மக்கள் மருந்தக பயனாளிகளிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளிடமிருந்து தள்ளி இருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். மருத்துவர்களின் அறிவுரைகளை மக்கள் கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மற்றவர்களை சந்திக்கும்போது கை குலுக்குவதைத் தவிர்த்து கை கூப்பி 'வணக்கம்' என கூறுமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தலைசிறந்த மருத்தவர்களைக் கொண்ட குழுக்கள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். மக்கள் பின்பற்ற வேண்டுமென்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட எளிய வழிமுறைகள் இவை:
* பெரும்திரளான கூட்டங்களில் கலந்து கொள்வதை முடிந்த வரை தவிருங்கள்.
* உங்கள் கைகளை சோப்புப் போட்டு முறையாகக் கழுவுங்கள்.
* அடிக்கடி உங்கள் முகம், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடுவதைத் தவிருங்கள்.
* அடிக்கடி இருமல் அல்லது தும்மல் அடிக்கடி வந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் உங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
* இருமும் போதும், தும்மும் போதும் அதன் துளிகள் அடுத்தவர் மீது படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* முகக்கவசம் மற்றும் கையுறையை அணியுங்கள், அடுத்தவரிடமிருந்து சற்று விலகியே இருங்கள்.
*முகக்கவசம் அணிந்திருந்தால், சுத்தமான கைகளால் மட்டுமே அதைக் கையாளவும்.