பசுமை வளர்ச்சிக் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கு கருத்துக்களைக் கோரும் வகையில், பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையக் கருத்தரங்குகளின் முதலாவது பகுதி இதுவாகும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து பட்ஜெட்டுகளும் புதுமைக்கால சீர்திருத்தத்தை முன்னெடுத்து செல்வதுடன் தற்போதைய சவால்களுக்கு தீர்வு காண்கிறது.
பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கான 3 தூண்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். முதலாவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தியை அதிகரித்தல், இரண்டாவது பொருளாதாரத்தில் படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் இறுதியாக நாட்டின் எரிசக்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தையொட்டி விரைவாக செல்லுதல். கடந்த சில ஆண்டுகளாக பட்ஜெட்டில், எத்தனால் கலப்பு, பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், சூரியசக்தி உற்பத்திக்கான ஊக்குவிப்பு, மேற்கூரை சூரியசக்தித் திட்டம், நிலக்கரி வாயு உருவாக்கம் மற்றும் பேட்டரி சேமிப்பு போன்ற வழிமுறைகள் குறித்த அறிவிப்புகளை இந்த உத்தி சுட்டிக்காட்டுகிறது. முந்தைய ஆண்டின் பட்ஜெட்டின் மகத்துவமான அறிவிப்புகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், தொழிற்சாலைகளுக்கான பசுமைக் கடன், விவசாயிகளுக்கான பிரணம் திட்டம், கிராமங்களுக்கான கோபர்தன் திட்டம், நகரங்களுக்கான வாகனக் கழிவுக் கொள்கை, பசுமை ஹைட்ரஜன் மற்றும் ஈர நிலப்பாதுகாப்பு ஆகிய இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டினார். இந்த பட்ஜெட்டின் அறிவிப்பு எதிர்கால தலைமுறையினருக்கான வழிவகைக்கு அடிக்கல் நாட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியாவின் வலிமையான நிலை, உலகின் மாற்றத்தை உறுதி செய்யும் என்று பிரதமர் கூறினார். சர்வதேச பசுமை எரிசக்தி சந்தையில், இந்தியாவின் முன்னணி நாடாக திகழச் செய்வதற்கு இந்த பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அதனால் தான் இன்று உலகில் உள்ள அனைத்து எரிசக்தித்துறை முதலீட்டாளர்களையும், இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். எரிசக்தி விநியோக முறையின், பல்வகைகளுக்கான சர்வதேச முயற்சிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை இந்தப் பட்ஜெட் அளித்துள்ளதாக கூறினார். அத்துடன், ஸ்டார்ட் அப் துறைகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
2014-ம் ஆண்டிலிருந்து பெரிய பொருளாதாரத்திற்கு இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா விரைவுபெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் காலத்திற்கு முன்பாகவே அதன் நோக்கத்தை அடைவதற்கான திறனை இந்தியாவின் பதிவு காட்டுகிறது என்று தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மின் திறனில் புதைப்படிவமற்ற எரிபொருளிலிருந்து 40 சதவீத பங்களிப்பின் இலக்குகளை இந்தியா அடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே பெட்ரோலில் 10 சதவீத எத்தனாலைக் கலக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளதாகவும், 2030-ஆம் ஆண்டுக்குப் பதில் 2025-26-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பை நாடு அடைந்துவிடும் என்று கூறினார். 2023-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் திறனை எட்டிவிடும் என்று அவர் தெரிவித்தார். எரிபொருள் இ-20 தொடங்கப்பட்டது குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், உயிரி எரிபொருளை அரசு வலியுறுத்துவதாகவும், இது முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் வேளாண் கழிவுகளின் மிகுதி குறித்து தெரிவித்த பிரதமர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எத்தனால் ஆலைகளை அமைப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிட வேண்டாம் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் சூரிய சக்தி, காற்று, உயிரி எரிவாயு ஆற்றல் எந்தவொரு தங்க சுரங்கத்திற்கோ அல்லது நமது தனியார் துறையின் எண்ணெய் வளத்திற்கோ குறைவானது அல்ல என்று பிரதமர் கூறினார்.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், 5 எம்எம்டி பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இத்துறையின் தனியார் துறையினருக்கு ரூ.19,000 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எலக்ட்ரோலைசர் உற்பத்தி, பசுமை எஃகு உற்பத்தி, நீண்ட எரிபொருள் செல்கள் போன்ற மற்ற வாய்ப்புகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோபரிலிருந்து (பசு சாணம்) 10,000 மில்லியன் கியூபிக் மீட்டர் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஒன்றரை லட்சம் கியூபிக் மீட்டர் எரிவாயுவில் 8 சதவீதம் அளவிற்கு நாட்டின் நகரப்பகுதிகளுக்கு விநியோகம் செய்ய முடியும் என்று கூறினார். இது போன்ற திறன்களால் கோபர்தன் திட்டம் இந்தியாவின் உயிரி எரிவாயு உத்தியில், முக்கியப் பிரிவாக உள்ளது என்று தெரிவித்தார். இந்தப் பட்ஜெட்டில், கோபர்தன் திட்டத்தின் கீழ் 500 புதிய ஆலைகளை அமைக்க அரசு அறிவித்துள்ளதாகக் கூறினார். இது பழைய ஆலைகளைப் போல் அல்லாமல், நவீன ஆலைகளுக்காக ரூ.10,000 கோடி நிதியை அரசு செலவு செய்யும் என்றும் அவர் கூறினார். வேளாண் கழிவு, நகராட்சி திடக்கழிவு ஆகியவற்றிலிருந்து அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்ய தனியார் துறையினர் சிறந்த ஊக்கத்தொகைகளை பெறுவதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் வாகனக் கழிவுக் கொள்கை குறித்து குறிப்பிட்ட பிரதமர், பசுமை வளர்ச்சி உத்தியில் இது முக்கியப் பகுதியாகும் என்று கூறினார். மத்திய, மாநில அரசுகளின் 3 லட்சம் வாகனங்களை கழிவு செய்வதற்கு இந்தப் பட்ஜெட்டில் ரூ.3,000 கோடி ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதாவது, காவல்துறை வாகனங்கள், மருத்துவ அவசர ஊர்திகள், பேருந்துகள் உள்ளிட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்கள் ஆகும். மறுபயன்பாடு, மறு சுழற்சி, மீட்பு ஆகியவற்றைத் தொடர்ந்து வாகனக் கழிவு, சிறந்த சந்தையாக மாறிவருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இது நமது பொருளாதார சுழற்சிக்கு புதிய வலிமையை அளிப்பதாகவும், பொருளாதார சுழற்சியில், பல்வேறு வகைகளில், இந்திய இளைஞர்கள் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த 6 - 7 ஆண்டுகளில், இந்தியாவின் பேட்டரி சேமிப்புத் திறன் 125 ஜிகாவாட் மணி நேரங்களாக அதிகரிக்க உள்ளது என்று பிரதமர் கூறினார். இத்துறையில் பெரிய நோக்கங்களை அடையும் வகையில் பேட்டரி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் நிதித்திட்டத்தை இந்தப் பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீர்ப்போக்குவரத்து இந்தியாவின் சிறந்த துறையாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் கடல்வழி சரக்குப் போக்குவரத்து தற்போது 5 சதவீதமாக மட்டுமே உள்ளதாகக் கூறிய பிரதமர், அதில் 2 சதவீத சரக்குப் போக்குவரத்து உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மூலம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இந்தியாவின் நீர்வழிப்போக்குவரத்து வளர்ச்சி, இத்துறையில் அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக உரையாற்றிய பிரதமர், பசுமை எரிசக்திக்கான தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை உலகிற்குத் தலைமை தாங்குவதற்கான திறன் இந்தியாவிடம் இருப்பதாகத் தெரிவித்தார். பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அப்பால் உலகளாவிய நன்மைக்கான காரணிகளை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் கூறினார். இந்தப் பட்ஜெட் வாய்ப்பாக மட்டுமல்லாமல் நமது எதிர்கால பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அமல்படுத்துவதற்கு விரைவாக செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார். அரசு உங்களுடனும் உங்களுடைய கருத்துக்களுடனும் உறுதுணையாக உள்ளது என்று பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
மத்திய மின்துறை அமைச்சகத்தின் தலைமையில் நடைபெறும் இணையக் கருத்தரங்கில், பசுமை வளர்ச்சியின் ஆற்றல் மற்றும் ஆற்றல் அல்லாத அம்சங்கள் இரண்டையும் உள்ளடக்கிய ஆறு அமர்வுகள் இருக்கும். தொடர்புடைய மத்திய அரசு அமைச்சகங்களின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மாநில அரசுகள், தொழில்துறை, கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், இந்த இணையக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகளை வழங்குவார்கள்
பசுமை வளர்ச்சி என்பது 2023-24 மத்திய பட்ஜெட்டில் பசுமை தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை மற்றும் நிலையான ஆற்றல் ஆகியவற்றை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஏழு முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இது பெரும் எண்ணிக்கையிலான பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மத்திய பட்ஜெட் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பல திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை முன்வைத்துள்ளது. பசுமை ஹைட்ரஜன் இயக்கம், எரிசக்தி மாற்றம், எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வெளியேற்றம், பசுமைக் கடன் திட்டம், பிரதமரின் பிரணம் திட்டம், கோபர்தன் திட்டம், பாரதிய பிரகிருதிக் கெதி உயிர் உள்ளீடு வள மையங்கள், மிஷ்தி, அம்ரித் தரோஹர், கடலோரக் கப்பல் மற்றும் வாகன மாற்றம்.
ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கும் மூன்று அமர்வுகளைக் கொண்டிருக்கும். இது பிரதமரின் உரையுடன் தொடங்கும். இந்த அமர்வைத் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் தனித்தனி அமர்வுகள் தொடர்ந்து நடைபெறும். இறுதியாக, அமர்வுகளின் யோசனைகள் அனைத்தும் இறுதி அமர்வின் போது முன்வைக்கப்படும். இணையக் கருத்தரங்கின்போது பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவுக்கான செயல் திட்டத்தை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தயாரிக்கும்.
கடந்த சில ஆண்டுங்களில் அரசு பல்வேறு பட்ஜெட் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பட்ஜெட் தேதி முன்கூட்டியே பிப்ரவரி 1 ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் அமலாக்கத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான மற்றொரு படி, பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்களின் புதிய சிந்தனையாகும். பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், கல்வித்துறை, தொழில்துறை மற்றும் துறையில் உள்ள பயிற்சியாளர்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து, துறைகள் முழுவதிலும் குறிக்கோள்களை செயல்படுத்துவதில் ஒத்துழைப்புடன் செயல்பட பிரதமரால் இந்த உத்தி வடிவமைக்கப்பட்டது. இந்த இணையக்கருத்தரங்குகள் 2021-இல் தொடங்கப்பட்டது.
காலாண்டு இலக்குகளுடன் செயல்திட்டங்களை தயாரிப்பதையொட்டி அனைத்து அமைச்சர்கள், துறைகள், தொடர்புடையவர்கள், முயற்சிகளை மேற்கொள்வதற்கு இணையக் கருத்தரங்குகள் கவனம் செலுத்தும்.
हमारी सरकार का हर बजट वर्तमान चुनौतियों के समाधान के साथ ही New Age Reforms को आगे बढ़ाता रहा है। pic.twitter.com/xtI1JTc7tM
— PMO India (@PMOIndia) February 23, 2023
Green Growth और Energy Transition के लिए भारत की रणनीति के तीन मुख्य स्तंभ रहे हैं। pic.twitter.com/zxtH1JNrYD
— PMO India (@PMOIndia) February 23, 2023
Green Growth को लेकर इस साल के बजट में जो प्रावधान किए गए हैं, वो एक तरह से हमारी भावी पीढ़ी के उज्जवल भविष्य का शिलान्यास हैं। pic.twitter.com/B41gYiYO8W
— PMO India (@PMOIndia) February 23, 2023
भारत renewable energy resources में जितना commanding position में होगा उतना ही बड़ा बदलाव वो पूरे विश्व में ला सकता है। pic.twitter.com/pFyCCAqiDg
— PMO India (@PMOIndia) February 23, 2023
भारत की Vehicle Scrapping Policy, green growth strategy का एक अहम हिस्सा है। pic.twitter.com/KvAuwtu2Qd
— PMO India (@PMOIndia) February 23, 2023
भारत Green Energy से जुड़ी टेक्नॉलॉजी में दुनिया में लीड ले सकता है। pic.twitter.com/46QSj13FZZ
— PMO India (@PMOIndia) February 23, 2023