ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, தலைவர்கள், அந்தந்த ஜி-20 மற்றும் ஜி-7 அதிபர் பதவிகளுக்கான முன்னுரிமைகள், குறிப்பாக உலகளாவிய தெற்கின் கவலைகள் மற்றும் அபிலாஷைகளை முன்னுக்குக் கொண்டுவருவதில், ஆண்டு முழுவதும் இரு நாடுகளின் ஆக்கபூர்வமான உரையாடலை ஒப்புக்கொண்டனர்.
உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீடுகள் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட இந்தியா-ஜப்பான் இருதரப்பு கூட்டுறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
Held productive talks with PM @kishida230. We took stock of India-Japan bilateral ties and the ground covered during India's G20 Presidency and Japan's G7 Presidency. We are eager to enhance cooperation in connectivity, commerce and other sectors. pic.twitter.com/kSiGi4CBrj
— Narendra Modi (@narendramodi) September 9, 2023