“Victory is ensured when there is learning involved”
“The youth of Rajasthan always come ahead of the rest when it comes to the security of the nation”
“The successful organisation of Jaipur Mahakhel is the next important link towards India’s efforts”
“The country is forging new definitions and creating a new order in the Amrit Kaal”
“The Sports Budget of the country has increased almost three times since 2014”
“Sports universities are being set up in the country, and big events like Khel Mahakumbh are also being organised in a professional manner”
“Our government is attentive that no youth should be left behind due to lack of money”
“You will be fit, only then you will be superhit”
“Rajasthan's Shree Anna-Bajra and Shree Anna-Jwar are the identity of this place”
“Today's youth does not want to remain confined to just one field due to their multi-talented and multi-dimensional capabilities”
“Sports is not just a genre, but an industry”
“When efforts are made wholeheartedly, results are assured”
“The next gold and silver medalists for the country will emerge from among you”

ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். விழாவில் கபடி போட்டியையும் அவர் பார்வையிட்டார். ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினரான திரு ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 2017 ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் மகாகேல் விழாவை நடத்தி  வருகிறார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்த மெகா போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் பங்கேற்பதற்காக மட்டும் வீரர்கள் விளையாடவில்லை, வெற்றி பெறவும், கற்றுக் கொள்வதற்காகவும் விளையாட்டுத் துறையை அலங்கரித்ததாக அவர் குறிப்பிட்டார். “கற்றல் ஈடுபாடு இருந்தால் வெற்றி உறுதி”, எந்த ஒரு வீரரும் விளையாட்டுத் துறையை வெறுங்கையுடன் விட்டுவிடுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பெயரை விளையாட்டுத் துறையில் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்ற பல புகழ்பெற்ற வீரர்களான  ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற ராம் சிங்,  தியான்சந்த் கேல் ரத்னா விருது பெற்ற பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா, அர்ஜுன். விருது பெற்ற சாக்ஷி குமாரி ஆகியோரின் பெயர்களைக்குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் புகழ்பெற்ற பல மூத்த விளையாட்டு வீரர்கள், ஜெய்ப்பூர் மஹாகேலில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பது குறித்து  மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கேல் மகாகும்ப் விழாக்களின் தொடர் நிகழ்வுகள் மகத்தான மாற்றங்களின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். ராஜஸ்தான் மாநிலம் இளைஞர்களின் ஆர்வத்துக்கும் வீரியத்துக்கும் பெயர் பெற்றதாகக் குறிப்பிட்ட பிரதமர், மண்ணின் பிள்ளைகள் தங்கள் வீரத்தால் போர்க்களங்களை விளையாட்டுக் களமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு சரித்திரமே சான்று என்றார். "தேசத்தின் பாதுகாப்பு என்று  வரும்போது ராஜஸ்தானின் இளைஞர்கள் எப்போதும் மற்றவர்களை விட முன்னோக்கி வருகிறார்கள்", பிராந்திய இளைஞர்களின் மனம் மற்றும் உடல் திறன்களை வடிவமைப்பதற்காக ராஜஸ்தானின் விளையாட்டு மரபுகளை அவர் பாராட்டினார். மகர சங்கராந்தியின் போது ஒழுங்கமைக்கப்பட்ட தாதா, சிடோலியா மற்றும் ருமல் ஜப்பட்டா போன்ற பாரம்பரிய விளையாட்டுகளின் உதாரணங்களை அவர் குறிப்பிட்டார், மேலும் அவை பல நூறு ஆண்டுகளாக ராஜஸ்தானின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஏராளமான விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுப் பங்களிப்பால் மூவர்ணக் கொடியை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றதைக் குறிப்பிட்ட பிரதமர், ஜெய்ப்பூர் மக்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒருவரைத் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததைச் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் பங்களிப்பைக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்களிப்பதன் மூலம் இளைய தலைமுறையினருக்குத் திரும்பக் கொடுப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் விரிவான பலன்களுக்காக இதுபோன்ற முயற்சிகளை விரிவுபடுத்துவதை வலியுறுத்திய பிரதமர், ஜெய்ப்பூர் மஹாகேலின் வெற்றிகரமான ஏற்பாட்டை இந்த முயற்சிகளுக்கான அடுத்த முக்கிய இணைப்பாகக் குறிப்பிட்டார். ஜெய்ப்பூர் மகாகேலின் வெற்றியை எடுத்துரைத்த பிரதமர், இந்த ஆண்டுக்கான போட்டியில் 600க்கும் மேற்பட்ட அணிகளும், 6,500 இளைஞர்களும் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவித்தார். 125 க்கும் மேற்பட்ட பெண்கள் அணிகள் பங்கேற்றது  ஒரு இனிமையான செய்திஆகும் என அவர் குறிப்பிட்டார்.

 “சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், நாடு புதிய வரையறைகளை உருவாக்கி புதிய ஒழுங்கை உருவாக்குகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார். விளையாட்டின் முடிவுகள்  அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் விளையாட்டு வீரர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை, அவர்களின் திறன்கள், சுயமரியாதை, தன்னம்பிக்கை, வசதிகள் மற்றும் வளங்களின் வலிமையை உணர்ந்து கொள்ளும்போது ஒவ்வொரு நோக்கமும் எளிதாகிவிடும் என்றார் அவர்.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் அவ்வாறான அணுகுமுறையை காணமுடியும் என்று பிரதமர் கூறினார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு ரூ. 800-850 கோடியாக இருந்த விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கான ஒதுக்கீடு, இந்த ஆண்டு ரூ 2500 கோடி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். “நாட்டின் விளையாட்டு பட்ஜெட் 2014ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது” என்றார் அவர். நாட்டின் விளையாட்டு வசதிகள் மற்றும் வளங்களை மேம்படுத்துவதற்காக செலவிடப்படும் ‘கேலோ இந்தியா’ பிரச்சாரத்திற்கு மட்டும் ரூ.1000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆர்வத்திற்கும் திறமைக்கும் குறைவில்லை என்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்திய இளைஞர்களிடையே விளையாட்டுக்காக, ஆனால் அரசிடம்  இருந்து ஒத்துழைப்பு  மற்றும் ஆதரவு கிடைக்காதது தடைகளை உருவாக்கியது. விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படுகின்றன என்று அவர் கூறினார். கடந்த 5-6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஜெய்ப்பூர் மகாகேலை உதாரணமாகக் கூறிய பிரதமர், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் திறமைகளை முன்னுக்கு கொண்டு  வரும் பிஜேபியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கேல் மஹாகும்ப் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால், இந்த வெற்றிகள் மத்திய அரசையே சேரும் என்றார் பிரதமர்.  நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களைக் கருத்தில்கொண்டே இந்த விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், அதன் ஒருபகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில்  விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார். இன்றைக்கு விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும்,கேல் மஹாகும்ப் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பான  வகையில்  நடத்தப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார். தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிகபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  விளையாட்டு மேலாண்மை மற்றும் விளையாட்டு தொழில்நுட்பங்கள் சார்ந்த அனைத்து அம்சங்களையும் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர், இந்தத் துறையை இளைஞர்கள் தங்கள் தொழிலாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்றார்.

இளைஞர்கள் பணம்  இல்லாததால், சிறந்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் எனது அரசு கவனமாக இருக்கிறது என மேற்கோள் காட்டிய பிரதமர், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கி வருவதையும்  சுட்டிக்காட்டினார்.  முக்கியமான விளையாட்டு விருதுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகையும் 3 மடங்கு அதிகரிப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், டிஓபிஎஸ் போன்றத் திட்டங்களில், வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்காகத் தயாராக ஆதரவு அளிக்கப்படுவதை  உதாரணமாகக் காட்டினார்.  ஒலிம்பிக்ஸ் போன்ற சர்வதேச  அளவிலான மிகப்பெரியப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு  அரசு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பதாகவும் கூறினார்.

விளையாட்டுத்துறை மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது  அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது  மிகவும்  முக்கியமானது என்றும் கூறினார்.  இதைத்தான், நீங்கள் ஃபிட்டாக இருப்பீர்கள், அப்போதுதான் சூப்பர் ஹிட் ஆவீர்கள் என  கேலோ இந்தியா, ஃபிட் இந்தியா  விழிப்புணர்வு வாசகங்களில் இடம்பெற்றிருப்பதை வலியுறுத்திய அவர், உடலைக் கட்டுக்கோப்பாக  வைத்துக்கொள்வதில், ஊட்டச்சத்துக்களின் இன்றியமையாத பங்கு என்றும் குறிப்பிட்டார்.   ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டை   சிறுதானிய ஆண்டாக அறிவித்திருப்பதை நினைவுகூர்ந்த பிரதமர்,  ஸ்ரீ அன்னா எனப்படும், சிறுதானியங்களின்  தொன்மைமிக்க பாரம்பரியம் கொண்டது ராஜஸ்தான் என்றார்.   ராஜஸ்தானின் ஸ்ரீ அன்னா-பஜ்ரா, ஸ்ரீ அன்னா-ஜ்வர் ஆகியவை இந்த இடத்தின் அடையாளங்கள் என்றும் கூறினார். பஜ்ரா பொரிட்ஜ் மற்றும் சுர்மா இங்கு தயாரிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர்,  அனைத்து இளைஞர்களும் ஸ்ரீ அன்னாவை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதுடன், அதன் தூதுவர்களாக மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இளைஞர்களின்  வளர்ச்சிக்காகவே நாடு பாடுபடுகிறது என்ற பிரதமர், அதேநேரத்தில்,  இன்றைய இளைஞர்கள் தங்கள் பன்முகத் திறமை மற்றும் பல பரிணாமத் திறன்களை ஒரே துறையுடன் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.  ஒருபுறம், நவீன விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் அதேவேளையில்,  மறுபுறம்,  இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கவும்  பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக்  கூறினார். நகரம் முதல் கிராமம் வரை  அமைக்கப்படும் இந்த நூலகத்தில், குறிப்பாக அறிவியல், சமஸ்கிருதம், வரலாறு போன்ற அனைத்து பாடங்களிலும், புத்தகங்கள் இடம்பெறும் என்றார்.

 விளையாட்டு ஒரு வகை மட்டுமல்ல, ஆனால் ஒரு தொழில் என்று குறிப்பிட்டப் பிரதமர், விளையாட்டு மற்றும் விளையாட்டு வளம் சார்ந்த  பொருட்களை  உற்பத்தி செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலைவாய்ப்பை பெறுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். விளையாட்டுத் துறை சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில்,  பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றதையும் நினைவுகூர்ந்தார்.  பிரதமரின் விஸ்வகர்மா கவுஷல் சம்மான் திட்டம்,  திறமைசாலிகளுக்கும்,  கைவினைக் கலைஞர்களுக்கும்,  உதவுவதற்காக உருவாக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.  இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், நிதியுதவியும் அளித்து, அவர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படுவதாகக் கூறினார்.

நாம் முழுமனதோடு முயற்சியை மேற்கொள்ளும்போது,   அதற்கான வெற்றி உறுதி செய்யப்படுகிறது என்பதற்கு ஏற்ப, டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்கு  இந்திய வீரர்கள்  கடினமாக உழைத்ததால், கிடைத்த வெற்றியை நாம் அனைவரும் அறிவோம் என்றார். அதேபோல் ஜெய்ப்பூர் மஹாகேல்-லுக்காக போடப்படும் கடின உழைப்புக்கு,  எதிர்காலத்தில், வியக்கத்தக்க வெற்றிகளை நாம் அடையப் போகிறோம் என்றும், அடுத்த தங்கம் மற்றும் வெள்ளிப்பதங்ககங்கள் உங்களில் இருந்து நாட்டிற்குக் கிடைக்கப்போகிறது என்றும் கூறினார். நீங்கள் மனம் வைத்தால், ஒலிம்பிக்கிலும் இந்தியாவின் பெருமை உலகிற்கு உணர்த்த முடியும், நீங்கள் எங்கே சென்றாலும், நாட்டிற்காக விருதுகளைக் கொண்டு வருவீர்கள்,   நமது இளைஞர்கள் நாட்டின் வெற்றியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்வார்கள் எனக்கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.

ஜெய்ப்பூர் ரூரல் தொகுதி மக்களவை உறுப்பினர்  திரு. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்  உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi