The Rule of Law has been a core civilizational value of Indian society since ages: PM Modi
About 1500 archaic laws have been repealed, says PM Modi
No country or society of the world can claim to achieve holistic development or claim to be a just society without Gender Justice: PM Modi

புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.  உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், பிரபல வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

     உலகிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நம்பிக்கையை அளிக்கும் நீதித்துறையினரின் நிகழ்ச்சியில் தாமும் பங்கு பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்த நீதித்துறை மாநாடு 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தின் தொடக்கத்தில் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.

     இந்த தசாப்தத்தில், இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் துரித மாற்றங்கள் நடைபெற்று வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மாற்றங்கள் நடைபெறுவதாகக் கூறிய அவர், இந்த மாற்றங்கள், தர்க்க ரீதியிலும் சம நீதி அடிப்படையிலும் நடைபெறுவதாகத் தெரிவித்தார். “எனவே, இந்த மாநாட்டின் தலைப்பு, “நீதித்துறையும் மாறிவரும் உலகமும்” என்று வைத்திருப்பது மிகவும் பொருத்தமானது, குறிப்பிடத்தக்கது” என்று அவர் தெரிவித்தார்.      

     “தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளை நாடு கொண்டாடிவரும் வேளையில், இந்த மாநாடு நடைபெறுகிறது” என்றும் அவர் கூறினார்.  ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் வழக்குகளைப் பெறுவதற்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருந்ததால், அதனை ஏற்க மகாத்மா மறுத்ததை நினைவுகூர்ந்த பிரதமர், நேர்மை மற்றும் தாம் ஏற்றுக் கொள்ளும் பணி மற்றும் இந்தியப் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றின் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

     “சட்டம் என்பது அரசனுக்கெல்லாம் அரசன், சட்டமே அனைத்திற்கும் மேலானது” என்பதை அடிப்படையாகக் கொண்டதே இந்தியாவின் தத்துவம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

     இந்தத் தத்துவத்தின் மீது, 130 கோடி இந்திய மக்களும் நம்பிக்கை வைத்து, சமீபத்திய தீர்ப்புகளை அமைதியான முறையில் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

     “சட்டம் என்பது அரசனுக்கெல்லாம் அரசன், சட்டமே அனைத்திற்கும் மேலானது” என்பதை அடிப்படையாகக் கொண்டதே இந்தியாவின் தத்துவம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

     இந்தத் தத்துவத்தின் மீது, 130 கோடி இந்திய மக்களும் நம்பிக்கை வைத்து, சமீபத்திய தீர்ப்புகளை அமைதியான முறையில் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

      “அரசியல் சாசனம் என்பது ஒரு வழக்கறிஞர் தயாரித்த சாதாரண ஆவணம் அல்ல, இது வாழ்க்கைக்கான ஒரு எந்திரம் என்பதோடு, அதிலுள்ள அம்சங்கள் எந்தக் காலத்திலும் பின்பற்றக் கூடியவை” என்று டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கூறியதை சுட்டிக்காட்டிய பிரதமர், அவரது இந்த உணர்வு நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களால் முன்னெடுத்துச் செல்லப்படுவதோடு, நமது சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் நிர்வாக துறைகளால் உயிர்ப்புடன் வைத்திருக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

     “அவரவர் அதிகார வரம்புகளை உணர்ந்து, அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், அரசியல் சாசனத்தின் மூன்று தூண்களும் பெரும்பாலும் நாட்டிற்கு சரியான வழிகாட்டி வருவதாக அவர் கூறினார்.  கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் இந்தப் பாரம்பரியத்தை வலுப்படுத்தியுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

     நாட்டில் நடைமுறையில் இருந்த சுமார் 1,500 பழமையான சட்டங்கள் ஒழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், வேகமாகச் செல்லும் உலகிற்கேற்ப, சமுதாயத்தை வலுப்படுத்தக் கூடிய பல்வேறு புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார்.

     ‘பாலின உலகம்’ என்ற அம்சம் இந்த மாநாட்டில் சேர்க்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். “உலகில் உள்ள எந்த நாடோ, சமுதாயமோ பாலின நீதியை நிலைநாட்டாமல், ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைய முடியாது அல்லது நீதி நிலைநாட்டப்பட்டதாக கூறமுடியாது” என்றும் அவர் தெரிவித்தார். ராணுவ சேவைகளுக்கு பெண்களை தேர்வு செய்வது, போர் விமானிகள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் சுரங்கங்களில் இரவு நேரத்திலும் பணியாற்றுவதற்கான சுதந்திரம் உட்பட பாலின சமத்துவத்தை நிலைநாட்ட, தமது அரசு மேற்கொண்ட பல்வேறு மாற்றங்களையும் பிரதமர் பட்டியலிட்டார். உலகிலேயே, பணியாற்றும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 26 வார கால விடுப்பு வழங்கிய ஒரு சில நாடுகளில் தற்போது இந்தியாவும் ஒன்றாகத் திகழ்வதை அவர் சுட்டிக்காட்டினார்.

     வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீதித்துறை சம நிலையை கடைபிடிப்பதற்காகவும், இந்த விவகாரத்தில் நீதித்துறை தொடர்ந்து வழிகாட்டி வருவதற்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், கட்டமைப்பு வசதிகளை புதிதாக உருவாக்கும் வேளையில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பதை இந்தியா எடுத்துரைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

     விரைவாக நீதி வழங்குவதற்கு நவீன தொழில்நுட்பம் அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர், மின்னணு நீதிமன்றம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஒருங்கிணைப்பதை ஒரு இயக்கமாக மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். “தேசிய நீதித்துறை புள்ளி விவரத் தொகுப்பு ஒன்றை உருவாக்குவது நீதிமன்ற நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும்” என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித மனசாட்சி ஆகியவற்றுக்கு இடையேயான ஒற்றுமையும், இந்தியாவின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Ray Dalio: Why India is at a ‘Wonderful Arc’ in history—And the 5 forces redefining global power

Media Coverage

Ray Dalio: Why India is at a ‘Wonderful Arc’ in history—And the 5 forces redefining global power
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays tributes to Shri Atal Bihari Vajpayee ji at ‘Sadaiv Atal’
December 25, 2025

The Prime Minister, Shri Narendra Modi paid tributes at ‘Sadaiv Atal’, the memorial site of former Prime Minister, Atal Bihari Vajpayee ji, on his birth anniversary, today. Shri Modi stated that Atal ji's life was dedicated to public service and national service and he will always continue to inspire the people of the country.

The Prime Minister posted on X:

"पूर्व प्रधानमंत्री श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी की जयंती पर आज दिल्ली में उनके स्मृति स्थल ‘सदैव अटल’ जाकर उन्हें श्रद्धांजलि अर्पित करने का सौभाग्य मिला। जनसेवा और राष्ट्रसेवा को समर्पित उनका जीवन देशवासियों को हमेशा प्रेरित करता रहेगा।"