Quoteமகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த உதவிய மக்களுக்கு தலைவணங்குகிறேன்: பிரதமர்
Quoteமகா கும்பமேளாவின் வெற்றிக்குப் பலரும் பங்களித்துள்ளனர். அரசு, சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து கர்மயோகிகளையும் பாராட்டுகிறேன்: பிரதமர்
Quoteமகா கும்பமேளாவை நடத்துவதில் 'மாபெரும் முயற்சிகள்' மேற்கொள்ளப்பட்டன: பிரதமர்
Quoteஇந்த மகா கும்பமேளா நிகழ்வு மக்களால் வழிநடத்தப்பட்டதுடன் அவர்களது மனஉறுதி மற்றும் தளராத பக்தியால் உத்வேகம் பெற்றது: பிரதமர்
Quoteபிரயாக்ராஜில் நடைபெற்ற நாட்டின் ஆத்மாவைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த மகா கும்பமேளா குறிப்பிடத்தக்க சாதனையாகும்: பிரதமர்
Quoteமகா கும்பமேளா ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தியுள்ளது:பிரதமர்
Quoteமகா கும்பமேளாவில், அனைத்து வேறுபாடுகளும் மறைந்தன; இதுவே நாட்டின் அபாரமான வலிமை, ஒற்றுமை உணர்வூ நம்மிடையே ஆழமாக வேரூன்றியுள்ளதை இதூ எடுத்துக் காட்டுவதாக உள்ளது: பிரதமர்
Quoteநம்பிக்கை மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கும் உணர்வு இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாகத் திகழ்கிறது: பிரதமர்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மகாகும்பமேளாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்த நாட்டின் எண்ணற்ற மக்களுக்கு, தனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கூறினார். மகா கும்பமேளா நிகழ்வை வெற்றி பெறச் செய்ததில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்களின் கூட்டுப் பங்களிப்பை எடுத்துரைத்த அவர், அரசு மற்றும் சமூகம்  இரண்டில் இருந்தும்  ஈடுபட்ட அனைத்து தர்ப்பினரின் அர்ப்பணிப்புமிக்க பணிகளை அங்கீகரித்து பாராட்டுத் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள்,குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் அளித்த ஆதரவுக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மகா கும்பமேளாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு தேவைப்படும் அளப்பரிய முயற்சிகளை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, கங்கையை பூமிக்குக் கொண்டுவரும்  பகீரதனின் அசாதாரணமான முயற்சியுடன் அதனை ஒப்பிட்டுப் பேசினார். செங்கோட்டையிலிருந்து ஆற்றிய உரையின் போது அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாகப் பிரதமர்  மோடி குறிப்பிட்டார். மகா கும்பமேளா நிகழ்வு நாட்டின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்றும் அவர் கூறினார். மகா கும்பமேளா மக்களின் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். மக்களின் வலுவான  நம்பிக்கையின் காரணமாக இந்த நிகழ்வு வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மகா கும்பமேளாவின் போது காணப்பட்ட தேசிய உணர்வு குறித்த பிரக்ஞையைச் சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தப் பிரக்ஞை புதிய தீர்மானங்களை நோக்கி நாட்டை செலுத்துவதோடு அவற்றை நிறைவேற்றுவதற்கு உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது ன  எடுத்துரைத்தார். நாட்டின் திறன்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்கள், அச்சங்களுக்கு மகா கும்பமேளா நிகழ்வு சிறந்த தீர்வை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நீண்ட பயணத்தை எடுத்துரைத்த திரு மோடி, கடந்த ஆண்டு அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பிராண பிரதிஷ்டா விழாவுக்கும், இந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவு நிகழ்வுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வுகள் அடுத்த நூற்றாண்டை எதிர்கொள்வதற்கு நாடு தயாராக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.  நாட்டின் ஒற்றுமை  உணர்வு அதன் அளப்பரிய ஆற்றலை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மனித வரலாற்றைப் போலவே,  நாட்டின் சரித்திரத்திலும் முக்கிய தருணங்கள் நிகழும் என்பதை எதிர்காலத்  தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல இது சிறந்த உதாரணமாக உள்ளது என்றும் அவர் கூறினார். சுதேசி இயக்கத்தின் போது ஏற்பட்ட ஆன்மீக மறுமலர்ச்சி, சிகாகோ-வில் சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற உரை, 1857-ம் ஆண்டின் எழுச்சி, பகத் சிங்கின் தியாகம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தில்லி சலோ அறைகூவல், மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை போன்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தருணங்களை மேற்கோள் காட்டிய பிரதமர், நாட்டு மகக்ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மகத்தான சாதனைகள் படைக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். பிரயாக்ராஜ் மகா கும்பமேளா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு உணர்வை எடுத்துக் காட்டுவதாகஸஉள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

45 நாட்கள் நடைபெற்ற இந்த மகா கும்பமேளா நிகழ்வின் போது மக்களிள் உற்சாகத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், அடிப்படை வசதிகள் குறித்த கவலைகளுக்கு அப்பாற்பட்டு கோடிக்கணக்கான பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அதில் பங்கேற்றதாகக் கூறினார். மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீரை எடுத்துச் சென்ற பிரதமர், மொரீஷியஸின் கங்கை தலவோவில் அதைக் கலந்தபோது நிலவிய பக்தி, கொண்டாட்ட சூழலை விவரித்தார். இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், மாண்புகளை அரவணைத்து, கொண்டாடி, பாதுகாக்கும் உணர்வை இது பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

பல்வேறு தலைமுறைகளைக் கடந்து நாட்டின் பாரம்பரியம் தடையின்றி தொடர்வது குறித்து குறிப்பிட்ட திரு மோடி, இந்தியாவின் இளைஞர்கள் மகா கும்பமேளா உள்ளிட்ட பிற பண்டிகைகளில் ஆழ்ந்த பக்தியுடன் தீவிரமாகப் பங்கேற்றதையும் எடுத்துரைத்தார். இன்றைய இளைஞர்கள் தங்களது பாரம்பரியம், நம்பிக்கைகளைப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும், இது இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் வலுவான தொடர்பைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு சமூகம் தனது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்ளும்போது, அது மகா கும்பமேளா நிகழ்வு போன்ற பிரம்மாண்டமான மற்றும் எழுச்சியூட்டும் தருணங்களை உருவாக்குகிறது என்று கூறிய திரு மோடி, அத்தகைய பெருமையானது ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் உதவுகிறது என்று கூறினார். இது போன்ற நிகழ்வுகள் நாட்டின் இலக்குகளை அடைவதற்கான தன்னம்பிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்றும் அவர்  கூறினார். பாரம்பரியம், நம்பிக்கை ஆகியவற்றுடனான தொடர்பு சமகால இந்தியாவுக்கு ஒரு மதிப்புவாய்ந்த சொத்தாகத் திகழ்கிறது என்றும், இது நாட்டின் வலிமையான ஒருமைப்பாட்டையும் கலாச்சார வளத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மகா கும்பமேளா பல்வேறு விலைமதிப்பற்ற பலன்களை அளித்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், ஒற்றுமை உணர்வு அதன் புனிதத் தன்மையுமன் கூடிய காணிக்கையாகும் என்றார். பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக  நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மக்கள் தங்களது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு,  ஒற்றுமை உணர்வுடன் வந்திருந்ததை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.ஸபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள் புனிதமான திரிவேணியின் ஒரு அங்கமாக மாறியுள்ளதை எடுத்துரைத்த பிரதமர், தேசியவாதம், நாட்டுப் பற்றை வலுப்படுத்துவதாக அமைந்தது என்று கூறினார். பல்வேறு மொழிகள், பேச்சு வழக்குகளைக் கொண்டுள்ள மக்கள் ஹர ஹர கங்கே என்று கோஷமிட்டபோது, அது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற ஒற்றுமை உணர்வை மேம்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். மகா கும்பமேளா நிகழ்வில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்றதாகவும் இது நாட்டின் வலிமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது என்று திரு மோடி குறிப்பிட்டார். மக்களின் ஒற்றுமை உணர்வு நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் அடையாளமாகத் திகழ்கிறது என்றும் அவர் கூறினார். இது பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் காணமுடிந்ததாகவும் கூறினார்.

மகா கும்பமேளாவில் இருந்து பெற்ற அனுபவங்கள் உத்வேத்தை அளிப்பதாக உள்ளன என்று கூறிய பிரதமர் திரு மோடி, நாட்டில் பரந்த விரிந்துள்ள நதிகள்  குறித்து எடுத்துரைத்தார். ஆற்றுத் திருவிழாக்களின் பாரம்பரியத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதுபோன்ற முயற்சிகள் இன்றைய தலைமுறையினர் நீரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், நதிகளின் தூய்மையை மேம்படுத்தவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும் என்று கூறினார்.

மகா கும்பமேளா நிகழ்வு நாட்டின் வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான வலுவான ஊடகமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து, பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார். மகா கும்பமேளாவை ஏற்பாடு செய்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுத் தெரிவித்த அவர், நாடு முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவையின் சார்பில் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

 

Click here to read full text speech

 

 

 

 

 

 

 

  • Jitendra Kumar March 24, 2025

    🙏❤️🇮🇳
  • AK10 March 24, 2025

    SUPER PM OF INDIA NARENDRA MODI!
  • கார்த்திக் March 23, 2025

    Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏Jai Shree Ram🙏
  • Gaurav munday March 23, 2025

    💙💙🍏💙💙
  • ram Sagar pandey March 23, 2025

    🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय माता दी 🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹जय श्रीराम 🙏💐🌹
  • Deepak March 23, 2025

    🙏🙏🙏
  • JWO Kuna Ram Bera March 23, 2025

    जय श्रीराम जय भारत
  • கார்த்திக் March 22, 2025

    Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺Jai Shree Ram🌺
  • khaniya lal sharma March 22, 2025

    💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙
  • saroj Devi March 22, 2025

    🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Beyond Freebies: Modi’s economic reforms is empowering the middle class and MSMEs

Media Coverage

Beyond Freebies: Modi’s economic reforms is empowering the middle class and MSMEs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 24, 2025
March 24, 2025

Viksit Bharat: PM Modi’s Vision in Action