்கா கூறினார். வெறுமனே வெறிச்சோடி காணப்பட்ட பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள தற்போதைய கட்ச் பகுதியின் வீரியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், விரைவில் இப்பகுதி உலகிற்கு பசுமை ஹைட்ரஜனின் மையமாக மாறும் என்றார். உலகளாவிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் 2009 ஆம் ஆண்டில் பிரதமரின் நம்பிக்கையையும், துடிப்பான குஜராத் அந்த ஆண்டிலும் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். 70 சதவீதத்திற்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாநிலத்தில் முதலீடுகளைக் கண்டுள்ளன என்று அவர் கூறினார்.

ஜெட்ரோ (தெற்காசியா) தலைமை இயக்குநர் திரு தகாஷி சுஸூகி, துடிப்பான குஜராத்தின் 20 வது ஆண்டு நிறைவுக்காக குஜராத் அரசாங்கத்தை வாழ்த்தினார், மேலும் மேக் இன் இந்தியா முன்முயற்சிக்கு ஜப்பான் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது என்று கூறினார். 2009 முதல் குஜராத்துடனான ஜெட்ரோவின் கூட்டாண்மை குறித்து பேசிய திரு சுஸுகி, குஜராத் உடனான கலாச்சார மற்றும் வணிக தொடர்புகள் காலப்போக்கில் ஆழமடைந்துள்ளன என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்காக 2013 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் தனது திட்ட அலுவலகத்தை ஜெட்ரோ திறந்தது என்றும் கூறினார். முதலீடுகளை ஊக்குவித்த இந்தியாவில் உள்ள நாட்டை மையமாகக் கொண்ட நகரியங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார், மேலும் குஜராத்தில் உள்ள திட்ட அலுவலகம் 2018 ஆம் ஆண்டில் பிராந்திய அலுவலகமாக மேம்படுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டார். குஜராத்தில் கிட்டத்தட்ட 360 ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன என்று திரு சுஸுகி தெரிவித்தார். செமிகண்டக்டர்கள், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மருந்துத் துறைகள் போன்ற இந்தியாவின் எதிர்கால வணிகத் துறைகளில் நுழைவதையும் அவர் குறிப்பிட்டார், மேலும் அடுத்த துடிப்பான குஜராத்தில் செமிகண்டக்டர் மின்னணுவியலில் கவனம் செலுத்தும் ஜப்பானிய வணிகக் குழுவை அழைப்பது குறித்தும் தெரிவித்தார். இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றுவதற்கான வழிகாட்டுதலுக்காக பிரதமர் மோடிக்கு சுஸுகி நன்றி தெரிவித்தார்.

 

|

ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் செயல் தலைவர் திரு லட்சுமி மிட்டல் கூறுகையில், வைப்ரண்ட் குஜராத்தில் தொடங்கிய போக்கு மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது, இது உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை விருப்பமான இடமாக மாற்றுகிறது. இதற்கு பிரதமரின் தொலைநோக்கு பார்வையும், செயல்திறனும் தான் காரணம் என்று அவர் பாராட்டினார். பிரதமரின் தலைமையின் கீழ் உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஜி 20 அமைப்புக்காக அவர் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னணி தொழில்துறை மாநிலமாக குஜராத்தின் அந்தஸ்தையும், உலகளாவிய போட்டித்தன்மையை அது எவ்வாறு பயனுள்ள முறையில் வெளிப்படுத்துகிறது என்பதையும் திரு மிட்டல் அடிக்கோடிட்டுக் காட்டினார். மாநிலத்தில் உள்ள ஆர்செலர் மிட்டல் திட்டங்கள் குறித்து அவர் விளக்கினார்

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இருபது ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதைகள் ஒரு அற்புதமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட துடிப்பான குஜராத்தின் வடிவத்தை எடுத்துள்ளன என்று குறிப்பிட்டார். துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டின் 20 வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். துடிப்பான குஜராத் என்பது மாநிலத்திற்கான ஒரு முத்திரையிடும் பயிற்சி மட்டுமல்ல, பிணைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்த உச்சிமாநாடு அவருடன் தொடர்புடைய ஒரு உறுதியான பிணைப்பின் அடையாளமாகவும், மாநிலத்தின் 7 கோடி மக்களின் திறன்களின் அடையாளமாகவும் உள்ளது என்று வலியுறுத்தினார். "இந்த பிணைப்பு மக்கள் என் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பை அடிப்படையாகக் கொண்டது", என்று அவர் மேலும் கூறினார். 

2001 பூகம்பத்திற்குப் பிறகு குஜராத்தின் நிலையை கற்பனை செய்வது கடினம் என்று அவர் கூறினார். பூகம்பத்திற்கு முன்பே, குஜராத் நீண்ட வறட்சியை சந்தித்து வந்தது. மாதவ்புரா மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கியின் வீழ்ச்சியால் மற்ற கூட்டுறவு வங்கிகளிலும் சங்கிலித் தொடர் எதிர்வினைக்கு வழிவகுத்தது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் புதிய பொறுப்பில் இருந்ததால் இது தனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்று திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்த நிலையில், நெஞ்சை உருக்கும் கோத்ரா சம்பவத்தை அடுத்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. முதலமைச்சராக தனக்கு அனுபவம் இல்லாத போதிலும், குஜராத் மற்றும் அதன் மக்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருந்தது என்று திரு. மோடி கூறினார். குஜராத்தை இழிவுபடுத்தும் சதித் திட்டம் தொடரப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் குஜராத்தை இந்த நிலையில் இருந்து மீட்பேன் என்று சபதம் எடுத்தேன். நாங்கள் புனரமைப்பு பற்றி சிந்திப்பது மட்டுமல்லாமல், அதன் எதிர்காலத்திற்காகவும் திட்டமிட்டு வருகிறோம், இதற்காக துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டை ஒரு முக்கிய ஊடகமாக மாற்றினோம்" என்று பிரதமர் கூறினார். துடிப்பான குஜராத் மாநிலத்தின் ஆன்மாக்களை உயர்த்துவதற்கும் உலகத்துடன் தொடர்புகொள்வதற்கும் ஒரு ஊடகமாக மாறியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். மாநில அரசின் முடிவெடுக்கும் மற்றும் கவனம் செலுத்தும் அணுகுமுறையை உலகிற்கு வெளிப்படுத்தும் ஊடகமாக இந்த உச்சிமாநாடு மாறியுள்ளது, அதே நேரத்தில் நாட்டின் தொழில் திறனையும் முன்னிலைக்கு கொண்டு வருகிறது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பல துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குவதற்கும், நாட்டின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், நாட்டின் தெய்வீகத்தன்மை, கம்பீரம் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை முன்னிலைப்படுத்துவதற்கும் துடிப்பான குஜராத் திறம்பட பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட நேரம் குறித்து பேசிய பிரதமர், நவராத்திரி மற்றும் கர்பாவின் பரபரப்பின் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் துடிப்பான குஜராத் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கான திருவிழாவாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

 

|

குஜராத் மீது அப்போதைய மத்திய அரசு காட்டிய அலட்சியத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். 'குஜராத்தின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சி' என்று அவர் கூறிய போதிலும், குஜராத்தின் வளர்ச்சியை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டலுக்கு மத்தியிலும் குஜராத்தை தேர்வு செய்தனர். இது சிறப்பு ஊக்கத்தொகை எதுவும் இல்லாத போதிலும், நல்லாட்சி, நியாயமான மற்றும் கொள்கை அடிப்படையிலான நிர்வாகம் மற்றும் சமமான வளர்ச்சி மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை முக்கிய ஈர்ப்பாக இருந்தன என்று அவர் கூறினார்.

2009 ஆம் ஆண்டு துடிப்புமிக்க  குஜராத்தின் பதிப்பை நினைவு கூர்ந்த பிரதமர், முழு உலகமும் மந்தநிலையைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் என்ற முறையில், இந்த நிகழ்வை முன்னெடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தியதாக அவர்  குறிப்பிட்டார். இதன் விளைவாக, 2009 துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டின் போது குஜராத்தின் வெற்றியின் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மாநாட்டின் வெற்றியை அதன் பயணத்தின் மூலம் பிரதமர் விளக்கினார். 2003 பதிப்பு சில நூறு பங்கேற்பாளர்களை மட்டுமே ஈர்த்தது; இன்று 40,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் 135 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றன என்று அவர் தெரிவித்தார். 2003-ஆம் ஆண்டில் 30 ஆக இருந்த கண்காட்சியாளர்களின் எண்ணிக்கையும் இன்று 2000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

துடிப்பான குஜராத்தின் வெற்றியின் முக்கிய கூறுகள், யோசனை, கற்பனை மற்றும் செயலாக்கம் ஆகும் என்று பிரதமர் கூறினார். துடிப்பான குஜராத்தின் பின்னணியில் உள்ள யோசனை மற்றும் கற்பனையின் தைரியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், இது மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது என்றார்.

"எவ்வளவு பெரிய யோசனையாக இருந்தாலும், அவர்கள் அமைப்பைத் திரட்டி முடிவுகளை வழங்குவது அவசியம்" என்று குறிப்பிட்ட பிரதமர்,  இத்தகைய அளவிலான இந்த அமைப்புக்கு தீவிரமான திட்டமிடல், திறன் மேம்பாட்டில் முதலீடுகள்,  துல்லியமான கண்காணிப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவை என்று குறிப்பிட்டார். துடிப்பான குஜராத்தின் மூலம், அதே அதிகாரிகள், வளங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்ட மாநில அரசு வேறு எந்த அரசாங்கமும் நினைத்துப் பார்க்க முடியாததை சாதித்துள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

|

அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடந்து வரும் அமைப்பு மற்றும் செயல்முறையுடன் ஒரு முறை நிகழ்விலிருந்து இன்று துடிப்பான குஜராத் ஒரு நிறுவனமாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் பயனடைவதை நோக்கமாகக் கொண்ட துடிப்பான குஜராத்தின் உணர்வை பிரதமர் வலியுறுத்தினார். உச்சிமாநாடு வழங்கிய வாய்ப்பை மற்ற மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

20 ஆம் நூற்றாண்டில் குஜராத்தின் அடையாளம் வர்த்தகர்களை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்ட பிரதமர், 20 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்பட்ட மாற்றம் குஜராத்தை விவசாயத்தில் ஒரு அதிகார மையமாகவும் நிதி மையமாகவும் மாற்ற வழிவகுத்தது என்றும், தொழில்துறை மற்றும் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பாக மாநிலம் அதன் புதிய அடையாளத்தைப் பெற்றது என்றும் தெரிவித்தார். குஜராத்தின் வர்த்தக அடிப்படையிலான நற்பெயர் வலுவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்களுக்கான இன்குபேட்டராக செயல்பட்டு வரும் துடிப்பான குஜராத்துக்கு இத்தகைய முன்னேற்றங்களின் வெற்றிக்கு பிரதமர் பெருமை தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் பயனுள்ள கொள்கை உருவாக்கம் மற்றும் திறமையான திட்ட அமலாக்கம் ஆகியவற்றின் மூலம் சாத்தியமான வெற்றிக் கதைகள் மற்றும் வழக்கு ஆய்வுகளை குறிப்பிட்ட பிரதமர், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியை எடுத்துக்காட்டினார், மேலும் ஏற்றுமதியில் சாதனை வளர்ச்சியையும் குறிப்பிட்டார். 2001-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆட்டோமொபைல் துறையில் முதலீடுகள் 9 மடங்கு அதிகரித்துள்ளன, உற்பத்தியில் 12 மடங்கு உயர்வு, இந்தியாவின் சாயங்கள் மற்றும் இடைநிலை உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பு, நாட்டில் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டில் அதிக பங்கு, 30,000 க்கும் மேற்பட்ட செயல்பாட்டு உணவு பதப்படுத்தும் அலகுகள், மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு மற்றும் கார்டியாக் ஸ்டென்ட் உற்பத்தியில் சுமார் 80 சதவீத பங்கு ஆகியவற்றை திரு மோடி விளக்கினார்.  உலகின் வைரங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை பதப்படுத்துதல், இந்தியாவின் வைர ஏற்றுமதிக்கு 80 சதவீத பங்களிப்பு மற்றும் நாட்டின் பீங்கான் சந்தையில் 90 சதவீத பங்கு, சுமார் 10 ஆயிரம் பீங்கான் டைல்ஸ், சானிட்டரி பொருட்கள் மற்றும் பல்வேறு பீங்கான் பொருட்களின் உற்பத்தி அலகுகளுடன். தற்போதைய பரிவர்த்தனை மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் குஜராத் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது என்றும் திரு. மோடி தெரிவித்தார். "வரும் காலங்களில் பாதுகாப்பு உற்பத்தி மிகப் பெரிய துறையாக இருக்கும்", என்று அவர் மேலும் கூறினார்.

 

|

"நாங்கள் துடிப்பான குஜராத்தை தொடங்கியபோது, இந்த மாநிலம் நாட்டின் முன்னேற்றத்தின் வளர்ச்சி இயந்திரமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த கனவு நனவாகியதை நாடு கண்டுள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தியாவை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றும் இலக்கு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்களிடையே எதிரொலித்து வருகிறது. இன்று உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. இப்போது இந்தியா ஒரு உலகளாவிய பொருளாதார சக்தியாக மாறப் போகும் ஒரு திருப்புமுனையில் நாம் நிற்கிறோம். இப்போது இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வேண்டும்" என்று அவர் கூறினார். இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை வழங்க உதவும் துறைகளில் தொழிலதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல், வேளாண் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஶ்ரீ அன்னாவுக்கு உத்வேகம் அளிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

நிதி ஒத்துழைப்பு நிறுவனங்களின் வளர்ந்து வரும் தேவை குறித்து பேசிய பிரதமர், கிஃப்ட் சிட்டியின் அதிகரித்து வரும் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்தார். "கிஃப்ட் சிட்டி எங்கள் முழு அரசாங்க அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது. இங்கு மத்திய, மாநில மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி அதிகாரிகள் இணைந்து உலகின் சிறந்த ஒழுங்குமுறை சூழலை உருவாக்குகின்றனர். உலகளாவிய போட்டி நிறைந்த நிதிச் சந்தையாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும்", என்று அவர் மேலும் கூறினார்.

இடைநிறுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்று பிரதமர் கூறினார். கடந்த 20 ஆண்டுகளை விட அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை. துடிப்பான குஜராத் 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, இந்தியா அதன் சுதந்திரத்தின் நூற்றாண்டிலிருந்து வெகு தொலைவில் இருக்காது. 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த மற்றும் தற்சார்பு நாடாக மாற்றும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது" என்று பிரதமர் உரையை நிறைவு செய்தார்.  இந்த உச்சிமாநாடு இந்த திசையில் நகரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் திரு. ஆச்சார்யா தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல், குஜராத் மாநில  அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

அகமதாபாத்தின் அறிவியல் நகரில் நடந்த துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் தொழில் சங்கங்கள், வர்த்தகம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இளம் தொழில்முனைவோர் மற்றும் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.

துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 28, 2003 அன்று, துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் பயணம் தொடங்கியது. காலப்போக்கில், இது ஒரு உண்மையான உலகளாவிய நிகழ்வாக மாறியது, இது இந்தியாவின் முதன்மையான வணிக உச்சிமாநாடுகளில் ஒன்றாகும் என்ற அந்தஸ்தை அடைந்தது. 2003 ஆம் ஆண்டில் சுமார் 300 சர்வதேச பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்த உச்சிமாநாட்டில், 2019 ஆம் ஆண்டில் 135 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில், துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு "குஜராத்தை ஒரு விருப்பமான முதலீட்டு இடமாக மாற்றுதல்" என்பதிலிருந்து "ஒரு புதிய இந்தியாவை உருவாக்குதல்" வரை பரிணமித்துள்ளது. துடிப்பான  குஜராத்தின் இணையற்ற வெற்றி முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாக மாறியது, மேலும் இதுபோன்ற முதலீட்டு உச்சிமாநாடுகளின் ஒழுங்கமைப்பைப் பிரதிபலிக்க மற்ற இந்திய மாநிலங்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளது.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
We've to achieve greater goals of strong India, says PM Narendra Modi

Media Coverage

We've to achieve greater goals of strong India, says PM Narendra Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the passing of His Highness Prince Karim Aga Khan IV
February 05, 2025

The Prime Minister, Shri Narendra Modi today condoled the passing of His Highness Prince Karim Aga Khan IV. PM lauded him as a visionary, who dedicated his life to service and spirituality. He hailed his contributions in areas like health, education, rural development and women empowerment.

In a post on X, he wrote:

“Deeply saddened by the passing of His Highness Prince Karim Aga Khan IV. He was a visionary, who dedicated his life to service and spirituality. His contributions in areas like health, education, rural development and women empowerment will continue to inspire several people. I will always cherish my interactions with him. My heartfelt condolences to his family and the millions of followers and admirers across the world.”