பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் என்னும் மீனவ துறையில் நீலப்புரட்சி மூலம் நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் திட்டத்தின் வாயிலாக, ஹரியானா மாநிலத்தின் சிர்சா பகுதி விவசாயிகள் பயனடைந்திருப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அடையாளமாக திகழ்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகள் பயனடைந்திருப்பது குறித்து சிர்சா நகர நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சுனிதா தக்கல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“சிர்சா நகரைச் சேர்ந்த நமது விவசாய சகோதரர்களும், சகோதரிகளும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள இந்த முயற்சி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அடையாளமாக திகழ்கிறது”.
सिरसा में हमारे किसान भाई-बहनों का यह प्रयास जहां पीएम मत्स्य संपदा योजना के फायदों को सामने लाता है, वहीं यह महिला सशक्तिकरण का भी एक प्रतीक है। https://t.co/suPkEjpZvg
— Narendra Modi (@narendramodi) March 19, 2023