ராஜஸ்தானின் ஜோத்பூரில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the tragic cylinder mishap in Jodhpur, Rajasthan. The injured would be given Rs. 50,000 each.
— PMO India (@PMOIndia) December 16, 2022