Launches various new initiatives under e-court project
Pays tributes to the victims of 26/11 terrorist attack
“India is moving ahead with force and taking full pride in its diversity”
“‘We the people’ in the Preamble is a call, an oath and a trust”
“In the modern time, the Constitution has embraced all the cultural and moral emotions of the nation”
“Identity of India as the mother of democracy needs to be further strengthened”
“Azadi ka Amrit Kaal is ‘Kartavya Kaal’ for the nation”
“Be it people or institutions, our responsibilities are our first priority”
“Promote the prestige and reputation of India in the world as a team during G20 Presidency”
“Spirit of our constitution is youth-centric”
“We should talk more about the contribution of the women members of the Constituent Assembly”

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசியலமைப்புச் சட்டதினவிழாவில்  பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 1949ஆம் ஆண்டு அரசியலமைப்பு சபையால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26ம் தேசிய அரசியலமைப்புச் சட்ட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இ-நீதிமன்ற திட்டங்களான மெய்நிகர் நீதி நடைமுறை வசதி,   ஜஸ்ட்ஐஎஸ் மொபைல் ஆப் 2.0 (JustIS mobile App 2.0), டிஜிட்டல் நீதிமன்றம் மற்றும் எஸ்3 டபிள்யூஏஏஎஸ் இணையதளங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

விழாவில் பேசிய பிரதமர், அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்ட தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். 1949ஆம் ஆண்டு இதே நாளில் சுதந்திர இந்தியா தமது புதிய எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்தது என்றார். விடுதலையின் அமிருதப்பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், நாம் அரசியலமைப்புச் சட்ட தினத்தைக் கொண்டாடுவது, முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாஹேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த நேரத்தில் மரியாதை செலுத்துகிறேன் என்றார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விரிவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சிப் பாதையில் கடந்த 70 ஆண்டுகளாக, சட்டப்பேரவை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையைச் சேர்ந்த எண்ணிலடங்கா தனிநபர்களின் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். அரசியலமைப்புச் சட்ட தினத்தை நாடு கொண்டாடும் இவ்வேளையில், மனிதாபிமானத்திற்கு எதிரானவர்களால் நடத்தப்பட்ட மாபெரும் தீவிரவாதத் தாக்குதலை இந்தியா எதிர்கொண்ட, இந்திய வரலாற்றில் கருப்புத் தினமான,  நவம்பர் 26ம் தேதியையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  பேரழிவை ஏற்படுத்திய மும்பை தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு திரு  மோடி மரியாதை செலுத்தினார்.

தற்போதைய சர்வதேச சூழ்நிலையிலும், பொருளாதார வளர்ச்சியில் பீடு நடைபோடும் இந்தியாவை, சர்வதேச நாடுகள் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசியல் ஸ்திரத்தன்மைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முறியடித்து, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமிதப் பாதையில், இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக அவர் கூறினார். இந்த வெற்றி அரசியலமைப்புச் சட்டத்தையே சாரும். அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று வார்த்தைகளான மக்களுக்காக நாம் என்ற அழைப்பே மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் உறுதிமொழியை வெளிப்படுத்துகிறது என்பதை பிரதமர் மேற்கோள் காட்டினார்.  அரசியலமைப்புச் சட்டத்தின் சாராம்சமே, இந்தியாவின் சாராம்சம். அது என்னவென்றால், இந்தியா தான் உலக நாடுகளுக்கு ஜனநாயகத்தின் தாயாக உள்ளது என்பது என தெரிவித்தார்.  நவீன காலத்தில், தேசத்தின் அனைத்து கலாச்சாரம் மற்றும் நீதி உணர்வுகளை உள்ளடக்கியதாக அரசியலமைச்சட்டம் மாறியுள்ளது.

ஜனநாயகத்தின் தாயாக திகழும் இந்தியா, அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியங்களுக்கும், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மக்கள் நல கொள்கைகளுக்கும் வலுசேர்த்து வருவதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். பொதுமக்கள் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக எளிமையான முறையில் சட்டங்கள்  உருவாக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், உரிய நேரத்தில் நீதி கிடைக்க,  நீதித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமது சுதந்திர தின உரையில் இடம் பெற்றிருந்த அம்சங்களை மேற்கோள் காட்டிய பிரதமர், கடமைகள் தான் அரசிலமைப்புச் சட்டத்தின் சாராம்சத்தின் வெளிப்பாடு என்றார். விடுதலையின் அமிருதப்பெருவிழா கொண்டாட்டங்கள் நிறைவு பெறும் இவ்வேளையில், அடுத்த 25 ஆண்டுகால நாட்டின் வளர்ச்சிக்கு கடமையே நம்முடைய முதல் மற்றும் தலையாய பணியாக இருக்க வேண்டும்.  தேசத்துக்கு  நம் கடமையை செய்வதற்கான  தருணம் இது. மக்களோ அல்லது நிறுவனங்களோ நம்முடைய பொறுப்புகளுக்குத் தான் முழுமுதற் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். கடமைப்பாதையை தேர்வு செய்வதுதான் தேசத்தை வளர்ச்சியின் அடுத்த இலக்குக்கு கொண்டு செல்லும் என்பதையும் அடிக்கோள் காட்டினார்.  இன்னும் ஒரு வார காலத்தில் இந்தியா ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்க உள்ள நிலையில், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கௌரவம் மற்றும் நன்மதிப்பை முன்னெடுத்துச் செல்லவேண்டியது அவசியம் என்றும்  அதுவே நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு  எனவும் அவர் கூறினார். ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இளைஞர்களை மையப்படுத்துவதே நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சாராம்சம் என்று குறிப்பிட்ட பிரதமர், முகவுரையில், எதிர்காலம் சார்ந்த விஷயங்கள் மற்றும் நவீன தொலைநோக்குப் பார்வை இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கதையின் அனைத்து கோணங்களிலும் இளைஞர் சக்தியின் பங்களிப்பு இடம் பெறுகிறது என்றும் அவர் கூறினார். குறிப்பாக சமத்துவம், அதிகாரம் அளித்தல் ஆகிய தலைப்புகளில்  இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து இளைஞர்களிடையே சிறப்பான புரிதலை உருவாக்கும் வகையில், விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார். அரசியலமைப்புச் சபையில் விவாதங்கள் நடைபெறும்போது, நமது இளைஞர்கள் அனைத்துத் தலைப்புகள் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் மீதான ஆர்வத்தை இளைஞர்களிடையே தூண்டும் என்றார். இந்திய அரசியலமைப்புச் சபையின் 15 பெண் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது சிறப்புகள் குறித்து உதாரணம் காட்டிய பிரதமர், உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தாக்ஷாயினி வேலாயுதம், தடைகளைத் தகர்ந்தெறிந்து உயரத்தை எட்டிய கதையை நினைவு கூர்ந்தார். தாக்ஷாயினி வேலாயுதம் போன்ற பெண்களின் பங்களிப்பு குறித்து விவரித்த அவர், தலித்துகள் மற்றும்  தொழிலாளர்கள் சார்ந்த விஷயங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளித்ததையும் சுட்டிக்காட்டினார். மகளிர் சார்ந்த விவாதங்களில் துர்காபாய் தேஷ்முக், ஹன்சா மஹெதா, ராஜ்குமார் அம்ருத் கவுர் மற்றும் சிலப் பெண்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். இந்த உண்மைகளை நம் இளைஞர்கள்  தெரிந்துகொண்டால், அவர்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடித்துவிடுவார்கள். என்றார்.  நாட்டின் எதிர்காலம், நமது அரசியல் சாசனம் மற்றும் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உத்வேகத்தை கொடுக்கும். சுதந்திரத்தின் அமிருதக் காலத்தில், இதுவே தற்போதையத் தேவை என்பதால், அரசியலமைப்புச் சட்டம் உருவான தினம், இந்தப் பாதையில், புதிய ஆற்றலுடன் பயணிக்கும்  தீர்மானத்தை நமக்கு அளிக்கும் என்றும் கூறினார்.

இவ்விழாவில், தலைமை நீதிபதி டாக்டர். டி.ஒய் சந்திரசூட், மத்யி சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிஷன் கவுல், எஸ். அப்துல் நசீர், சட்டத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.பகல், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு ஆர் வெங்கடரமணி, சொலிட்டர் ஜெனரல் திரு டஷ்கர் மேத்தா. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைவர் திரு விகாஸ் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னணி

மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையினருக்கு  நீதிமன்ற சேவைகளை விரைந்து அளிக்க ஏதுவான திட்டங்களான மெய்நிகர் நீதி நடைமுறை வசதி,   ஜஸ்ட்ஐஎஸ் மொபைல் ஆப் 2.0 (JustIS mobile App 2.0), டிஜிட்டல் நீதிமன்றம் மற்றும் எஸ்3 டபிள்யூஏஏஎஸ் இணையதளங்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்கள்.

இதில் மெய்நிகர் நீதி நடைமுறை என்பது தொடரப்பட்ட வழக்கின் தற்போதைய நிலைமை அதாவது வழக்கு முடித்துவைக்கப்பட்டதா? அல்லது நிலுவையில் உள்ளதா? என்பது தொடர்பாக நாள், வாரம் மற்றும் மாதாந்திர அடிப்படையில் நீதிமன்ற அளவிலான புள்ளிவிவரங்களை காட்சிப்படுத்துவதாகும். மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பொதுமக்களுக்கு பகிர்வதற்கு இந்த எளிய நடைமுறை உதவியாக இருக்கும். இந்த மெய்நிகர் நீதி நடைமுறையைப் பயன்படுத்தி அனைத்து  நீதிமன்றங்களின் விசாரணை நடைமுறைகளையும் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளமுடியும்.

ஜஸ்ட்ஐஎஸ் மொபைல் ஆப் 2.0 (JustIS mobile App 2.0), என்பது நீதித்துறை அதிகாரிகள் வழக்குகளின் மேலாண்மையை கண்காணிக்கவும், அவர்களுக்கு கீழ் செயல்படும் தனிநீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதா அல்லது விசாரணை முடித்துவைக்கப்பட்டதா? என்பதை தெரிந்து கொள்ள உதவும் ஆயுதமாகும்.  இந்த செயலி  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தங்களது எல்லைக்குட்பட்ட அனைத்து மாநில மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மற்றும் முடித்துவைக்கப்பட்ட உள்ள வழக்குகளைக் கண்காணிக்க பெரிதும் உதவும்.

டிஜிட்டல் நீதிமன்றம் என்பது காகிதம் இல்லா நீதிமன்றங்கள் என்ற அடிப்படையில் நீதிமன்ற ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி நீதிபதிக்கு வழங்கும் நடைமுறையாகும்.

எஸ்3 டபிள்யூஏஏஎஸ் இணையதளங்கள் மாவட்ட நீதிமன்றம் சார்ந்த சேவைகள், சிறப்பு வாய்ந்த தகவல்கள், ஆகியவற்றை வெளியிடும் இணையதளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தல், இணையதளங்களை நிர்வகித்தல் ஆகிய சேவைகளை வழங்குகிறது.

எஸ்3 டபிள்யூஏஏஎஸ் என்பது அரசு நிறுவனங்களின் இணையதளங்களுக்கு பாதுகாப்பு, அளவு மற்றும் எளிய அணுகுதலுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது பன்மொழியிலும் குடிமக்களுக்கு உகந்ததாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage