அரசின் முக்கிய திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் வகையிலான வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
சுமார் ரூ. 24,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படத்தப்படும், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கத்தை தொடங்கிவைத்தார்
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15 வது தவணைத் தொகையாக சுமார் ரூ.18,000 கோடியை பிரதமர் விடுவித்தார்
ஜார்க்கண்டில் சுமார் ரூ. 7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்துக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் தலைமை வகித்தார்
"பகவான் பிர்சா முண்டாவின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன"
“வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம் மற்றும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கம் ஆகிய இரண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முன்முயற்சிகள் இன்று ஜார்க்கண்டில் தொடங்கப
இந்நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் காணொலி உரைப் பதிவு ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம் தொடர்பான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் தலைமை வகித்தார்.
இது அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியினரைப் பாதுகாத்து அவர்களை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பகவான் பிர்சா முண்டாவின் இந்த பூமிக்குத் தாம் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் 2023-ம் ஆண்டுக்கான பழங்குடியினர் கௌரவ தின விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.11.2023) பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம் ('விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா') மற்றும்  அதிகம்  பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்கள் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கம் ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவித் திட்டத்தின் 15 வது தவணைத் தொகையையும் அவர் விடுவித்தார்.  ஜார்க்கண்டில் ரயில், சாலை, கல்வி, நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல துறைகளில் ரூ. 7200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட  கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் காணொலி உரைப் பதிவு ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம்  தொடர்பான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிக்கு  பிரதமர் தலைமை  வகித்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமம், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா நினைவுப் பூங்கா, சுதந்திர போராட்ட வீரர் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு இன்று காலை தாம் சென்றதை  நினைவுகூர்ந்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததையும் அவர் குறிப்பிட்டார். பழங்குடியின கௌரவ தினத்தை முன்னிட்டு மக்களுக்கு திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பங்களிப்பை எடுத்துரைத்தார். ரயில், சாலை, கல்வி, நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல்வேறு துறைகளில் இன்றைய வளர்ச்சிக்காக ஜார்க்கண்ட் மக்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது 100 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பழங்குடியின மக்களுக்காக பகவான் பிர்சா முண்டா நடத்திய எழுச்சியூட்டும் போராட்டத்தைக் குறிப்பிட்ட பிரதமர், எண்ணற்ற பழங்குடியின வீரர்களுக்கு ஜார்கண்ட் மண்ணுடன் உள்ள தொடர்பை குறிப்பிட்டார். தில்கா மாஞ்சி, சித்து கன்ஹு, சந்த் பைரவ், புலோ ஜானோ, நீலாம்பர், பிதாம்பர், ஜாத்ரா தானா பகத் மற்றும் ஆல்பர்ட் எக்கா போன்ற பல பழங்குடியின வீரர்கள் இந்த நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பழங்குடியின வீரர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தனர் என்று கூறிய பிரதமர், மங்கர் தாமின் கோவிந்த் குரு, மத்தியப் பிரதேசத்தின் தந்தியா பில், பீமா நாயக், சத்தீஸ்கரின் தியாகி வீர் நாராயண் சிங், வீர் குண்டதூர், மணிப்பூரின் ராணி கெய்டின்லியு, தெலங்கானாவின் வீர் ராம்ஜி கோண்ட், ஆந்திராவின் அல்லூரி சீதாராம் ராஜு, கோண்டு பிரதேச ராணி துர்காவதி ஆகியோரை உதாரணமாகக் குறிப்பிட்டார். இத்தகைய ஆளுமைகள் புறக்கணிக்கப்படுவது குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர், அமிர்த காலத்தின் போது இந்த மாவீரர்களை நினைவுகூர்வது திருப்தியளிப்பதாகத் தெரிவித்தார்.

 

ஜார்கண்ட் உடனான தமது தனிப்பட்ட தொடர்பைப்  பற்றி பேசிய பிரதமர், ஆயுஷ்மான் திட்டம் ஜார்க்கண்டில் இருந்து தொடங்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தார். ஜார்க்கண்டில் இருந்து இரண்டு வரலாற்று சிறப்புமிக்க முயற்சிகள் இன்று தொடங்கப்படுகின்றன என்று பிரதமர் கூறினார். முதலாவதாக  வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம் என்று  அவர் கூறினார். இது அரசுத் திட்டங்கள்  சிறப்பாக செயல்படுத்தப்பட்டு முழுமையடைவதை உறுதி செய்வதற்கான இயக்கமாக அமையம் என்று அவர் தெரிவித்தார்.  இரண்டாவதாக,   அதிகம் பாதிக்கப்படக்கூடிய  பழங்குடியின குழுக்களின் மேம்பாட்டுக்கான இயக்கம் என்று அவர் தெரிவித்தார்.  இது அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியினரைப் பாதுகாத்து அவர்களை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

வளர்ந்த இந்தியாவுக்கான நான்கு தூண்களாக மகளிர் சக்தி, விவசாயிகள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள்  இருப்பதாக அவர் கூறினார். அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்தத் தூண்களை வலுப்படுத்துவதற்கான நமது திறனைப் பொறுத்தே இந்தியாவில் வளர்ச்சியின் அளவு அமையும் என்று அவர் தெரிவித்தார். தற்போதைய அரசு கடந்த 9 ஆண்டுகளில் நான்கு இந்த தூண்களை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சி மற்றும் பணிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

 

13 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் இருந்து மீட்டது அரசின்  மகத்தான சாதனை என்று பிரதமர் கூறினார். இந்த அரசு 2014- ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது சேவைக் காலம் தொடங்கியது என்று கூறிய அவர், நாட்டின் பெரும்பாலான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டினார். முந்தையை அரசுகளின் அலட்சியமான அணுகுமுறையால் ஏழைகள் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துள்ளனர் என்று அவர் கூறினார். தற்போதைய அரசு சேவை மனப்பான்மையுடன் பணிகளைத் தொடங்கியது என்று குறிப்பிட்ட அவர், ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களின் வீடுகளுக்கே சென்று சேவைகளை வழங்குவது அரசின் முன்னுரிமையாக உள்ளது என்பதை எடுத்துரைத்தார். இந்த மாற்றத்திற்கு அரசின் அணுகுமுறையே காரணம் என்று அவர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை கிராமங்களில் தூய்மையின் அளவு வெறும் 40 சதவீதமாக மட்டுமே இருந்ததாகவும், இன்று நாடு தூய்மையை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 2014-க்குப் பிந்தைய பிற சாதனைகளை எடுத்துரைத்தப் பிரதமர், 50-55 சதவீத கிராமங்களில் இருந்து இன்று சுமார் 100 சதவீதமாக சமையல் எரிவாயு இணைப்புகள் இருப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டார். இந்த  நரேந்திர மோடி மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தமது அக்கறையை வெளிப்படுத்திய பிரதமர், அவர்கள் இந்த அரசின் முன்னுரிமையாக மாறியுள்ளனர் என்று கூறினார். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பகவான் பிர்சா முண்டாவின் இந்த பூமிக்குத் தாம் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்த அரசு கவனம் செலுத்தியுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். இருண்ட யுகத்தில் இருந்த 18,000 கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துக்காட்டினார். செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பின்தங்கிய மாவட்டங்களாக முத்திரை குத்தப்பட்ட 110 மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை வசதிக்கான முக்கிய அம்சங்கள் தொடர்பான திட்டங்கள் அதிகம் செயல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். முன்னேற  விருப்பமுள்ள மாவட்டங்களுக்கான திட்டம் அந்த மாவட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தது என அவர் கூறினார். இந்த மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். முன்னேற விரும்பும் மாவட்டங்களின் திட்டத்தின் வெற்றி, முன்னேற விரும்பும் வட்டாரங்கள்  திட்டமாக மேலும் விரிவுபடுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக பாகுபாடுகள் இல்லாத நிலை ஏற்படும்போதுதான், உண்மையான மதச்சார்பின்மை ஏற்படும்   என்று மீண்டும் கூறிய பிரதமர், அனைத்து அரசுத் திட்டங்களின் பலன்கள் அனைவரையும் சென்றடையும் போது மட்டுமே சமூக நீதி உறுதி செய்யப்படும் என்று கூறினார். பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியான இன்று தொடங்கி வரும் ஜனவரி 26-ம் தேதி வரை தொடரும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தின் ('விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா') உத்வேகம் இதுதான் என்று கூறினார். இந்த பயணத்தில், அரசு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றடைந்து மக்களை அரசுத் திட்டங்களின் பயனாளியாக மாற்றும் என்று பிரதமர் கூறினார்.

 

2018-ம் ஆண்டில் கிராம சுயராஜ்ய இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், அதில் அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு முக்கிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நினைவுகூர்ந்தார்.  வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணமும் அதே அளவு வெற்றியடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "ஒவ்வொரு ஏழைக்கும் இலவச குடும்ப அட்டை, உஜ்வாலா திட்டத்திலிருந்து எரிவாயு இணைப்பு, வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், குடிநீர் இணைப்பு, ஆயுஷ்மான் அட்டை மற்றும் பாதுகாப்பான வீடு ஆகியவை கிடைக்கும் நாளை எதிர்பார்த்து செயல்படுவதாக அவர் கூறினார். இளைஞர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க முத்ரா திட்டத்தைப்  பயன்படுத்த வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டார்.  வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம் இந்தியாவின் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த நரேந்திர மோடியின் உத்தரவாதமாகும் என்று அவர் கூறினார்.

பழங்குடியின சமூகத்திற்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி, தனியாக நிதியை ஒதுக்கியது வாஜ்பாய் அரசுதான் என்று அவர் குறிப்பிட்டார். பழங்குடியினர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு முன்பை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது  என்று அவர் கூறினார். அதிகம் பாதிக்கப்படக்கூடிய, பழங்குடியின குழுக்களுக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பழங்குடியினரை அரசு நேரடியாக சென்றடையும் என்று பிரதமர் கூறினார். பழங்குடியினர் பெரும்பாலோர் இன்னும் காடுகளில் வசிக்கின்றனர் என்று கூறிய பிரதமர், நாட்டில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள்தொகை கொண்ட 75 பழங்குடி சமூகங்கள் மற்றும் பழங்குடிகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த மாபெரும் இயக்கத்திற்காக  மத்திய அரசு ரூ. 24,000 கோடி செலவிடப் போகிறது என்று அவர் தெரிவித்தார்.

பழங்குடி சமூகங்களின் வளர்ச்சியில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்ட குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பதற்கான உத்வேகமூட்டும் அடையாளம் தான் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு என்று அவர் கூறினார். அண்மைக் காலங்களில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிரதமர் விவரித்தார். 70 சதவீத முத்ரா திட்டப்  பயனாளிகள் பெண்கள் தான் என்று அவர் குறிப்பிட்டார். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா போன்றவை பெண்களுக்கு அதிகாரமளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.  வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் மகளிர் சக்தி முக்கியப் பங்கு வகிக்கும்" என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு தனிநபரின் திறனையும் பயன்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். கைவினை கலைஞர்களுக்கு நவீன பயிற்சி மற்றும் கருவிகளை இந்த திட்டம் வழங்கும் என்று அவர் கூறினார். இந்த திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவித் திட்டத்தின்  15 வது தவணைத் தொகை இன்று விடுவிக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசிய பிரதமர், இதுவரை மொத்தம் ரூ. 2,75,000 கோடிக்கு மேல் விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர்  தெரிவித்தார். கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களுக்கான வேளாண் கடன் அட்டை, கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போட ரூ .15,000 கோடி ஒதுக்கீடு, மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மத்ஸ்ய சம்பதா திட்டம் உள்ளிட்டவற்றையும் அவர் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதையும், சிறுதானியங்களை வெளிநாட்டு சந்தைகளில் பிரபலப்படுத்துவதற்கான அரசின் முன்முயற்சிகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் வன்முறை குறைந்ததற்கு அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியே காரணம் என்று பிரதமர் பாராட்டினார். ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி விரைவில் 25 ஆண்டுகள் நிறைவடையும் என்று கூறிய பிரதமர், ஜார்க்கண்டில் 25 திட்டங்களை நிறைவேற்றும் இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும், வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார். கல்வியை விரிவுபடுத்துவதற்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய பிரதமர் மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க உதவும் நவீன தேசிய கல்விக் கொள்கையை அரசு உருவாக்கியிருப்பதை எடுத்துரைத்தார். கடந்த 9 ஆண்டுகளில், நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 5,500 புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களுடன் இத்துறையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ளதை அவர் குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் மகளிர் சக்தி, இளைஞர் சக்தி, விவசாயிகள் சக்தி, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சக்தி ஆகியவை இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்றும், இந்தியாவை வளர்ந்த இந்தியாவாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

 

இந்நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன், மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம்

அரசுத்திட்டங்களின் பயன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம், அரசின் முதன்மைத் திட்டங்கள் முழுமையாக மற்றும்  சிறப்பாக நிறைவேற்றப்படுவது பிரதமரின் தொடர்ச்சியான முன் முயற்சியாக உள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக, பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பிரதமர் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கிவைத்துள்ளார்.

சுகாதார வசதிகள், அத்தியாவசிய நிதி சேவைகள், மின்சார இணைப்புகள், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான அணுகல், ஏழைகளுக்கான வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு, சரியான ஊட்டச்சத்து, தூய்மையான குடிநீர் போன்ற நலத்திட்டங்களின் நன்மைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தப்பயணத்தின் நோக்கமாகும். இந்த யாத்திரை தொடக்க கட்டத்தில் கணிசமான பழங்குடி மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் தொடங்கி 2024 ஜனவரி 25ம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும்.

 

அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கம்

இந்த நிகழ்ச்சியின் போது, அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 220 மாவட்டங்களில் உள்ள 22,544 கிராமங்களில் 75 குழுக்களைச் சேர்ந்த சுமார் 28 லட்சம் பழங்குடியின மக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.

இந்த பழங்குடியின மக்கள் பெரும்பாலும் வனப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களின் மேம்பாட்டக்காக  சுமார் 24,000 கோடி ரூபாய் செலவில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.  குடியிருப்புகளுக்கு சாலை வசதி, தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பான வீட்டுவசதி, தூய்மையான  குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், மேம்பட்ட கல்வி போன்ற அடிப்படை வசதிகளை வழங்க இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவித் திட்டத்தின் 15-வது தவணைத் தொகை விடுவிப்பு மற்றும் பிற திட்டங்கள்.

விவசாயிகளின் நலனில் பிரதமரின் அர்ப்பணிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 15- வது தவணைத் தொகையாக 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு சுமார் ரூ .18,000 கோடி இன்று விடுவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 14 தவணைகளில், 2.62 லட்சம் கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

ரயில், சாலை, கல்வி, நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல துறைகளில் சுமார் ரூ.7200 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் ஜார்கண்டில் இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi