சமூக ஊடக கையாளுதல்களில் இருந்து "மோடி கா பரிவார்" என்ற வாசகத்தை நீக்குமாறு தனது ஆதரவாளர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்திய மக்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, பலர் அவர் மீதான பாசத்தின் அடையாளமாக "மோடி கா பரிவார்" என்பதை தங்கள் சமூக ஊடக சுயவிவரங்களில் சேர்த்தனர் என்று அவர் கூறினார். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே குடும்பமாக நமது பிணைப்பு முறியாமல் வலுவாக உள்ளது என்று திரு மோடி மேலும் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்பதை தங்கள் சமூக ஊடகங்களில் சேர்த்தனர். அதிலிருந்து நான் நிறைய வலிமையைப் பெற்றேன். இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இந்த சாதனை, நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி சிறப்பாகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நான் மீண்டும் ஒருமுறை இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் நீங்கள் இப்போது உங்கள் சமூக ஊடக தளங்களிலிருந்து 'மோடி கா பரிவார்' ஐ அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு குடும்பமாக நமது பிணைப்பு வலுவாக உள்ளது.”
Through the election campaign, people across India added 'Modi Ka Parivar' to their social media as a mark of affection towards me. I derived a lot of strength from it. The people of India have given the NDA a majority for the third consecutive time, a record of sorts, and have…
— Narendra Modi (@narendramodi) June 11, 2024