லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக் கழகத்தின் (எல்பிஎஸ்என்ஏஏ-வின்) 96 ஆவது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். புதிய விளையாட்டுக்கள் வளாகத்தையும் தொடங்கி வைத்த அவர், புனரமைக்கப்பட்ட ஹாப்பி வேலி வளாகத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தங்களின் பயிற்சி வகுப்பை நிறைவு செய்துள்ள அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர், மகிழ்ச்சியான ஹோலி தருணத்தில் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்போது பயிற்சி முடித்துச் செல்லும் இந்த தொகுப்பினரின் தனித்துவம் பற்றி குறிப்பிட்ட அவர், சுதந்திரதத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவில் இவர்கள் தீவி சேவைக்குள் நுழைவதாக கூறினார்.“அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்த காலத்தில் தேசத்தின் வளர்ச்சியில் உங்கள் தொகுப்பு முக்கிய பங்கினை வகிக்கும்” எனறு அவர் மேலும் கூறினார்.
பெருந்தொற்றுக்குப் பின் உருவாகியிருக்கும் புதிய உலக ஒழுங்கு பற்றி பிரதமர் கோடிட்டு காட்டினார். 21 ஆம் நூற்றாண்டில் உலகம் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக அவர் கூறினார். “இந்த புதிய உலக ஒழுங்கில் இந்தியா தனது பங்கினை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும், அதிவேகத்தில் தாமே முன்னேற வேண்டியுள்ளது” என்று அவர் கூறினார். ‘21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இலக்கு’ அதாவது தற்சார்பு இந்தியா, நவீன இந்தியா இலக்கு. குறித்து சிறப்பு கவனத்துடன் இந்த காலத்தின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் எனறு அவர் கேட்டுக் கொண்டார். “இந்த வாய்ப்பை நாம் நழுவ விட முடியாது” என்று அவர் கூறினார்.
குடிமை சேவை குறித்து சர்தார் பட்டேலின் கருத்துக்களை சுட்டிக்காட்டிய பிரதமர், சேவை மற்றும் கடமை உணர்வு பயிற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்றார். “உங்களது சேவையின் அனைத்து ஆண்டுகளிலும் சேவையின் அம்சங்களிலும், கடமையிலும் உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வெற்றி அளவிடப்பட வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார். கடமை உணர்வோடும், நோக்கத்தோடும் செய்யப்படும் பணி ஒருபோதும் சுமையாக இருப்பதில்லை என்று அவர் கூறினார். நோக்கத்தின் உணர்வோடும் சமூகம் மற்றும் நாட்டின் ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் பகுதியாகவும், சேவைக்கு வர வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கூறினார்.
கோப்பின் விஷயங்களின் உண்மையான உணர்வு களத்திலிருந்து வருவதால், களத்தின் அனுபவத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். கோப்புகளில் இருப்பவை வெறும் எண்களும், புள்ளி விவரங்களும் அல்ல, அவை மக்களின் வாழ்க்கையையும், விருப்பங்களையும் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். “எண்களுக்கு பணிசெய்வதாக நீங்கள் இருக்கக்கூடாது. மக்களின் வாழ்க்கைக்காக இருக்க வேண்டும்” என்றார். பிரச்சினைகளின் மூலகாரணத்தை அதிகாரிகள் காண வேண்டும் என்றும், அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். அமிர்த காலத்தில் நாம் அடுத்த நிலைக்கு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும், செயல்பட வேண்டும், மாற்றம் காண வேண்டும். எனவே, இன்றைய இந்தியா ‘அனைவரின் முயற்சி’ என்ற உணர்வுடன் முன்னேறுகிறது. கடைகோடியில் இருக்கும் கடைசி மனிதனின் நல்வாழ்வு ஒவ்வொரு முடிவு பற்றிய கணிப்புக்கு உரைகல்லாக இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் மந்திரத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களின் உள்ளூர் நிலையிலான 5-6 சவால்களை அடையாளம் கண்டு, அதற்காக பாடுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். சவால்களுக்கு தீர்வு காண்பதில் முதல் படியாக இருப்பது சவால்களை அடையாளம் காண்பது என்று அவர் கூறினார். ஏழைகளுக்கு கல்வீடு கட்டித் தருதல், மின்சார இணைப்பு வழங்குதல் போன்ற சவால்களுக்கு தீர்வு காண பிரதமரின் வீட்டு வசதி திட்டம், சௌபாக்யா திட்டம், முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான திட்டங்கள் போன்றவை அரசால் அடையாளம் காணப்பட்ட உதாரணத்தை அவர் எடுத்துரைத்தார். பல்வேறு அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களில் ஒருங்கிணைப்புக்கான அவசியத்தை வலியுறுத்திய அவர், பிர‘தமரின் விரைவு சதி பெருந்திட்டம் பெருமளவுக்கு இதற்கு தீர்வு காணும் என்றார்.
குடிமை சேவைகள் தளத்தில் அதாவது கர்மயோகி இயக்கம் மற்றும் ஆரம்ப திட்டத்தில் புதிய சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். சவால்மிக்க பணி, அதற்கே உரிய மகிழ்ச்சியை தருவதால், எளிதான வேலை இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஒருபோதும் பிரார்த்திக்கக்கூடாது என்று பிரதமர் தெரிவித்தார். “அதிக வசதியான வாழ்க்கை பற்றி நீங்கள் சிந்திப்பது உங்களின் முன்னேற்றத்தையும் நாட்டின் முன்னேற்றத்தையும் அதிகம் தடுப்பதாக அமையும்” என்று பிரதமர் கூறினார்.
இந்த கல்வி நிறுவனத்திலிருந்து புறப்படும் நேரத்தில் தங்களின் விருப்பங்களையும், திட்டங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்திய பிரதமர், 25 அல்லது 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவற்றை பார்க்கும் போது சாதனையின் அளவை மதிப்பீடு செய்ய முடியும் என்றார். எதிர்கால பிரச்சினைகள் பெருமளவு தரவுகள் அறிவியலை சார்ந்திருப்பதோடு, இந்த தரவுகளை பிரித்தறியும் திறன் தேவைப்படும் என்பதால், பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்களும், தரவுகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
புதிய பயிற்றுவிப்பு மற்றும் பாடப்பிரிவுடன் கர்மயோகி இயக்க கோட்பாடுகளின் அடிப்படையில், லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக் கழகத்தின் 96 ஆவது அடிப்படை பாட வகுப்பு என்பது முதலாவது பொதுவான அடிப்படை பாட வகுப்பாகும். இந்த தொகுப்பு 16 சேவைகளிலிருந்து 488 பயிற்சி முடித்தவர்களையும், 3 ராயல் பூட்டான் சேவை செய்பவர்களையும் (நிர்வாகம், காவல்துறை, வனத்துறை) உள்ளடக்கியதாகும்.
இளமை ததும்பும் தொகுப்பின் சாகசம் நிறைந்த மற்றும் புதுமை உணர்வு கொண்ட புதிய பயிற்சி முறை கர்மயோகி இயக்க கோட்பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. “அனைவரின் முயற்சி” என்ற உணர்வின் பத்ம விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடுதல், கிராமப்புற இந்தியாவின் ஆழமான அனுபவத்திற்காக கிராமங்களுக்கு செல்லுதல் போன்ற முன்முயற்சிகள் மூலம் மாணவர்கள் / குடிமக்கள் பகுதியிலிருந்து மக்கள் சேவைக்கான அதிகாரிகள் பயிற்சியில் மாற்றம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டது. தொலைதூர கிராமங்களிலும் எல்லைப் பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ள பயிற்சி அதிகாரிகள் கிராமங்களுக்கு பயணம் செய்தனர். தொடர்ச்சியான, தரப்படுத்தப்பட்ட கற்றலின் கோட்பாட்டுடன் சுயவழிகாட்டுதல் கொண்ட கற்றலை ஏற்றுக் கொண்ட பாடநூல்களுக்கான அணுகுமுறை தேவைப்படுகிறது. சுகாதார பரிசோதனைகளோடு, உடல் தகுதி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தேர்வு சுமையுள்ள மாணவரை ஆரோக்கியமான குடிமை சேவை இளைஞராக மாற்ற உதவும். 488 பயிற்சி அதிகாரிகளும், முதல் நிலையில் தற்காப்பு கலையிலும், இதர விளையாட்டுகளிலும், முதல் நிலையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.
हम में से बहुत से लोग उस समय नहीं होंगे जब भारत अपनी आजादी के 100वें वर्ष में प्रवेश करेगा।
— PMO India (@PMOIndia) March 17, 2022
लेकिन आपका ये Batch, उस समय भी रहेगा, आप भी रहेंगे।
आजादी के इस अमृतकाल में, अगले 25 साल में देश जितना विकास करेगा, उसमें बहुत बड़ी भूमिका आपकी होगी: PM @narendramodi
बीते वर्षों में मैंने अनेकों Batches के Civil Servants से बात की है, मुलाकात की है, उनके साथ लंबा समय गुजारा है।
— PMO India (@PMOIndia) March 17, 2022
लेकिन आपका Batch बहुत स्पेशल है।
आप भारत की आजादी के 75वें वर्ष में अपना काम शुरू कर रहे हैं: PM @narendramodi
21वीं सदी के जिस मुकाम पर आज भारत है, पूरी दुनिया की नजरें हम पर टिकी हुई हैं।
— PMO India (@PMOIndia) March 17, 2022
कोरोना ने जो परिस्थितियां पैदा की हैं, उसमें एक नया वर्ल्ड ऑर्डर उभर रहा है।
इस नए वर्ल्ड ऑर्डर में भारत को अपनी भूमिका बढ़ानी है और तेज गति से अपना विकास भी करना है: PM @narendramodi
आपको एक चीज का हमेशा ध्यान रखना है और वो है 21वीं सदी के भारत का सबसे बड़ा लक्ष्य।
— PMO India (@PMOIndia) March 17, 2022
ये लक्ष्य है- आत्मनिर्भर भारत का, आधुनिक भारत का।
इस समय को हमें खोना नहीं है: PM @narendramodi
ट्रेनिंग के दौरान आपको सरदार पटेल जी के विजन, उनके विचारों से अवगत कराया गया है।
— PMO India (@PMOIndia) March 17, 2022
सेवा भाव और कर्तव्य भाव का महत्व, आपकी ट्रेनिंग का अभिन्न हिस्सा रहा है।
आप जितने वर्ष भी इस सेवा में रहेंगे, आपकी व्यक्तिगत और प्रोफेशनल सफलता का पैमाना यही फैक्टर रहना चाहिए: PM @narendramodi
जब हम Sense of Duty और Sense of Purpose के साथ काम करते हैं, तो हमें कोई काम बोझ नहीं लगता।
— PMO India (@PMOIndia) March 17, 2022
आप भी यहां एक sense of purpose के साथ आए हैं।
आप समाज के लिए, देश के लिए, एक सकारात्मक परिवर्तन का हिस्सा बनने आए हैं: PM @narendramodi
मेरी ये बात आप जीवन भर याद रखिएगा कि फाइलों में जो आंकड़े होते हैं, वो सिर्फ नंबर्स नहीं होते।
— PMO India (@PMOIndia) March 17, 2022
हर एक आंकड़ा, हर एक नंबर, एक जीवन होता है।
आपको नंबर के लिए नहीं, हर एक जीवन के लिए काम करना है: PM @narendramodi
आपको फाइलों और फील्ड का फर्क समझते हुए ही काम करना होगा।
— PMO India (@PMOIndia) March 17, 2022
फाइलों में आपको असली फील नहीं मिलेगी। फील के लिए आपको फील्ड से जुड़े रहना होगा: PM @narendramodi
आप इस बात की तह तक जाइएगा कि जब वो नियम बनाया गया था, तो उसके पीछे की वजह क्या थी।
— PMO India (@PMOIndia) March 17, 2022
जब आप अध्ययन करेंगे, किसी समस्या के Root Cause तक जाएंगे, तो फिर आप उसका Permanent Solution भी दे पाएंगे: PM @narendramodi
आजादी के इस अमृतकाल में हमें Reform, Perform, Transform को next level पर ले जाना है।
— PMO India (@PMOIndia) March 17, 2022
इसलिए ही आज का भारत सबका प्रयास की भावना से आगे बढ़ रहा है।
आपको भी अपने प्रयासों के बीच ये समझना होगा कि सबका प्रयास, सबकी भागीदारी की ताकत क्या होती है: PM @narendramodi
आप ये प्रार्थना जरूर करिएगा कि भविष्य में आपको कोई आसान काम ना मिले।
— PMO India (@PMOIndia) March 17, 2022
Challenging Job का आनंद ही कुछ और होता है।
आप जितना Comfort Zone में जाने की सोचेंगे, उतना ही अपनी प्रगति और देश की प्रगति को रोकेंगे: PM @narendramodi