“வங்கிகளின் நிதி ஆரோக்கியம் தற்போது பெருமளவு மேம்பட்ட நிலையில் உள்ள வேளையில், 2014-க்கு முன்பு இருந்த சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு ஒவ்வொன்றாகத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிந்து வருகிறோம்“
“நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி அளித்து, இந்தியாவை தற்சார்பு அடைந்த நாடாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கத் தேவையான வலிமையுடன் இந்திய வங்கிகள் உள்ளன“
“சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் வேலைகளை உருவாக்குவதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டிய தருணம் இது. நாட்டின் சொத்துப் பட்டியலுடன் இருப்பு நிலையையும் மேம்படுத்துவதற்கு வங்கிகள் ஆக்ககப்பூர்வமாகப் பணியாற்ற வேண்டியதுதான் தற்போதைய அவசியத் தேவை“
“வங்கிகள் தங்களை அப்ரூவராகவும், வாடிக்கையாளர்களை விண்ணப்பதாரர்களாகவோ அல்லது தங்களைக் கொடுப்பராகவும் வாடிக்கையாளரை பெறுபவராகவும் கருதுவதைக் கைவிட்டு, ஒத்துழைப்பு மாதிரியைப் பின்பற்ற வேண்டும்“
“உள்ளார்ந்த நிதிச் சேவைக்காக நாடு கடுமையாக பாடுபட்டுவரும் வேளையில், குடிமக்களின் உற்பத்தித் திறனை வெளிக்கொண்டுவர வேண்டியது மிகவும் முக்கியம்“
“ சுதந்திர தினப் ‘பெருவிழா காலத்தில்‘ இந்திய வ

தடையற்ற கடன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதல் பற்றிய மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொளி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கடந்த 6-7 ஆண்டுகளில், வங்கித் துறையில் அரசு மேற்கொண்டுவரும் சீர்திருத்தங்கள், அனைத்து வகையிலும் வங்கிகளுக்கு ஆதரவாக இருப்பதால், தற்போது வங்கிகள் மிகவும் பலம்வாய்ந்த நிலையில் உள்ளன என்றார்.  வங்கிகளின் நிதி ஆரோக்கியம் தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.  2014க்கு முன்பு எதிர்கொண்டு சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு ஒவ்வொன்றாகத் தீர்வு காணப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.   “வாராக்கடன் பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்டிருக்கிறோம், வங்கிகளுக்கு மறுமுதலீடு செய்து அவற்றின் வலிமையை அதிகரித்துள்ளோம்.  திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம்-ஐபிசி போன்ற சீர்திருத்தங்களை நாம் கொண்டுவந்திருப்பதோடு, பல்வேறு சட்டங்களையும் மாற்றியமைத்து, கடன் வசூல் தீர்ப்பாயங்களுக்கு அதிகாரமளித்துள்ளோம்.   கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாட்டில், வலியுறுத்தப்பட்ட சொத்து மேலாண்மைக்கான பிரத்யேக முறை ஒன்றையும் உருவாக்கியிருக்கிறோம்“ என்று திரு.மோடி குறிப்பிட்டார். 

தற்போது, “நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி அளித்து, இந்தியாவை தற்சார்பு அடைந்த நாடாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கத் தேவையான வலிமையுடன் இந்திய வங்கிகள் உள்ளன.  இந்த நிலை, இந்தியாவின் வங்கித் துறையில் பெரும் மைல்கல் என்று நான் கருதுகிறேன்“ என்றும் பிரதமர் தெரிவித்தார்.   சமீப ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், வங்கிகளுக்கு வலுவான முதலீட்டுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.  வங்கிகள் போதுமான பணப்புழக்கத்துடன் இருப்பதுடன், வாராக்கடன்களை பட்டியலிடுவதில் பின்னடைவு ஏதுமில்லை என்பதோடு, பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில்  மிகவும் குறைவான அளவில் தான் உள்ளன.  இதன் காரணமாக, இந்திய வங்கிகள் மீது சர்வதேச அமைப்புகள் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மேம்படுத்த வகை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.  இந்த நிலை ஒரு மைல் கல்லை எட்டியிருப்பதோடு, ஒரு புதிய தொடக்கமாகவும் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், சொத்துக்களை உருவாக்குவோர் மற்றும் வேலை உருவாக்குவோருக்கு உறுதுணையாக இருக்குமாறு வங்கித்துறையினரை கேட்டுக்கொண்டார்.   “நாட்டின் சொத்துப் பட்டியலுடன், இருப்பு நிலையையும் மேம்படுத்துவதற்கு வங்கிகள் ஆக்கக்பூர்வமாகப் பணியாற்ற வேண்டியதுதான் தற்போதைய அவசியத் தேவை“ என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 

வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு ஆக்கப்பூர்வமாக சேவையாற்றுமாறு வலியுறுத்திய பிரதமர், வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவைகளை உணர்ந்து, அதற்கேற்ற தீர்வை வழங்குமாறும் வங்கிகளைக் கேட்டுக் கொண்டார்.  

வங்கிகள் தங்களை அப்ரூவராகவும்,  வாடிக்கையாளர்களை விண்ணப்பதாரர்களாகவோ அல்லது தங்களைக் கொடுப்பராகவும் வாடிக்கையாளரை பெறுபவராகவும் கருதுவதைக் கைவிட வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.  வங்கிகள், ஒத்துழைப்பு மாதிரியைப் பின்பற்றுமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.  ஜன் தன் திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதில், வங்கிகள் காட்டிய உற்சாகத்திற்காக, அவர் பாராட்டுத் தெரிவித்தார். 

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக வங்கிகள் உணர்வதோடு, வளர்ச்சி சரித்திரத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டுமென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  உற்பத்தியாளர்களுக்கு, அவர்களது உற்பத்திக்கேற்ற ஊக்கத்தொகை – PLI வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதையும் அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.   உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரித்து, தங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றிக்கொள்ளும் திறனை உருவாக்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.  தங்களது ஆதரவு மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, திட்டங்களை லாபகரமானவையாக மாற்றுவதில் வங்கிகள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.  

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும் மாற்றங்கள் காரணமாகவும், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் காரணமாகவும், நாட்டில் பெரிய அளவிலான தரவு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  வங்கித் துறை இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், ஸ்வமிம்வா மற்றும் ஸ்வநிதி போன்ற முன்னோடித் திட்டங்கள் வழங்கும் வாய்ப்புகளை பட்டியலிட்ட அவர், இதுபோன்ற சீர்திருத்தங்களில் பங்கேற்று முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

உள்ளார்ந்த நிதிச் சேவையின் ஒட்டுமொத்த விளைவுகள் பற்றிக் குறிப்பிட்ட திரு.மோடி, உள்ளார்ந்த நிதிச் சேவைக்காக நாடு கடினமாக உழைத்துவரும் வேளையில், மக்களின் உற்பத்தித் திறனை வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.   வங்கித்துறை நடத்திய ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், மாநிலங்களில் அதிகளவில் ஜன் தன் கணக்குகளைத் தொடங்கியதால், குற்றச் செயல்கள் பெருமளவு குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.   அதேபோன்று, பெரு நிறுவனங்களும், புதிதாகத் தொழில்  தொடங்கும் நிறுவனங்களும்   இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவில் உருவாகி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.    “அதுபோன்ற சூழலில், வலுப்படுத்துவதற்கும், நிதி வழங்குவதற்கும், இந்தியாவின் விருப்பங்களில் முதலீடு செய்வதற்கும்  சிறந்த நேரம் எது? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

தேசத்தின் இலக்குகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், வங்கிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.   இணையதளம் அடிப்படையில், அமைச்சகங்கள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைக்க,  நிதியுதவித் திட்டங்களைப் பின்தொடர்வதற்கான உத்தேச முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.   கட்டமைப்பு வளர்ச்சிக்கான பெருந்திட்டத்தில் ஒரு இடைமுகமாக சேர்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  சுதந்திர தின ‘பெருவிழா காலத்தில்‘, இந்திய வங்கித் துறை பெரிய அளவிலான சிந்தனைகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளைப் பின்பற்றலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet extends One-Time Special Package for DAP fertilisers to farmers

Media Coverage

Cabinet extends One-Time Special Package for DAP fertilisers to farmers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 2, 2025
January 02, 2025

Citizens Appreciate India's Strategic Transformation under PM Modi: Economic, Technological, and Social Milestones