ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உடல் பருமனை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் உடற்தகுதி இந்தியாவிற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்த கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக, திரு மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“உடல் பருமனை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தும் நீரஜ் சோப்ராவின் நுண்ணறிவு மற்றும் ஊக்கமளிக்கும் படைப்பு.”
An insightful and motivating piece by Neeraj Chopra, which reiterates the need to fight obesity and remain healthy. @Neeraj_chopra1 https://t.co/L89xeCTr26
— Narendra Modi (@narendramodi) February 12, 2025