ஜெம் (GeM) தளத்தில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்திய வணிகர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
2022-23-ஆம் நிதியாண்டில் நவம்பர் 29ம் தேதி வரை ஜெம் தளம் ரூ. 1 லட்சம் கோடி அளவிலான வணிக மதிப்பைத் தாண்டியுள்ளது.
இது குறித்த மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் ட்விட்டருக்கு பதில் அளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:
“அருமையான செய்தி! ஜெம் இந்தியா தளம், இந்தியாவின் தொழில்முனைவு பெருமையை காட்சிப்படுத்தும் வழியாகவும் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ள வகையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தளத்தில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பாராட்டுக்கள். மற்றவர்களும் இதைப் பின்பற்ற வேண்டும்”
Excellent news! @GeM_India is a game changer when it comes to showcasing India’s entrepreneurial zeal and furthering transparency. I laud all those who are displaying their products on this platform and urge others to do the same. https://t.co/O2gioaxxrL
— Narendra Modi (@narendramodi) November 29, 2022