ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 மாபெரும் நிறைவு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
விழாவில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். கேரள மாநிலத்தை சேர்ந்த 6 பேரிடம், பழங்கால கோயில் கல்வெட்டுகளில் உள்ள உரைகளை தேவநாகரி மொழியில் மொழிபெயர்க்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பெண்கள் குழுவினரும், திட்டத்தின் கண்டுபிடிப்புகள், நன்மைகள் மற்றும் செயல்முறை குறித்து விவரித்தனர். செங்கோட்டையிலிருந்து பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று, தாங்கள் செயலாற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த ஆக்சுவேட்டர்ஸ் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. வளைந்த கால்கள், முழங்காலில் நடப்பவர்களுக்கு, தமிழ்நாடு ஆக்சுவேட்டர்ஸ் குழுவினரின், 'பிரேராக்' உதவி புரிவதாக அவர்கள் தெரிவித்தனர். மருத்துவ உபகரணங்கள் துறையில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022-ன் இளையோர் குழுவில் வெற்றி பெற்ற குஜராத்தைச் சேர்ந்த சிறுவன் விராஜ் விஸ்வநாத் மராத்தே,
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 இளையோர் பிரிவில் வெற்றி பெற்ற குஜராத்தை சேர்ந்த சிறுவன் விராஜ் விஸ்வநாத் மராத்தே, உலகளாவிய உடல்நலப் பிரச்சினையான டிமென்சியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எச்கேம் என்ற மொபைல் கேம் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார். யோகா நிறுவனங்களுடனான தொடர்பு பற்றிய பிரதமரின் கேள்விக்கு பதிலளித்த விராஜ், முதியவர்களுக்கான சில ஆசனங்களை பரிந்துரை செய்த யோகா பயிற்றுவிப்பாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவித்தார்.
விழாவில் உரையாற்றிய பிரதமர், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் அனைவருக்குமான ஒரு பொதுவான இயக்கமாக மாறியுள்ளதாகவும், இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். “சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து, அதற்காக மிகப்பெரிய இலக்குகளுடன் பயணித்து வருவதாக தெரிவித்தார். இந்த இலக்குகளை அடைவதற்காக, கண்டுபிடிப்புகளுக்கு வணக்கம் செய்வோம் என்ற முழக்கத்துடன், பட்டொளி வீசும் புதுமைப்பித்தன்கள் நீங்கள்தான்” என்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நாடு வெற்றி பெற வேண்டிய அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். “உங்களின் புதுமையான சிந்தனைகள், எண்ணங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு செல்லும்” என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
லட்சிய சமுதாயம் குறித்த தனது சுதந்திரதின பிரகடனத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திய பிரதமர், இந்த லட்சிய சமுதாயம் வரும் 25 ஆண்டுகளில் மிகப்பெரிய உந்து சக்தியாக செயல்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள், கனவுகள் மற்றும் சவால்கள் புதுமையை விரும்புவோருக்கு பல வாய்ப்புகளை முன்வைக்கும் என்றார்.
நாடு, கடந்த 7-8 ஆண்டுகளில் தொடர் புரட்சிகளின் மூலம் வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் கூறினார். “ இந்தியாவில் தற்போது உள்கட்டமைப்புத்துறை, சுகாதாரத்துறை, டிஜிட்டல் துறை, தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகிய துறைகளில் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்றும், ஒவ்வொரு துறையையும் நவீன மயமாக்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் ஏற்படும் புதிய சவால்களுக்கு, புதிய தீர்வுகளை கண்டறிய வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். விவசாயத்துறையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். அனைத்து கிராமங்களிலும் கண்ணாடி இழை கம்பிவட இணைப்பு மற்றும் 5 ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பத்தாண்டுகளுக்குள் 6ஜி தொழில்நுட்ப தயாரிப்புகள், விளையாட்டு சூழல்களை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் கேட்டு கொண்டார். இந்திய கண்டுபிடிப்புகள் எப்போதும் அதிக போட்டித்தன்மை வாய்ந்த, குறைந்த விலையில் நிலையான, பாதுகாப்பான மற்றும் சிறந்த அளவிலான தீர்வுகளை அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே, உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் உற்று நோக்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
अब से कुछ दिन पहले ही हमने आजादी के 75 वर्ष पूरे किए हैं।
— PMO India (@PMOIndia) August 25, 2022
आजादी के 100 वर्ष होने पर हमारा देश कैसा होगा, इसे लेकर देश बड़े संकल्पों पर काम कर रहा है।
इन संकल्पों की पूर्ति के लिए ‘जय अनुसंधान’ के उद्घोष के ध्वजा वाहक आप innovators हैं: PM @narendramodi
भारत में आज Digital Revolution हो रहा है।
— PMO India (@PMOIndia) August 25, 2022
भारत में आज Technology Revolution हो रहा है।
भारत में आज Talent Revolution हो रहा है: PM @narendramodi
पिछले 7-8 वर्षों में देश एक के बाद एक Revolution करते हुए तेजी से आगे बढ़ रहा है।
— PMO India (@PMOIndia) August 25, 2022
भारत में आज Infrastructure Revolution हो रहा है।
भारत में आज Health Sector Revolution हो रहा है: PM @narendramodi
भारत में इनोवेशन का कल्चर बढ़ाने के लिए हमें दो बातों पर निरंतर ध्यान देना होगा।
— PMO India (@PMOIndia) August 25, 2022
Social support और institutional support: PM @narendramodi
समाज में innovation as a profession की स्वीकार्यता बढ़ी है।
— PMO India (@PMOIndia) August 25, 2022
ऐसे में हमें नए ideas और original thinking को भी स्वीकार करना होगा।
रिसर्च और इनोवेशन को way of working से way of living बनाना होगा: PM @narendramodi
21वीं सदी का आज का भारत, अपने युवाओं पर भरपूर भरोसा करते हुए आगे बढ़ रहा है।
— PMO India (@PMOIndia) August 25, 2022
इसी का नतीजा है कि आज innovation index में भारत की रैकिंग बढ़ गई है।
पिछले 8 वर्षों में पेटेंट की संख्या 7 गुना बढ़ गई है।
यूनिकॉर्न की गिनती भी 100 के पार चली गई है: PM @narendramodi