"பேராசை உண்மையை உணரவிடாமல் தடுக்கிறது"
"ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற கடுமையான கொள்கையை இந்தியா கொண்டுள்ளது"
"ஊழலை ஒழிப்பது மக்களுக்கான அரசின் புனிதமானக் கடமையாகும்"
"சரியான நேரத்தில் சொத்துத் தடமறிதல் மற்றும் குற்றத்தின் வருவாயை அடையாளம் காண்பது சம அளவில் முக்கியமானது"
"மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வலுவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் ஜி 20 நாடுகள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் "
"நமது நிர்வாக மற்றும் சட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது மதிப்பு அமைப்புகளில் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்"

கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

கொல்கத்தாவில் உள்ள நோபல் பரிசு பெற்ற குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் நகருக்கு பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், இது முதல் ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டம் என்று கூறினார். தாகூரின் எழுத்துக்களைக் குறிப்பிட்ட பிரதமர், பேராசைக்கு எதிராக எச்சரித்தார், ஏனெனில் அது உண்மையை உணர விடாமல் தடுக்கிறது. 'பேராசை வேண்டாம்' என்று பொருள்படும் 'மா கிரிதா'வுக்குப் பாடுபடும் பண்டைய இந்திய உபநிடதங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.

ஊழலின் மிக உயர்ந்த தாக்கத்தை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் சுமக்கிறார்கள் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இது வளப் பயன்பாட்டை பாதிக்கிறது, சந்தைகளை சிதைக்கிறது, சேவை வழங்கலை பாதிக்கிறது,  இறுதியில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கிறது என்று அவர் மேலும் கூறினார். அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யரைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தின் வளங்களை மேம்படுத்தி அதன் மக்களின் நலனை அதிகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்று கூறினார். இந்த இலக்கை அடைய ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இது மக்களுக்கு அரசாங்கத்தின் புனிதமான கடமை என்றும் கூறினார்.

"ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்" என்ற கண்டிப்பானக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், வெளிப்படையான மற்றும் பொறுப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்தியா தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமையைப் பயன்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டினார். மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அரசுத் திட்டங்களில் உள்ள கசிவுகள் மற்றும் இடைவெளிகள் சரி செய்யப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக, இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 360 பில்லியன் டாலருக்கும் அதிகமான நேரடிப் பலன் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளனர். இதனால் 33 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை சேமிக்க உதவியுள்ளது என்று பிரதமர் கூறினார். வணிகங்களுக்கான பல்வேறு நடைமுறைகளை அரசாங்கம் எளிமைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்த பிரதமர், வாடகைக் கோரும் வாய்ப்புகளை நீக்கிய அரசு சேவைகளின் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலின் செயல்பாட்டை எடுத்துக்காட்டினார். "எங்கள் அரசாங்க இ-சந்தை அல்லது ஜெம் (ஜிஇஎம்) தளம், அரசாங்கக் கொள்முதலில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது", என்று அவர்  கூறினார். 2018 ஆம் ஆண்டில் பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிரானச் சட்டம் இயற்றப்பட்டது குறித்து பேசிய பிரதமர், பொருளாதாரக் குற்றவாளிகளை அரசாங்கம் தீவிரமாக பின்தொடர்கிறது என்றும், பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் தப்பியோடியவர்களிடமிருந்து 1.8 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை மீட்டெடுப்பது குறித்தும் தெரிவித்தார். 2014 முதல் 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்க உதவிய பணமோசடி தடுப்புச் சட்டத்தையும் அவர் குறிப்பிட்டார்.

 

2014 ஆம் ஆண்டில் தனது முதல் ஜி-20 உச்சிமாநாட்டின் உரையில் அனைத்து ஜி 20 நாடுகளுக்கும் உலகளாவிய தெற்கிற்கும், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளின் சவால்கள் குறித்து பேசியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். 2018 ஆம் ஆண்டில் ஜி -20 உச்சிமாநாட்டில் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் சொத்து மீட்புக்கான ஒன்பது அம்ச நிகழ்ச்சி நிரலை முன்வைத்ததையும் அவர் குறிப்பிட்டார், மேலும் பணிக்குழுவால் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தகவல் பகிர்வு மூலம் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு, சொத்து மீட்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளின் ஒருமைப்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முன்னுரிமைத் துறைகளில் நடவடிக்கை சார்ந்த உயர் மட்டக் கொள்கைகளை பிரதமர் வரவேற்றார். சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையே முறைசாரா ஒத்துழைப்பு குறித்து ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது, இது குற்றவாளிகள் எல்லைகளைக் கடக்கும்போது சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சரியான நேரத்தில் சொத்து தடமறிதல் மற்றும் குற்றங்களின் வருவாயை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், நாடுகள் தங்கள் உள்நாட்டு சொத்து மீட்பு வழிமுறைகளை மேம்படுத்த ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வெளிநாட்டு சொத்துக்களை மீட்டெடுப்பதை விரைவுபடுத்துவதற்கு தண்டனையற்ற பறிமுதல்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஜி 20 நாடுகள் ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்று திரு மோடி பரிந்துரைத்தார், மேலும் உரிய நீதிமன்ற செயல்முறைக்குப் பிறகு குற்றவாளிகள் விரைவாக திரும்புவதையும் நாடு கடத்துவதையும் உறுதி செய்யும் என்று கூறினார். "ஊழலுக்கு எதிரான நமது கூட்டுப் போராட்டம் குறித்து இது ஒரு வலுவான சமிக்ஞையை அனுப்பும்", என்று அவர் வலியுறுத்தினார்.

 

ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் ஜி 20 நாடுகளின் கூட்டு முயற்சிகள் கணிசமாக ஆதரிக்க முடியும் என்றும், மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஊழலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் வலுவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் தணிக்கை நிறுவனங்களின் பங்கு குறித்தும் திரு மோடி எடுத்துரைத்தார்.  நமது நிர்வாக மற்றும் சட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதோடு, மதிப்பு அமைப்புகளில் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை வளர்க்குமாறு பிரமுகர்களை அவர் வலியுறுத்தினார். "அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே, ஒரு நியாயமான மற்றும் நிலையான சமூகத்திற்கான அடித்தளத்தை அமைக்க முடியும். உங்கள் அனைவருக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான சந்திப்புக்கு நான் வாழ்த்துகிறேன்", என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi