பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று ‘’ முதலில் டெபாசிட்தாரர்கள்; ரூ.5 லட்சம் வரை காலவரம்புடன் கூடிய வைப்புத்தொகை காப்பீட்டு உத்தரவாதம்’’என்னும் விழாவில் உரையாற்றினார். மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை இணையமைச்சர், ஆர்பிஐ ஆளுநர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சில டெபாசிட்தாரர்களுக்கு காசோலைகளையும் பிரதமர் வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர். இன்று வங்கித்துறைக்கும், நாட்டில் கோடிக்கணக்கான வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மிகவும் முக்கியமான நாள்; பல பத்தாண்டுகளாக இருந்து வந்த பெரிய பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதை கண்ட நாள் என்று கூறினார். டெபாசிட்தாரர்கள்தான் முதலில் என்ற உணர்வு மிகவும் அர்த்தமுள்ளதாகும். பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கள் பணத்தை ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள் கடந்த சில நாட்களில் திரும்ப பெற்றுள்ளனர். இந்தத் தொகை ரூ.1300 கோடிக்கும் அதிகமாகும் என்று திரு மோடி கூறினார்.
எந்தப்பிரச்சினையும் அது மோசமடைவதற்கு முன்பாக உரிய காலத்தில் எந்த நாடாக இருந்தாலும் தீர்வு காண முடியும் என்று பிரதமர் கூறினார். ஆனால், பல ஆண்டுகளாக பிரச்சினைகளை தவிர்க்கும் மனப்பான்மை இருந்து வந்ததாக அவர் கூறினார். இன்றைய புதிய இந்தியா பிரச்சினைகளைத் தீர்க்க முயலுகிறது, இன்றைய இந்தியா பிரச்சினைகளை தவிர்ப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் வங்கி டெபாசிட்தாரர்களுக்கு காப்பீட்டு முறை 60களில் இருந்து அமலில் உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், முன்பு வங்கியில் முதலீடு செய்யப்படும் தொகையில் ரூ.50 ஆயிரம் வரையில்தான் உத்தரவாதம் இருந்தது; பின்னர் இது ஒரு லட்சம் வரை அதிகரிக்கப்பட்டது. அதாவது, வங்கி மூழ்கினால், டெபாசிட் செய்தவர்கள் ஒரு லட்சம் வரை பெறுவதற்கு வழி இருந்தது. ஆனால், அந்த ந்தொகையை பெறுவதற்கு கால வரம்பு இருக்கவில்லை என்று கூறினார்.’’ ’ஏழைகள்,நடுத்தர பிரிவு மக்களின் கவலைகளை புரிந்து கொண்டு, உத்தரவாத தொகையை ரூ.5 லட்சமாக நாங்கள் உயர்த்தியுள்ளோம்’’ என்று பிரதமர் கூறினார். மற்றொரு பிரச்சினை சட்டத்தை திருத்தியதால் சமாளிக்கப்பட்டது. ‘’ முன்பு ரீபண்டுக்கு கால வரம்பு இல்லை, இப்போது 90 நாட்களுக்குள் அதாவது மூன்று மாதங்களுக்குள் ரீபண்ட் வழங்குவதை எங்கள் அரசு கட்டாயமாக்கியுள்ளது. வங்கி திவாலானாலும், டெபாசிட்தாரர்கள் 90 நாட்களுக்குள் பணத்தை நிச்சயமாகப் பெற முடியும்’’ என்று அவர் கூறினார்.
நாட்டின் முன்னேற்றத்தில் வங்கிகள் பெரும்பங்கு வகிப்பதாக கூறிய பிரதமர், வங்கிகளின் முன்னேற்றத்துக்கு டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதும் முக்கியமாகும். வங்கியை நாம் காப்பாற்ற விரும்பினால், டெபாசிட்தாரர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
பல சிறிய பொதுத்துறை வங்கிளை பெரிய வங்கிகளுடன் இணைப்பதன் மூலம், அவற்றின் திறனும், வெளிப்படைத்தன்மையும் ஒவ்வொரு வழியிலும் வலுப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். ஆர்பிஐ கூட்டுறவு வங்கிகளை கண்காணிக்கும் போது, அது டெபாசிட்தாரர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அவர் கூறினார்.
வங்கி கணக்கில் மட்டும் பிரச்சினை இருக்கவில்லை.தொலைதூர பகுதிகளில் வங்கி சேவைகளை வழங்குவதிலும், பிரச்சினை இருந்ததாக கூறிய பிரதமர், இன்று அநேகமாக நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும், வங்கி கிளை வசதியோ, அல்லது வங்கி பிரதிநிதி 5 கி.மீ சுற்றளவுக்குள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது என்றார். இன்று இந்தியாவில் சாதாரண மக்கள் கூட, எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும், 24 மணி நேரமும் சிறிய பரிவர்த்தனைகளைக்கூட செய்ய முடிகிறது என்று அவர் கூறினார். 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடர் காலத்திலும், இந்தியாவின் வங்கி துறை சுமுகமாக செயல்பட இத்தகைய பல சீர்திருத்தங்களை நாங்கள் செய்துள்ளோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகின் வளர்ந்த நாடுகள் கூட தங்கள் குடிமக்களுக்கு உதவுவதில் தடுமாறிய போது, அநேகமாக நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்தியா நேரடி உதவியை மிக விரைவாக வழங்கியது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஏழைகள், பெண்கள், தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் போன்ற பெருமளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பிரிவினருக்கு காப்பீடு, வங்கி கடன்கள், நிதி அதிகாரம் வழங்க கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பெண்களுக்கு வங்கி வசதி முன்பு எந்த வகையிலும் கிட்டவில்லை. அதனால், முன்னுரிமை அடிப்படையில் இதை நாங்கள் கையில் எடுத்தோம். ஜன் தன் திட்டத்தின் கீழ், தொடங்கப்பட்ட கோடிக்கணக்கான வங்கி கணக்குகளில், பாதிக்கும் மேற்பட்டவை பெண்களின் கணக்குகளாகும். இதன்மூலம், பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகராரம் பெற்றுள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் செய்யப்படும் சேமிப்பு, வைப்பு, நடப்பு, ஆர்டி போன்ற அனைத்து வகை டெபாசிட்களுக்கும் காப்பீட்டு பாதுகாப்பை , அனைத்து வணிக வங்கிகளும் உறுதி செய்துள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இயங்கும் மாநில, மத்திய, தொடக்க கூட்டுறவு வங்கிகளும் இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சாதனை சீர்திருத்தம் மூலம் , வங்கி டெபாசிட் காப்பீடு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், முந்தைய நிதி ஆண்டின் முடிவில், பாதுகாக்கப்பட்ட கணக்குகள் மொத்த கணக்குகளில் 98.1% ஆக உள்ளது. இது சர்வதேச குறியீடான 80% க்கும் அதிகம்.
आज के आयोजन का जो नाम दिया गया है उसमें Depositors First की भावना को सबसे पहले रखना, इसे और सटीक बना रहा है।
— PMO India (@PMOIndia) December 12, 2021
बीते कुछ दिनों में एक लाख से ज्यादा Depositors को बरसों से फंसा हुआ उनका पैसा वापस मिला है।
ये राशि 1300 करोड़ रुपए से भी ज्यादा है: PM @narendramodi
आज देश के लिए बैंकिंग सेक्टर के लिए और देश के करोड़ों बैंक अकाउंट होल्डर्स के लिए बहुत महत्वपूर्ण दिन है।
— PMO India (@PMOIndia) December 12, 2021
दशकों से चली आ रही एक बड़ी समस्या का कैसे समाधान निकाला गया है, आज का दिन उसका साक्षी बन रहा है: PM @narendramodi
कोई भी देश समस्याओं का समय पर समाधान करके ही उन्हें विकराल होने से बचा सकता है।
— PMO India (@PMOIndia) December 12, 2021
लेकिन वर्षों तक एक प्रवृत्ति रही की समस्याओं को टाल दो।
आज का नया भारत, समस्याओं के समाधान पर जोर लगाता है, आज भारत समस्याओं को टालता नहीं है: PM @narendramodi
यानि अगर बैंक डूबा, तो Depositors को, जमाकर्ताओं को सिर्फ एक लाख रुपए तक ही मिलने का प्रावधान था।
— PMO India (@PMOIndia) December 12, 2021
ये पैसे भी कब मिलेंगे, इसकी कोई समय सीमा नहीं तय थी।
गरीब की चिंता को समझते हुए, मध्यम वर्ग की चिंता को समझते हुए हमने इस राशि को बढ़ाकर फिर 5 लाख रुपए कर दिया: PM @narendramodi
हमारे देश में बैंक डिपॉजिटर्स के लिए इंश्योरेंस की व्यवस्था 60 के दशक में बनाई गई थी।
— PMO India (@PMOIndia) December 12, 2021
पहले बैंक में जमा रकम में से सिर्फ 50 हजार रुपए तक की राशि पर ही गारंटी थी।
फिर इसे बढ़ाकर एक लाख रुपए कर दिया गया था: PM @narendramodi
कानून में संसोधन करके एक और समस्या का समाधान करने की कोशिश की है।
— PMO India (@PMOIndia) December 12, 2021
पहले जहां पैसा वापसी की कोई समयसीमा नहीं थी, अब हमारी सरकार ने इसे 90 दिन यानि 3 महीने के भीतर अऩिवार्य किया है।
यानि बैंक डूबने की स्थिति में भी, 90 दिन के भीतर जमाकर्ताओं को उनका पैसा वापस मिल जाएगा: PM
देश की समृद्धि में बैंकों की बड़ी भूमिका है।
— PMO India (@PMOIndia) December 12, 2021
और बैंकों की समृद्धि के लिए Depositors का पैसा सुरक्षित होना उतना ही जरूरी है।
हमें बैंक बचाने हैं तो Depositors को सुरक्षा देनी ही होगी: PM @narendramodi
बीते वर्षों में अनेक छोटे सरकारी बैंकों को बड़े बैंकों के साथ मर्ज करके, उनकी कैपेसिटी, कैपेबिलिटी और ट्रांसपेरेंसी, हर प्रकार से सशक्त की गई है।
— PMO India (@PMOIndia) December 12, 2021
जब RBI, को-ऑपरेटिव बैंकों की निगरानी करेगा तो, उससे भी इनके प्रति सामान्य जमाकर्ता का भरोसा और बढ़ेगा: PM @narendramodi
हमारे यहां समस्या सिर्फ बैंक अकाउंट की ही नहीं थी, बल्कि दूर-सुदूर तक गांवों में बैंकिंग सेवाएं पहुंचाने की भी थी।
— PMO India (@PMOIndia) December 12, 2021
आज देश के करीब-करीब हर गांव में 5 किलोमीटर के दायरे में बैंक ब्रांच या बैंकिंग कॉरस्पोंडेंट की सुविधा पहुंच चुकी है: PM @narendramodi
आज भारत का सामान्य नागरिक कभी भी, कहीं भी, सातों दिन, 24 घंटे, छोटे से छोटा लेनदेन भी डिजिटली कर पा रहा है।
— PMO India (@PMOIndia) December 12, 2021
कुछ साल पहले तक इस बारे में सोचना तो दूर, भारत के सामर्थ्य पर अविश्वास करने वाले लोग इसका मज़ाक उड़ाते फिरते थे: PM @narendramodi
ऐसे अनेक सुधार हैं जिन्होंने 100 साल की सबसे बड़ी आपदा में भी भारत के बैंकिंग सिस्टम को सुचारु रूप से चलाने में मदद की है।
— PMO India (@PMOIndia) December 12, 2021
जब दुनिया के समर्थ देश भी अपने नागरिकों तक मदद पहुंचाने में संघर्ष कर रहे थे, तब भारत ने तेज़ गति से देश के करीब-करीब हर वर्ग तक सीधी मदद पहुंचाई: PM
जनधन योजना के तहत खुले करोड़ों बैंक अकाउंट्स में से आधे से अधिक महिलाओं के ही हैं।
— PMO India (@PMOIndia) December 12, 2021
इन बैंक अकाउंट्स का महिलाओं के आर्थिक सशक्तिकरण पर जो असर हुआ है, वो हमने हाल में आए नेशनल फैमिली हेल्थ सर्वे में भी देखा है: PM @narendramodi