லடாக் பகுதியின் புகழ்பெற்ற மரச்சிற்ப வேலைக்கு, இந்த வகையில் முதன் முதலாக புவிசார் குறியீடு கிடைத்திருப்பதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜம்யங் செரிங் நம்கியால் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“இது லடாக்கின் கலாச்சார, பாரம்பரியங்களை மேலும் புகழ் பெற செய்வதுடன், கைவினைஞர்களுக்கு பயனளிக்கும்”.