காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் தற்போது வலுவடைந்துள்ளது என்று கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார். காசநோய் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா எழுதிய கட்டுரையை மக்கள் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"காசநோய்க்கு எதிரான எங்கள் செயல்பாடு வலுவடைந்துள்ளது!
காசநோயை ஒழிப்பதற்கு கூட்டு உணர்வுடன் செயல்படுத்தப்படும் புதிய இயக்கம், அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கத்தை இன்று தொடங்குகிறது. இந்தியா காசநோயை பல முனைகளில் எதிர்த்துப் போராடுகிறது:
(1) நோயாளிகளுக்கு ஆதரவை இரட்டிப்பாக்குதல்
(2) மக்கள் பங்களிப்பு
(3) புதிய மருந்துகள்
(4) தொழில்நுட்பம், சிறந்த நோய் கண்டறியும் கருவிகளின் பயன்பாடு
நாம் அனைவரும் ஒன்றிணைந்து காசநோயை ஒழிக்க நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்வோம்" .
இவ்வாறு அந்தப் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஜே.பி.நட்டாவின் கட்டுரை குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:
"இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற நாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி.நட்டா அவர்கள் தெளிவான கருத்துகளை அளித்துள்ளார். அனைவரும் அதைப் படித்துப் பாருங்கள். @JPNadda "
Health Minister Shri JP Nadda Ji gives an insightful picture of the steps we are continuously taking to make India TB-free. Do read. @JPNadda https://t.co/xvYNvzxfCV
— Narendra Modi (@narendramodi) December 7, 2024