பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு பெர்லின் சென்றடைந்தார், அங்கு அவர் ஜெர்மன் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு மற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பெர்லின் சென்றடைந்தேன். இன்று நான் பிரதமர் திரு ஓலாஃப் ஸ்கோல்சுடன் பேச்சு நடத்துவேன். தொழில் நிறுவனத் தலைவர்களுடன் விவாதிப்பதுடன், வம்சாவளியினரிடையே உரையாற்றுகிறேன். இந்த பயணம் இந்தியா- ஜெர்மனி இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.