வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணம் சமீபத்தில் 50 நாட்களை நிறைவு செய்ததாகவும், சுமார் 11 கோடி மக்களுடன் இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். " வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண அரசின் பயணமாக மட்டுமல்லாமல், நாட்டின் பயணமாகவும் மாறியுள்ளது", என்று அவர் கூறினார்.
மோடி உத்தரவாத வாகனம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதாக தெரிவித்தார். அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்காக தங்கள் வாழ்நாளைக் கழித்த ஏழை மக்கள் இன்று அர்த்தமுள்ள மாற்றத்தைக் காண்கிறார்கள் என்றும், பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரசு முனைப்புடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். "மோடி உத்தரவாத வாகனத்துடன், அரசு அலுவலகங்களும், மக்கள் பிரதிநிதிகளும் மக்களைச் சென்றடைவதாக" அவர் மேலும் கூறினார்.
மோடி உத்தரவாத வாகனம்' பற்றிய உலகளாவிய பேச்சை குறிப்பிட்ட பிரதமர், உத்தரவாதத்தின் வரையறைகளுடன் பயனாளியை ஒரு விரைவான முறையில் அடைவதற்கான நியாயம் குறித்து குறிப்பிட்டார். மேலும் வளர்ச்சியடைந்த பாரதம் தீர்மானத்திற்கும், திட்ட அமலாக்கத்தின் செறிவூட்டலுக்கும் இடையிலான தொடர்பையும் சுட்டிக் காட்டினார்.
பல தலைமுறைகளாக ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை பிரதமர் திரு மோடி எடுத்துரைத்தார். "முந்தைய தலைமுறையினர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போதைய, எதிர்கால சந்ததியினர் வாழக்கூடாது என்று எங்கள் அரசாங்கம் விரும்புகிறது என்று அவர் கூறினார். சிறிய அன்றாடத் தேவைகளுக்கான போராட்டத்தில் இருந்து நாட்டின் பெரும் மக்களை வெளியேற்ற நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். எனவே, ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும், எங்களைப் பொறுத்தவரை, இவை நாட்டின் நான்கு பெரிய சாதிகள் என்று கூறிய அவர், இவர்கள் அதிகாரம் பெற்றால், நாடு சக்திவாய்ந்ததாக மாறும் என்று அவர் கூறினார்.
அரசுத் திட்டங்களின் பயன்களிலிருந்து தகுதியான எந்தவொரு பயனாளியையும் விட்டுவிடக்கூடாது என்பதே வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் முக்கிய குறிக்கோள் என்று பிரதமர் மீண்டும் குறிப்பிட்டார். யாத்திரை தொடங்கியதிலிருந்து, இலவச சமையல் எரிவாயு இணைப்புகளுக்கான 12 லட்சம் புதிய விண்ணப்பங்களும், விபத்துக் காப்பீட்டுத் திட்டம், ஆயுள் காப்பீடு திட்டம், பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம் ஆகியவற்றுக்காக லட்சக்கணக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் தாக்கம் குறித்து சுட்டிக் காட்டிய பிரதமர், இதுவரை 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 1 கோடி காசநோய் பரிசோதனைகள், 22 லட்சம் அரிவாள் செல் ரத்தப் பரிசோதனைகள் உட்பட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு பயன்களை அளிப்பது முந்தைய அரசுகளால் சவாலாக கருதப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பயனாளிகளின் தேவைகளை அரசு நிறைவேற்றி வருவதாக பிரதமர் கூறினார். ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு, ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ், மக்கள் மருந்தக மையங்களில் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் ஆயுஷ்மான் திட்டம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். "நாடு முழுவதும் கட்டப்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்ய மையங்கள் கிராமங்கள், ஏழைகளுக்கான மிகப்பெரிய சுகாதார மையங்களாக மாறியுள்ளன" என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசின் தாக்கத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, முத்ரா திட்டம் மூலம் கடன் கிடைப்பது, வங்கி மித்ராக்கள், பசு சாகிகள் மற்றும் ஆஷா பணியாளர்களாக பெண்கள் பணியாற்றுவது குறித்தும் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக, பல சகோதரிகள் இந்த ஆண்டுகளில் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர் என்று பிரதமர் கூறினார். லட்சாதிபதி சகோதரிகளின் எண்ணிக்கையை மேலும் 2 கோடியாக அதிகரிப்பதற்கான அரசின் இயக்கம், நமோ ட்ரோன் மகளிர் திட்டம், வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணக் காலத்தில் சுமார் 1 லட்சம் ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக துரிதமான அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களுடன் பொதுமக்கள் இணைக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். தற்போது, வேளாண் துறையில் மட்டுமே ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரும் நாட்களில், அதன் நோக்கம் மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும்" என்று பிரதமர் திரு மோடி மேலும் கூறினார்.
முந்தைய அரசுகளால், நாட்டில் வேளாண் கொள்கை தொடர்பாக நடைபெற்ற விவாதங்களின் நோக்கம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மட்டுமே இருந்தது என்றும், விவசாயிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைப் புறக்கணித்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். "விவசாயிகளின் ஒவ்வொரு சிரமத்தையும் எளிதாக்க எங்கள் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது" என்று பிரதமர் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்சம் ரூ .30,000 பரிமாற்றம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விவசாயிகள் உற்பத்தி அமைப்பு போன்ற அமைப்புகளுடன் வேளாண்மையில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், சேமிப்பு வசதிகளை அதிகரித்தல், உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவித்தல் ஆகியவற்றைக் குறிப்பிட்ட திரு. மோடி துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் இப்போது தங்கள் விளைபொருட்களை ஆன்லைனில் நேரடியாக அரசுக்கு விற்பனை செய்து குறைந்தபட்ச ஆதார விலையுடன் சந்தையில் சிறந்த விலையில் விற்க முடியும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்தின் நோக்கம் மற்ற பருப்பு வகைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். "பருப்பு வகைகளை வாங்க நாங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணம் நாட்டின் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி", என்று அவர் கூறினார்.
உரையின் நிறைவாக பேசிய பிரதமர், முழு அர்ப்பணிப்புடன் தங்கள் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிர்வாகம் உட்பட வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் நிகழ்ச்சியை நடத்தும் குழுவின் முயற்சிகளைப் பாராட்டினார். "இந்த உணர்வில், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற நமது கடமைகளை நாம் செய்ய வேண்டும்" என்று பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
समाज में अंतिम पायदान पर खड़े व्यक्ति तक सरकार खुद पहुंच रही है, उसे अपनी योजनाओं से जोड़ रही है: PM @narendramodi pic.twitter.com/NWc2Pgskbv
— PMO India (@PMOIndia) January 8, 2024
विकसित भारत संकल्प यात्रा को लेकर गांव हो या शहर, हर जगह उत्साह देखा जा रहा है। pic.twitter.com/WsXE8RoyMT
— PMO India (@PMOIndia) January 8, 2024
विकसित भारत संकल्प यात्रा का सबसे बड़ा मकसद है- कोई भी हकदार, सरकारी योजना के लाभ से छूटे नहीं: PM @narendramodi pic.twitter.com/0CIc3sSjfI
— PMO India (@PMOIndia) January 8, 2024