தில்லி செங்கோட்டையில் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி 2023 ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை' பிரதமர் திறந்து வைத்தார். நினைவு தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார்
பின்னர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், செங்கோட்டையின் உலகப் பாரம்பரிய தளத்திற்கு அனைவரையும் வரவேற்பதாக கூறினார். மேலும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பல தலைமுறைகள் கடந்துவிட்ட போதிலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த சின்னங்கள் உள்ளன, அவை நாட்டின் கடந்த காலத்தையும் அதன் வேர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றன என்று பிரதமர் கூறினார். இந்த சின்னங்களுடனான தொடர்பை உருவாக்குவதில் கலை, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையின் பங்கை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் வளமான கட்டிடக்கலை பாரம்பரியத்தின் ஒரு பார்வையை வழங்கும் சின்னங்களின் பொக்கிஷமாக தலைநகர் தில்லியை குறிப்பிட்ட பிரதமர், தில்லியில் உள்ள இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி அமைப்பு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார். கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படைப்புகளைப் பாராட்டிய அவர், இது வண்ணங்கள், படைப்பாற்றல், கலாச்சாரம், சமூக இணைப்பு ஆகியவற்றின் கலவையாகும் என்று தெரிவித்தார். இந்த வெற்றிகரமான அமைப்புக்காக கலாச்சார அமைச்சகம், அதன் அலுவலர்கள், பங்கேற்கும் நாடுகள் மற்றும் அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். "புத்தகங்கள் உலகின் ஜன்னல்களாக செயல்படுகின்றன என்றும், கலை என்பது மனித மனதின் மகத்தான பயணம்", என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
இந்தியாவின் கடந்த காலத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அதன் பொருளாதார செழிப்பு குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டபோது, அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இன்றும் உலகின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது என்று குறிப்பிட்டார். கலை மற்றும் கட்டிடக்கலைத் துறைகள் தொடர்பான எந்தவொரு பணியிலும் நாட்டின் பெருமை உணர்வு ஊட்டப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட அவர், ஒருவரின் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதன் மூலம் முன்னேறுவதற்கான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். கேதார்நாத் மற்றும் காசியின் கலாச்சார மையங்களை மேம்படுத்துவதற்கும், மகாகால் லோக்கின் மறுவடிவமைப்புக்கும் திரு மோடி எடுத்துக்காட்டுகளை வழங்கினார், தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நோக்கி அமிர்தகாலத்தில் புதிய பரிமாணங்களை உருவாக்குவதில் அரசின் முயற்சிகளை சுட்டிக்காட்டினார். இந்த அமைப்பு ஒரு புதிய படியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நவீன அமைப்புகளுடன் இந்தியாவில் உலகளாவிய கலாச்சார முன்முயற்சிகளை நிறுவனமயமாக்கும் நோக்கத்துடன் 2023 மே மாதத்தில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி, ஆகஸ்ட் மாதத்தில் நூலகங்களின் திருவிழா ஆகியவற்றை ஏற்பாடு செய்ததை எடுத்துரைத்தார். வெனிஸ், சாவ் பாலோ, சிங்கப்பூர், சிட்னி, ஷார்ஜா பினாலேஸ் போன்ற உலகளாவிய முன்முயற்சிகள் மற்றும் துபாய், லண்டன் கலை கண்காட்சிகள் போன்ற உலகளாவிய முன்முயற்சிகளுடன் இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி போன்ற இந்திய கலாச்சார முன்முயற்சிகளுக்கு ஒரு பெயரை உருவாக்க பிரதமர் மோடி தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
தொழில்நுட்பத்தை பெரிதும் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் ஒரு வாழ்க்கை முறையை வளர்ப்பது கலை மற்றும் கலாச்சாரம் என்பதால் இதுபோன்ற அமைப்புகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். "மனித மனதை ஆத்மாவுடன் இணைப்பதற்கும், அதன் திறனை அங்கீகரிப்பதற்கும் கலை மற்றும் கலாச்சாரம் இன்றியமையாதது" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை திறந்து வைப்பது குறித்து பேசிய பிரதமர், இது இந்தியாவின் தனித்துவமான மற்றும் அரிய கைவினைப்பொருட்களை ஊக்குவிப்பதற்கான ஒரு தளத்தை வழங்கும் என்றும், கைவினைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை ஒருங்கிணைத்து சந்தைக்கு ஏற்ப புதுமைகளை புகுத்த உதவும் என்றும் கூறினார். "கைவினைஞர்கள் வடிவமைப்பு மேம்பாடு பற்றிய அறிவைப் பெறுவார்கள் என்றும், டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் நிபுணத்துவம் பெறுவார்கள்" என்றும் கூறிய பிரதமர், நவீன அறிவு மற்றும் வளங்களுடன், இந்திய கைவினைஞர்கள் உலகில் தங்கள் முத்திரையை பதிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தில்லி, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், வாரணாசி ஆகிய 5 நகரங்களில் கலாச்சார இடங்களை உருவாக்குவது ஒரு வரலாற்று நடவடிக்கையாகும் என்று பிரதமர் கூறினார். இந்த மையங்கள் உள்ளூர் கலையை வளப்படுத்த புதுமையான யோசனைகளை முன்வைக்கும் என்று அவர் தெரிவித்தார். அடுத்த 7 நாட்களுக்கு 7 முக்கிய கருப்பொருள்களைக் குறிப்பிட்ட பிரதமர், 'தேசாஜ் பாரத் வடிவமைப்பு: உள்நாட்டு வடிவமைப்புகள்' மற்றும் 'சமத்வா: கட்டமைக்கப்பட்டதை வடிவமைத்தல்' போன்ற கருப்பொருள்களை ஒரு பணியாக முன்னெடுத்துச் செல்லுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். உள்நாட்டு வடிவமைப்பை மேலும் செழுமைப்படுத்த இளைஞர்களுக்கான ஆய்வு மற்றும் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கட்டிடக்கலைத் துறையில் பெண்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அவர், இந்தத் துறையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல பெண்களின் கற்பனை மற்றும் படைப்பாற்றல் மீது நம்பிக்கை தெரிவித்தார்.
"கலை, சுவை மற்றும் வண்ணங்கள் இந்தியாவில் வாழ்க்கைக்கு ஒத்ததாகக் கருதப்படுகின்றன" என்று பிரதமர் குறிப்பிட்டார். இலக்கியம், இசை, கலை ஆகியவையே மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடாக செயல்படுகின்றன என்ற முன்னோர்களின் செய்தியை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார். "கலை, இலக்கியம், இசை ஆகியவை மனித வாழ்க்கைக்கு சுவையை சேர்க்கின்றன மற்றும் அதை சிறப்பாக்குகின்றன", என்று அவர் தெரிவித்தார். 64 கலைகள், இசைக் கருவிகளின் கீழ் நீர் அலைகளை அடிப்படையாகக் கொண்ட 'உடக் வாத்தியம்' அல்லது இசைக்கருவிகள், பாடல்களுக்கு நடனம் மற்றும் பாடும் கலைகள், வாசனை திரவியங்கள் அல்லது வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கான 'காந்த யுக்தி' கலை, பற்சிப்பி மற்றும் செதுக்கலுக்கான 'தட்சகர்மா' கலை போன்ற குறிப்பிட்ட கலைகளை பிரதமர் குறிப்பிட்டார்.
எம்பிராய்டரி மற்றும் நெசவில் 'சுசிவன் கர்மானி' கலை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பழங்கால ஆடைகளின் திறமை மற்றும் கைவினைத்திறனையும் அவர் குறிப்பிட்டார். வாள்கள், கேடயங்கள் மற்றும் ஈட்டிகள் போன்ற போர் உபகரணங்களில் அற்புதமான கலைப்படைப்புகள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
காசியின் அழியாத கலாச்சாரத்தை எடுத்துரைத்த பிரதமர், இலக்கியம், இசை மற்றும் கலைகளின் அழியாத ஓட்டத்தின் பூமியாக இந்த நகரம் திகழ்கிறது என்று கூறினார். "காசி தனது கலையில், ஆன்மீக ரீதியாக கலைகளின் தோற்றுவாய் என்று கருதப்படும் சிவபெருமானை நிறுவியுள்ளது" என்று அவர் மேலும் கூறினார். "கலை, கைவினை மற்றும் கலாச்சாரம் ஆகியவை மனித நாகரிகத்திற்கு ஆற்றல் ஓட்டம் போன்றது. ஆற்றல் அழியாதது, உணர்வு அழியாதது. எனவே காசியும் அழியாதது" என்றார். கங்கைக் கரையில் அமைந்துள்ள பல நகரங்கள் மற்றும் பகுதிகளைப் பார்வையிடுவதற்காக காசியிலிருந்து அஸ்ஸாமுக்கு பயணிகளை அழைத்துச் சென்ற கங்கா விலாஸ் கப்பல்களை பிரதமர் எடுத்துரைத்தார்.
"கலை வடிவம் எதுவாக இருந்தாலும், அது இயற்கைக்கு நெருக்கமாகப் இருக்கிறது என்றும், எனவே, கலை இயற்கைக்கு ஆதரவானது, சுற்றுச்சூழலுக்கு ஆதரவானது மற்றும் காலநிலைக்கு ஆதரவானது" என்றும் பிரதமர் தெரிவித்தார். உலக நாடுகளின் ஆற்றங்கரை கலாச்சாரத்தை சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நதிக்கரைகளில் படித்துறைகளின் பாரம்பரியத்தை ஒப்பிட்டார். இந்தியாவின் பல திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் இந்த படித்துறைகளுடன் தொடர்புடையவை என்று அவர் கூறினார். இதேபோல், நமது நாட்டில் கிணறுகள், குளங்கள் மற்றும் படிக்கிணறுகளின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைத்த பிரதமர், குஜராத், ராஜஸ்தான் மற்றும் தில்லியின் பல இடங்களில் ராணி படிக்கட்டுகளை எடுத்துக்காட்டாகக் கூறினார். இந்த படிக்கட்டு கிணறுகள் ,இந்தியாவின் கோட்டைகளின் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலையை பிரதமர் பாராட்டினார். சில நாட்களுக்கு முன்பு சிந்துதுர்க் கோட்டைக்கு தான் சென்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். ஜெய்சால்மரில் உள்ள பட்வா கி ஹவேலியை திரு. மோடி குறிப்பிட்டார். இது இயற்கையான குளிர்சாதனத்தைப் போல செயல்படும் வகையில் கட்டப்பட்ட ஐந்து மாளிகைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார். "இந்த கட்டிடக்கலை அனைத்தும் நீண்ட காலம் நீடித்தவை மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை" என்று கூறிய திரு மோடி, இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்திலிருந்து உலகம் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் நிறைய உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.
"கலை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவை மனித நாகரிகத்திற்கான பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் ஆதாரங்களாக உள்ளன" என்று திரு மோடி மேலும் கூறினார். இந்தியா உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும், பன்முகத்தன்மை நம்மை ஒன்றிணைக்கிறது என்றும் அவர் கூறினார். பன்முகத்தன்மையின் மூலாதாரத்தை ஜனநாயகத்தின் தாய் என்று இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை அவர் பாராட்டினார். சமூகத்தில் சிந்தனைச் சுதந்திரமும், அவரவர் வழியில் செயல்படுவதற்கான சுதந்திரமும் இருக்கும்போதுதான் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம் தழைத்தோங்கும் என்று அவர் குறிப்பிட்டார். "விவாதம் மற்றும் உரையாடலின் இந்த பாரம்பரியத்தால், பன்முகத்தன்மை தானாகவே வளர்கிறது. அனைத்து வகையான பன்முகத்தன்மையையும் நாம் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம்", என்று கூறிய பிரதமர், இந்த பன்முகத்தன்மையை உலகிற்குக் காட்டுவதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்ற ஜி20 நிகழ்வை எடுத்துரைத்தார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் போது, அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கான சிறந்த எதிர்காலத்தைக் காண முடியும் என்று பிரதமர் கூறினார்.
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முழு உலகின் முன்னேற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 'தற்சார்பு இந்தியா' என்ற அதன் தொலைநோக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டுவருகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இதேபோல், கலை மற்றும் கட்டிடக்கலைத் துறையில் இந்தியாவின் மறுமலர்ச்சி நாட்டின் கலாச்சார மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் என்று அவர் தெரிவித்தார். யோகா ஆயுர்வேதத்தின் பாரம்பரியத்தையும் திரு மோடி குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் கலாச்சார மதிப்புகளை குறிபிப்பிட்டார். நிலையான வாழ்க்கை முறைக்கான சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறைக்கான லைஃப் இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
தமது உரையின் நிறைவாக பேசிய பிரதமர், நாகரிகங்களின் செழிப்புக்கு தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். மேலும் பங்கேற்கும் நாடுகளுக்கு அவர்களின் கூட்டாண்மைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பல நாடுகள் ஒன்றிணையும் என்றும், இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி இந்த திசையில் ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர்கள் திரு. ஜி. கிஷன் ரெட்டி, திரு அர்ஜுன் ராம் மேக்வால், திருமதி மீனாட்சி லேகி மற்றும் கட்டிடக்கலைஞர்களின் முதன்மை கட்டிடக் கலைஞர் திருமதி டயானா கெல்லாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
India's vibrant culture and our ancient heritage attract tourists from all over the world. pic.twitter.com/5H0J5MXMws
— PMO India (@PMOIndia) December 8, 2023
आज art और architecture से जुड़े हर क्षेत्र में आत्मगौरव की भावना से काम हो रहा है। pic.twitter.com/OAr4IQYY5G
— PMO India (@PMOIndia) December 8, 2023
'Aatmanirbhar Bharat Centre for Design' will provide a platform to promote the unique and rare crafts of India. pic.twitter.com/AQrVZv6wEy
— PMO India (@PMOIndia) December 8, 2023
The cultural spaces to be built in Delhi, Kolkata, Mumbai, Ahmedabad and Varanasi will enrich these cities culturally. pic.twitter.com/NSHS4WO0eM
— PMO India (@PMOIndia) December 8, 2023
भारत में कला को, रस और रंगों को जीवन का पर्याय, synonym of life माना गया है: PM @narendramodi pic.twitter.com/gE0ID0D62S
— PMO India (@PMOIndia) December 8, 2023
We are the most diverse nation in the world, but that diversity also binds us together: PM @narendramodi pic.twitter.com/R493bkdRgS
— PMO India (@PMOIndia) December 8, 2023