“This is India’s Time”
“Every development expert group in the world is discussing how India has transformed in the last 10 years”
“World trusts India today”
“Stability, consistency and continuity make for the ‘first principles’ of our overall policy making”
“India is a welfare state. We ensured that the government itself reaches every eligible beneficiary”
“Productive expenditure in the form of capital expenditure, unprecedented investment in welfare schemes, control on wasteful expenditure and financial discipline - Four main factors in each of our budgets”
“Completing projects in a time-bound manner has become the identity of our government”
“We are addressing the challenges of the 20th century and also fulfilling the aspirations of the 21st century”
“White Paper regarding policies followed by the country in the 10 years before 2014 presented in this session of Parliament”

புதுதில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் இன்று நடைபெற்ற இ.டி.நவ் (எகனாமிக் டைம்ஸ் நவ் ) உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

"உலக வர்த்தக உச்சிமாநாடு 2024-ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "இடையூறு, வளர்ச்சி மற்றும் பன்முகப்படுத்தல்" என்ற கருப்பொருளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். "இடையூறு, வளர்ச்சி மற்றும் பல்வகைப்படுத்தல் என்று வரும்போது, இது இந்தியாவின் நேரம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளலாம்" என்று கூறி உலகில் இந்தியா மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மாற்றம் குறித்து உலகில் உள்ள வளர்ச்சி வல்லுநர் குழுக்கள் விவாதித்து வருவது, இன்று இந்தியா மீது உலகம் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது என்று பிரதமர் கூறினார். "உலகில் இந்தியாவின் ஆற்றல் மற்றும் வெற்றி குறித்து இதுபோன்ற நேர்மறையான உணர்வை இதற்கு முன்பு நாம் கண்டதில்லை" என்று செங்கோட்டையில் இருந்து தாம் பாராட்டியதை நினைவுகூர்ந்த திரு மோடி, "இதுதான் நேரம், இது சரியான நேரம்" என்று குறிப்பிட்டார்.

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் போதும், அனைத்து சூழ்நிலைகளும் அதற்கு சாதகமாக இருக்கும் ஒரு நேரம் வரும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்த நேரத்தில் நாடு பல நூற்றாண்டுகளுக்குத் தன்னை பலப்படுத்திக் கொள்ளும் என்று கூறினார். "இன்று இந்தியாவுக்கும் அதே நேரத்தைப் பார்க்கிறேன்.  வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது, நிதிப் பற்றாக்குறை குறைந்து வருவது, ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவாக இருப்பது, உற்பத்தி முதலீடு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, குறைந்து வரும் வறுமை, வளர்ந்து வரும் நுகர்வு மற்றும் கார்ப்பரேட் லாபம் மற்றும் வங்கி வாராக்கடன் வரலாறு காணாத அளவு குறைந்திருப்பது ஆகியவை பற்றிக் குறிப்பிட்டார். உற்பத்தி, உற்பத்தித்திறன் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதாக பிரதமர் மேலும் கூறினார்.

 

இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட் 'ஜனரஞ்சக பட்ஜெட் அல்ல' என்று வர்ணித்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், அவர்களின் மதிப்பாய்வுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, பட்ஜெட்டின் 'முதன்மைக்  கொள்கைகள்' அல்லது ஒட்டுமொத்த கொள்கை உருவாக்கம் குறித்தும் பேசினார். "அந்த முதன்மைக் கொள்கைகள் -  நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சி" என்றும்  இந்த பட்ஜெட் இந்த கொள்கைகளின் விரிவாக்கம் என்றும் பிரதமர் மோடி கூறினார். 

 

"இந்தியா ஒரு மக்கள் நல நாடு. சாமானிய குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுமே அரசின் முன்னுரிமை" என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருபுறம் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றும், மறுபுறம் தகுதி வாய்ந்த ஒவ்வொரு பயனாளிக்கும் அதன் பலன்களை அரசு எடுத்துச் சென்றது என்றும் அவர் குறிப்பிட்டார். "நாங்கள் நிகழ்காலத்தில் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்திலும் முதலீடு செய்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் உள்ள நான்கு முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், மூலதன செலவினங்கள், நலத்திட்டங்களில் வரலாறு காணாத முதலீடு, வீண் செலவுகள் மீதான கட்டுப்பாடு மற்றும் நிதி கட்டுப்பாடு போன்ற உற்பத்தி செலவினங்கள் சாதனை வடிவில் இருப்பதாகக் கூறினார்.

 

 

தற்போதைய தலைமுறைக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைத் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு  மின்சாரத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், ஒரு கோடி வீடுகளுக்கான மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம்  மூலம் மின் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க முடியும் என்றார். உஜாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட எல்இடி பல்புகள் மின்சாரக் கட்டணங்களில் ரூ .20,000 கோடியை மிச்சப்படுத்த உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

"இந்தியாவின் ஆளுகை மாதிரி ஒரே நேரத்தில் இரண்டு வழிகளில் முன்னேறி வருகிறது" என்று பிரதமர் கூறினார். ஒருபுறம் 20-ம் நூற்றாண்டின் சவால்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகவும், மறுபுறம் 21-ம் நூற்றாண்டின் விருப்பங்களை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதால், அரசாங்கம் வெள்ளை அறிக்கையின் வடிவத்தில் நாட்டின் முன் முழு உண்மையையும் முன்வைத்துள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக்காலம்  இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.  "புதிய இந்தியா அதீத வேகத்துடன் செயல்படும். இதுதான் மோடியின் உத்தரவாதம்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

"இந்தியாவின் ஆளுகை மாதிரி ஒரே நேரத்தில் இரண்டு வழிகளில் முன்னேறி வருகிறது" என்று பிரதமர் கூறினார். ஒருபுறம் 20-ம் நூற்றாண்டின் சவால்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகவும், மறுபுறம் 21-ம் நூற்றாண்டின் விருப்பங்களை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதால், அரசாங்கம் வெள்ளை அறிக்கையின் வடிவத்தில் நாட்டின் முன் முழு உண்மையையும் முன்வைத்துள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக்காலம்  இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.  "புதிய இந்தியா அதீத வேகத்துடன் செயல்படும். இதுதான் மோடியின் உத்தரவாதம்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Ayushman driving big gains in cancer treatment: Lancet

Media Coverage

Ayushman driving big gains in cancer treatment: Lancet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Tamil Nadu meets Prime Minister
December 24, 2024

Governor of Tamil Nadu, Shri R. N. Ravi, met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Governor of Tamil Nadu, Shri R. N. Ravi, met PM @narendramodi.”