பள்ளியில் பல்நோக்கு விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்
சிந்தியா பள்ளியின் 125-வது ஆண்டு விழாவையொட்டி நினைவு தபால் தலை வெளியீடு
சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறந்த சாதனையாளர்களுக்கு பள்ளியின் வருடாந்திர விருதுகளை வழங்குதல்
மகாராஜா முதலாம் மாதோ ராவ் சிந்தியா ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர், அவர் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார்.
"கடந்த தசாப்தத்தில், நாட்டின் முன்னெப்போதும் இல்லாத நீண்டகால திட்டமிடல் அற்புதமான முடிவுகளுக்கு வழிவகுத்தது"
"இன்றைய இளைஞர்கள் செழிக்க நாட்டில் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குவதே எங்கள் முயற்சி"
"சிந்தியா பள்ளியின் ஒவ்வொரு மாணவரும் இந்தியாவை ஒரு வளர்ந்த இந்தியாவாக மாற்ற பாடுபட வேண்டும், அது தொழில்முறை உலகில் அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி"
"இந்தியா இன்று எதைச் செய்கிறதோ, அதை அதனை பெரிய அளவில் செய்கிறது"
"உன் கனவுதான் என் தீர்மானம்"

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள 'சிந்தியா பள்ளி'யின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 


இந்நிகழ்ச்சியின் போது, பள்ளியில் 'பல்நோக்கு விளையாட்டு வளாகத்திற்கு' பிரதமர் அடிக்கல் நாட்டினார். சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறந்த சாதனையாளர்களுக்கு பள்ளியின் வருடாந்திர விருதுகளை வழங்கினார். 

 

சிந்தியா பள்ளி 1897 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் வரலாற்று சிறப்புமிக்க குவாலியர் கோட்டையின் உச்சியில் உள்ளது. இந்த நிகழ்வில் நினைவு தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார். 

சிவாஜி சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியின் ஒரு அங்கமான கண்காட்சியை அவர் பார்வையிட்டார். 

 

சிந்தியா பள்ளியின் 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஆசாத் ஹிந்த் சர்க்கார் நிறுவன தினத்தை முன்னிட்டு குடிமக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சிந்தியா பள்ளி மற்றும் குவாலியர் நகரத்தின் மதிப்புமிக்க வரலாற்றின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். 


ரிஷி குவாலிபா, இசை மேதை தான்சென், மஹத் ஜி சிந்தியா, ராஜ்மாதா விஜய ராஜே, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் உஸ்தாத் அம்ஜத் அலி கான் ஆகியோரைக் குறிப்பிட்ட அவர், குவாலியர் எப்போதும் மற்றவர்களுக்கு உத்வேகமாக இருப்பவர்களை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். 

 

"இது பெண் சக்தி மற்றும் வீரத்தின் பூமி" என்று கூறிய பிரதமர், இந்த நிலத்தில்தான் மகாராணி கங்காபாய் ஸ்வராஜ் ஹிந்த் ஃபௌஜுக்கு நிதியளிக்க தனது நகைகளை விற்றார் என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார். 

 "குவாலியருக்கு வருவது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான அனுபவம்", என்று பிரதமர் கூறினார். இந்தியா மற்றும் வாரணாசியின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் சிந்தியா குடும்பத்தின் பங்களிப்பையும் பிரதமர் குறிப்பிட்டார். 

 

காசியில் அவர்கள் குடும்பம் கட்டிய பல படித்துறைகள் மற்றும் பி.எச்.யுவுக்கு அளித்த பங்களிப்புகளை அவர் நினைவு கூர்ந்தார். காசியில் இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் குடும்பத்தின் முக்கியஸ்தர்களுக்கு  மனநிறைவைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்றார் அவர். திரு. ஜோதிராதித்யா சிந்தியா குஜராத்தின் மருமகன் என்றும், குஜராத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் கெய்காவாட் குடும்பத்தின் பங்களிப்பையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

கடமை தவறாத ஒருவர் தற்காலிக நன்மைகளுக்காக அல்லாமல் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பாடுபடுகிறார் என்று பிரதமர் கூறினார். கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் நீண்டகால நன்மைகளை எடுத்துக்காட்டிய  பிரதமர், மகாராஜா முதலாம் மாதோ ராவுக்கு அஞ்சலி செலுத்தினார். 

 

மகாராஜா ஒரு பொது போக்குவரத்து அமைப்பையும் நிறுவினார், அது இன்னும் டெல்லியில் டி.டி.சி.யாக செயல்படுகிறது என்பதையும் திரு. மோடி குறிப்பிட்டார். நீர் சேமிப்பு மற்றும் நீர்ப்பாசனத்திற்கான அவரது  முன்முயற்சியையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார், மேலும் ஹர்சி அணை 150 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆசியாவின் மிகப்பெரிய மண் அணை என்று தெரிவித்தார். அவரது தொலைநோக்குப் பார்வை நீண்ட காலத்திற்கு உழைக்கவும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும் நமக்குக் கற்பிக்கிறது என்று பிரதமர் கூறினார். 


2014 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, உடனடி முடிவுகளுக்காகப் பணியாற்றுவது அல்லது நீண்டகால அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது ஆகிய இரண்டு விருப்பங்கள் பிரதமரமான தன் முன் இருந்ததாக எடுத்துரைத்தார்.

 2, 5, 8, 10, 15 மற்றும் 20 ஆண்டுகள் வரை வெவ்வேறு கால வரையறைகளுடன் பணியாற்ற அரசு முடிவு செய்ததாகவும், இப்போது அரசு 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் இருப்பதால், நீண்டகால அணுகுமுறையுடன் நிலுவையில் உள்ள பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். 


சாதனைகளை பட்டியலிட்ட திரு மோடி, ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற ஆறு தசாப்த கால கோரிக்கை, இராணுவத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற நான்கு தசாப்த கால கோரிக்கை, ஜிஎஸ்டி மற்றும் முத்தலாக் சட்டம் ஆகிய நான்கு தசாப்த கால கோரிக்கையை குறிப்பிட்டார். 


சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும் அவர் குறிப்பிட்டார். வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாத இளம் தலைமுறையினருக்கு சாதகமான சூழலை உருவாக்க பாடுபடும் தற்போதைய அரசு இல்லையென்றால், நிலுவையில் உள்ள இந்த முடிவுகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் என்று திரு மோடி சுட்டிக் காட்டினார். 


இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது சிந்தியா பள்ளியும் 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், "பெரிய அளவில் சாதிக்க பெரிய கனவு காணுங்கள், " என்று மாணவர்களிடம் கூறினார். 


அடுத்த 25 ஆண்டுகளில், இளம் தலைமுறையினர் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கையுடன் கூறினார். "இளைஞர்களையும் அவர்களின் திறன்களையும் நான் நம்புகிறேன்" என்று கூறிய பிரதமர், தேசம் எடுத்த தீர்மானத்தை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவைப் போலவே மாணவர்களுக்கும் முக்கியமானது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். "சிந்தியா பள்ளியின் ஒவ்வொரு மாணவரும் இந்தியாவை ஒரு வளர்ந்த இந்தியாவாக மாற்ற முயற்சிக்க வேண்டும், அது தொழில்முறை உலகில் அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி", என்று அவர் வலியுறுத்தினார்.

சிந்தியா பள்ளி முன்னாள் மாணவர்களுடனான தனது கலந்துரையாடலில், வளர்ந்த இந்தியாவின் தலைவிதியை நிறைவேற்றும் திறன் மீதான தனது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ரேடியோ ஜாம்பவான் அமீன் சயானி, பிரதமர் எழுதிய கர்பாவை வழங்கிய மீட் பிரதர்ஸ், சல்மான் கான் மற்றும் பாடகர் நிதின் முகேஷ் ஆகியோரை அவர் குறிப்பிட்டார். 

இந்தியாவின் உலகளாவிய பங்கெடுப்பு வளர்ந்து வருவது குறித்து பிரதமர் குறிப்பிட்டார். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதையும், ஜி 20 இன் வெற்றிகரமான ஒருங்கிணைப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்று அவர் பேசினார். ஃபின்டெக், நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஸ்மார்ட்போன் தரவு நுகர்வு ஆகியவற்றில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையிலும், மொபைல் உற்பத்தியிலும் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 

இந்தியா மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோராக உள்ளது. விண்வெளி நிலையத்திற்கான இந்தியாவின் தயாரிப்பு மற்றும் ககன்யான் தொடர்பான சோதனை இன்றே வெற்றிகரமாக நடத்தப்பட்டதை அவர் குறிப்பிட்டார். 

தேஜஸ் மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவற்றை பட்டியலிட்ட அவர், "இந்தியாவால் முடியாதது எதுவும் இல்லை" என்று கூறினார்.   உலகமே அவர்களின் சிப்பி என்று மாணவர்களிடம் கூறிய பிரதமர், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகள் உள்பட அவர்களுக்காகத் திறக்கப்பட்ட புதிய வாய்ப்புகள் குறித்து கூறினார். 


சதாப்தி ரயில்களைத் தொடங்குவது போன்ற முன்னாள் ரயில்வே அமைச்சர் திரு. மாதவராவ் எடுத்த முயற்சிகள் மூன்று தசாப்தங்கள் வரை மீண்டும் செய்யப்படவில்லை என்பதையும், இப்போது நாடு வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்களைக் காண்கிறது என்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். 


சுயராஜ்யத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் சிந்தியா பள்ளியில் உள்ள சபைகளின் பெயரை எடுத்துரைத்த பிரதமர், இது ஒரு பெரிய உத்வேகம் அளிப்பதாக கூறினார். சிவாஜி சபை, மகத் ஜி சபை, ரானோ ஜி சபை, தத்தா ஜி சபை, கனார்கேட் சபை, நிமா ஜி சபை மற்றும் மாதவ் சபை ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், இது சப்த ரிஷிகளின் பலம் போன்றது என்றார்.


நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துதல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குவாலியரை இந்தியாவின் தூய்மையான நகரமாக மாற்ற முயற்சி செய்தல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் உள்ளூருக்கு குரல் கொடுப்போம் என்ற அணுகுமுறையைப் பின்பற்றுதல், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு இந்தியாவை ஆராய நாட்டிற்குள் பயணம் செய்தல் ஆகிய 9 பணிகளையும் திரு மோடி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 


பிராந்திய விவசாயிகளிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தினசரி உணவில் சிறுதானியங்களை புகுத்துதல், விளையாட்டு, யோகா அல்லது எந்தவொரு உடற்பயிற்சியையும் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுதல், இறுதியாக குறைந்தபட்சம் ஒரு ஏழைக் குடும்பத்தையாவது கைதூக்கி உதவி செய்தல் என  இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.


"இந்தியா இன்று எதைச் செய்கிறதோ, அதை அது ஒரு பெரிய அளவில் செய்கிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், மாணவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் தீர்மானங்களைப் பற்றி பெரிதாக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "உங்கள் கனவு எனது தீர்மானம்" என்று கூறிய அவர், மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் நமோ செயலி மூலம் தன்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ்ஆப் சேனலில்   இணையுமாறு அறிவுறுத்தினார்.


உரையை நிறைவு செய்த பிரதமர், "சிந்தியா பள்ளி என்பது ஒரு நிறுவனம் மட்டுமல்ல, ஒரு பாரம்பரியம்" என்றார். சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மகாராஜ் மாதோ ராவ் அவர்களின் தீர்மானங்களை பள்ளி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்று அவர் கூறினார். விருது பெற்ற மாணவர்களுக்கு திரு. மோடி மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்ததோடு, சிந்தியா பள்ளியின் சிறந்த எதிர்காலத்திற்காக தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். 


மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா, நரேந்திர சிங் தோமர் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage