பிரதமர் திரு நரேந்திர மோடி இன்வெஸ்ட் கர்நாடகா 2022 என்ற மாநிலத்திற்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நேற்று கடைபிடிக்கப்பட்ட ராஜ்யோத்சவாவையொட்டி கர்நாடக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம், இயற்கை மற்றும் கலாச்சாரம், அழகான கட்டடக்கலை மற்றும் துடிப்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கர்நாடகா ஒருங்கிணைப்பாக திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
திறமை அல்லது தொழில்நுட்பம் என்றதும் ‘பிராண்ட் பெங்களூரு’ முன்னோடியாக திகழ்வது நினைவுக்கு வருகிறது என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்திற்கே தெரிந்தது என்று கூறினார்.
கர்நாடகாவில் முதலீட்டாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இது போட்டி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சிக்கு சரியான உதாரணம் என்று குறிப்பிட்டார்.
உற்பத்தி மற்றும் தயாரிப்பு பெரும்பாலும் மாநில அரசின் கொள்கைகள் மற்றும் கட்டுபாட்டைச் சார்ந்தது என்று அவர் தெரிவித்தார். இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மாநிலங்கள், குறிப்பிட்ட துறைகளை இலக்காக வைத்து மற்ற நாடுகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். இந்த மாநாட்டின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளில், கூட்டாண்மை திட்டமிடப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் இந்த மாநாடு மூலம் நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
21-ம் நூற்றாண்டில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மட்டுமே முன்னோக்கிச் செல்வதாக பிரதமர் கூறினார். கடந்த ஆண்டு சாதனை அளவாக 84 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு கிடைத்ததாக குறிப்பிட்டார். இந்தியா பற்றி சர்வதேச அளவிலான பார்வை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த நிச்சயமற்ற தருணத்தில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் பற்றி உலகம் ஏற்றுக்கொண்டதாக கூறினார். இக்கட்டான சூழ்நிலையில் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செல்வதாகவும், உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுமாறு மற்ற நாடுகளை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். மருந்து விநியோக கட்டமைப்பில் தடைகள் ஏற்பட்ட போது, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை விநியோகம் செய்வது குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா உறுதி அளிக்க முடிந்ததாக குறிப்பிட்டார். சந்தைப்படுத்துதலில் இருந்து சிரமத்திற்கிடையே நம் நாட்டு மக்களின் ஆர்வத்தினால் உள்நாட்டு சந்தைகள் வலுவாக இருந்ததாக கூறினார். சர்வதேச அளவில் நெருக்கடி நிலவிய போதிலும் இந்தியா சிறப்பாக திகழ்கிறது என்று நிபுணர்கள், பகுப்பாய்வாளர்கள், பொருளாதார நிபுணர்களும் பாராட்டியதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். நாள்தோறும் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நம் அடிப்படையை வலுப்படுத்த நாம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கொள்கை மற்றும் அமலாக்கம் தொடர்பான விவகாரத்தில் நாட்டிற்கு சிரமம் ஏற்பட்டபோது கடந்த 9-10 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை மாற்றங்கள் குறித்து அவர் விவரித்தார். முதலீட்டாளர்களின் இக்கட்டான சூழ்நிலைக்கு பதில் முதலீட்டுக்கான சிவப்பு கம்பள சூழலை நாம் உருவாக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். சிக்கலான புதிய சட்டங்களுக்கு பதில் அதை நாம் சீர்படுத்தியுள்ளதாக கூறினார்.
திடமான சீர்திருத்தங்கள், பெரிய உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த திறமை ஆகியவற்றுடன் மட்டுமே புதிய இந்தியாவை கட்டமைப்பது சாத்தியம் என்று பிரதமர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இன்று திடமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி, நொடித்தல் மற்றும் திவால் சட்டம், வங்கி சீர்திருத்தங்கள், யுபிஐ, காலாவதியான 1,500 சட்டங்கள் மற்றும் தேவையற்ற 40,000 விதிகள் நீக்கப்பட்டது குறித்து அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு நிறுவனச் சட்டவிதிகளின் குற்றம் நீக்கம், முகமறியா மதிப்பீடு, அந்நிய நேரடி முதலீட்டிற்கான புதிய வழிகள், ட்ரோன் புவி மற்றும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை விதிமுறைகளில் தாராளமயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக முன் எப்போதும் இல்லாத வலிமையைப் பெற்றிருப்பதாக கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் செயல்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாகவும் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் விரைவு சக்தி தேசிய திட்டத்தின் நோக்கம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். எதிர்கால உள்கட்டமைப்புக்கான திட்டமிடுதலுடன் தற்போதுள்ள உள்கட்டமைப்புக்காகவும் திட்டமிடப்படுவதாகவும் அதற்காக சிறந்த வழித்தடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் கடைக்கோடி வரை உலகத்தரம் வாய்ந்த சேவையை அளிக்க வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார். இப்பயணத்தில் இளைஞர்கள் மூலமான முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இளைய சக்திகள் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு துறையும் முன்னேற்றம் அடைவதாக கூறினார்.
முதலீடு மற்றும் மனிதவளத்தில் கவனம் செலுத்துவதன் மூலமே வளர்ச்சிக்கான நோக்கங்களை அடையமுடியும் என்று பிரதமர் கூறினார். இதே சிந்தனையுடன் முன்னோக்கிச் செல்லும் வகையில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். உற்பத்தியை அதிகரிப்பதுடன் மனித வளத்தையும் மேம்படுத்துவது நமது நோக்கம் என்று கூறினார். சுகாதார காப்பீட்டுத் திட்டங்களுடன், உற்பத்திக்கான ஊக்கத்தொகை, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களுடன் எளிதாக வர்த்தகம் புரிதல், கழிப்பறைகள் மற்றும் தூய்மையான குடிநீர் வசதிகளுடன் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு, நவீன பள்ளிகளுடன் எதிர்கால உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் குறித்து பிரதமர் விவாதித்தார். நாட்டின் சுற்றுச் சூழலுக்கு உகந்த வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட பிரதமர், பசுமை வளர்ச்சி மற்றும் நீடித்த எரிசக்தியையொட்டிய நமது முன்னெடுப்புகள் அதிக அளவிலான முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக கூறினார். இந்தப் பூமிக்கான கடனையும் தங்கள் பொறுப்பையும் நிறைவேற்ற விரும்புவோர், இந்தியாவை நம்பிக்கையுடன் நோக்கித் திரும்புவதாக தெரிவித்தார்.
கர்நாடகாவின் இரட்டை எந்திர அரசின் சக்தியின் பிரதிபலிப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர், இம்மாநிலம் பல்வேறு துறைகளில், விரைவாக வளர்ச்சி அடைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறினார். எளிதாக வர்த்தகம் புரிய உகந்த மாநிலங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா தொடர்ந்து முன்னணி வகித்து வருவதை அவர் உதாரணமாகத் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள 500 செல்வ வளம் மிக்க நிறுவனங்களில் 400 நிறுவனங்களும், 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களில் 40-க்கும் மேற்பட்டவையும் கர்நாடகாவில் உள்ளதாக அவர் கூறினார். உலகில் மிகப் பெரிய தொழில்நுட்பத்திற்கான கேந்திரமாக கர்நாடகா குறிப்பிடப்படுகிறது என்று தெரிவித்த பிரதமர், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், ஃபின்டெக், உயிரித்தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் மற்றும் நீடித்த எரிசக்தி ஆகியவற்றுக்கான தாயகமாக அது திகழ்கிறது என்று கூறினார். ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுவதாக அவர் தொடர்ந்து பேசினார். கர்நாடகாவின் பல்வேறு வளர்ச்சி குறித்த அளவுகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களின் சவாலாக விளங்குவதோடு சில நாடுகளுக்கும் அது சவாலாக திகழ்கிறது என்று கூறினார். உற்பத்தித் துறையில் இந்தியா புதிய கட்டத்தை அடைவதாக பிரதமர் தெரிவித்தார். தேசிய செமிகண்டக்டர் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.
முதலீட்டாளருடனான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை குறித்து குறிப்பிட்ட பிரதமர், நடுத்தர மற்றும் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் முதலீட்டாளர் உள்நோக்கிச் செல்வதாக பிரதமர் தெரிவித்தார். நீண்ட காலத்திட்டத்திற்கு இந்தியா உத்வேகம் அளிப்பதாகவும் அவர் கூறினார். நானோ யூரியா, ஹைட்ரஜன் எரிசக்தி, பசுமை அமோனியா, நிலக்கரி வாயு நீக்கம் மற்றும் விண்வெளி செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை உதராணமாகக் குறிப்பிட்ட பிரதமர் வளர்ச்சி என்ற மந்திரத்துடன் உலகில் இந்தியா முன்னேறிச் செல்வதாக தெரிவித்தார். இந்த அமிர்தகாலம் மற்றும் விடுதலைப் பெருவிழாவிலும் நாட்டுமக்கள் புதிய இந்தியாவை கட்டமைக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா திகழவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், உள்ளடக்கிய, ஜனநாயக மற்றும் வலிமையான இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று கூறினார். இதனால் முதலீடும் இந்தியாவின் உத்வேகமும் ஒன்றிணைவது மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் முதலீடு என்பது உள்ளடக்கத்தில் முதலீடு, ஜனநாயகத்தில் முதலீடு, உலகத்திற்கான முதலீடு மற்றும் சிறந்த தூய்மையான மற்றும் பாதுகாப்பான புவிக்கு முதலீடு என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
जब भी Talent और Technology की बात आती है, तो दिमाग में जो नाम सबसे पहले आता है, वो है Brand Bengaluru. pic.twitter.com/r3fkKvVYs1
— PMO India (@PMOIndia) November 2, 2022
Despite global uncertainties, India is growing rapidly. pic.twitter.com/iaxKUhcOHQ
— PMO India (@PMOIndia) November 2, 2022
Global experts have hailed India as a bright spot. pic.twitter.com/NpNc0IUAOP
— PMO India (@PMOIndia) November 2, 2022
India is rolling out red carpet for the investors. pic.twitter.com/ZO3fzJAZiS
— PMO India (@PMOIndia) November 2, 2022
New India is focusing on -
— PMO India (@PMOIndia) November 2, 2022
Bold reforms,
Big infrastructure,
Best talent. pic.twitter.com/43iU4dUvEy
PM-GatiShakti National Master Plan is aimed at integrated infrastructure development. pic.twitter.com/rqhsyDvWYk
— PMO India (@PMOIndia) November 2, 2022
Today, every sector in India, is moving ahead with the power of youth. pic.twitter.com/SAs84qD00X
— PMO India (@PMOIndia) November 2, 2022
India is setting an example for the world when it comes to renewable energy. pic.twitter.com/017etyeHoV
— PMO India (@PMOIndia) November 2, 2022
Investment in India means - Investment in Inclusion, Investment in Democracy. pic.twitter.com/66lqECQ57J
— PMO India (@PMOIndia) November 2, 2022