வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி டாக்கா சென்றடைந்தார். ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாளான முஜிப் போரஷோ; இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு ஏற்பட்டதன் 50-வது ஆண்டு; வங்கதேசத்தின் விடுதலைக்கான போரின் 50-வது ஆண்டு ஆகியவற்றை குறிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க பயணம் இதுவாகும்.
சிறப்பு மரியாதையாக வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதமர் திரு மோடிக்கு ஹஸரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பளித்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு 19 குண்டுகள் முழங்க, அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
A special visit begins with a special gesture.
— PMO India (@PMOIndia) March 26, 2021
PM Sheikh Hasina welcomes PM @narendramodi at Dhaka airport. pic.twitter.com/5zyKWpIepv