ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிஜேபி தேசிய நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். தனது உரையை துவங்கிய பிரதமர் மோடி, பிஜேபியில் அடித்தளமிட்டவர்கள் தொடங்கி, பாதை வகுத்துத்தந்தவர்கள் வரை வெற்றியின் பயணத்தில் பங்களித்த அனைவரது பங்களிப்புகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்தும் தொண்டர்கள் குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.
நாட்டில் பிஜேபி வெற்றிகரமாக கொண்டுவந்துள்ள பெரும் மாற்றங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரிவாக எடுத்துரைத்தார். நீண்டகாலமாக ஒருவர் நோய்வாய் பட்டிருந்தால் அதற்கான சூழலையும், மீண்டும் சாதாரணமான வாழ்வை தொடர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதுமே முக்கியமாக இருக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பல பத்து ஆண்டுகளாக இந்திய நாட்டு மக்களும் இதேபோன்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்ததாக எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த எண்ண ஓட்டத்தில் மாற்றம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார். இன்று இந்திய மக்கள் அனைவரும் மிகப்பெரும் அபிலாஷைகளுடன் திகழ்வதாக அவர் கூறினார். மக்களுக்கு இப்போது திட்டங்களால் விளையும் பலன்கள் குறித்த அக்கறை ஏற்பட்டுள்ளது என்றும், அரசுகள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது என்றும் பதவியில் இருக்கும் அரசுகள் தங்களுக்கு பலன்களை வழங்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும் கூறினார்.
கட்சி நிர்வாகிகளிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிஜேபி 18 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதை சுட்டிக்காட்டினார். கட்சிக்கு 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1300க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் கூறிய பிரதமர், இது போதும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்றும், நமக்கு இதுபோன்ற விவகாரங்களில் மெத்தனப்போக்கு அறவே இருக்கக்கூடாது என்றும் நமது கட்சிக்கு அடித்தளமிட்ட தலைவர்கள் நமக்கு கற்றுத்தந்திருக்கிறார்கள் என்றும், மக்களின் நலனுக்காகவும், அவர்களது நன்மைக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு போதித்திருக்கிறார்கள் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
கட்சி சமீபத்தில் பெற்றிருக்கும் வெற்றி காரணமாக கட்சி நிர்வாகிகளிடையே மெத்தனப்போக்கு ஏற்படக்கூடாது என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை கட்சி வகுத்து, அதன்படி நடக்க வேண்டும் என்று கூறினார். நாம் அடுத்த 25 ஆண்டுகளுக்குரிய இலக்கை நிர்ணயித்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இதுவே சரியான தருணம் என்றும், அதற்காக கடுமையாக உழைப்பதோடு, நாட்டு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ச்சியாக உழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று எட்டு ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது பற்றி குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த எட்டு ஆண்டுகளையும் சேவைக்காகவும், சிறந்த நிர்வாகத்திற்காகவும், ஏழை மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு இந்த அரசு செயலாற்றி வருவதாகவும் கூறினார். சிறு விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நலனுக்காக அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த எட்டு ஆண்டுகள் ஆட்சி நடைபெற்றிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். முன்னர் இருந்த அரசுகள் மீதும், அரசுகளின் செயல்பாடுகள் மீதும், அரசுகள் திட்டங்களை நிறைவேற்றிய விதம் தொடர்பாகவும் மக்களுக்கு நிலவிய நம்பிக்கையின்மை தற்போது விலகி இருப்பதாகவும், அதற்கு பிஜேபி அரசின் செயல்பாடுகளே காரணம் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் குறுகிய, சுயநல மனப்பான்மை பற்றி குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தங்களது சுயநலத்திற்காக இந்த அரசியல் கட்சிகள் சமூகத்தின் பலவீனத்தை தூண்டிவிட்டு அதில் ஆதாயமடைய முயற்சி மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார். சில நேரங்களில் ஜாதியின் பெயராலும், சில நேரங்களில் பிராந்தியவாதம் என்ற பெயராலும் அவர்கள் மக்களை தூண்டிவருகிறார்கள் என்றார். நாட்டை வளப்படுத்தும் நமது முயற்சிக்கு இடையூறாக இத்தகைய அரசியல் கட்சிகள் திசைத்திருப்பும் முயற்சிகளிலும், தடை ஏற்படுத்தும் விதத்திலும் செயல்படுவார்கள் என்று அவர் கட்சியின் நிர்வாகிகளை எச்சரித்தார். தற்போது சில கட்சிகள் எவ்வாறு முக்கிய பிரச்சனைகளில் பொது மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் காண முடிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய கட்சிகளின் வஞ்சக வலையில் நாம் சிக்கிவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் வீட்டுவசதி திட்டம், ஆயுஷ்மான் பாரத், பிரதமர் விவசாயிகள் நல்வாழ்வு திட்டம், தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு தேசிய திட்டங்கள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். இன்று பரம ஏழைகளும் அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வருவதை காண முடிகிறது என்று கூறிய பிரதமர், அவர்களில் பலர் பெரும் நம்பிக்கையோடு இத்தகைய நலத்திட்டங்கள் வாயிலாக தாங்கள் நிச்சயம் ஒருநாள் பயன் பெறுவோம் என்று கூறிவருகின்றனர் என்றார்.
இதுதான் வளர்ச்சியின் அடிப்படையிலான அரசியலை நாட்டின் பிரதான அரசியல் கொள்கையாக பிஜேபி மாற்றியிருப்பதன் அடையாளம் என்றும் பிரதமர் கூறினார்.
दुनिया आज भारत को बहुत उम्मीदों से देख रही है।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
ठीक वैसे ही भारत में भाजपा के प्रति, जनता का एक विशेष स्नेह है।
देश की जनता भाजपा को बहुत विश्वास से, बहुत उम्मीद से देख रही है: PM @narendramodi
हमारे देश में एक लंबा कालखंड ऐसा रहा जब लोगों की सोच ऐसी हो गई थी कि बस किसी तरह समय निकल जाए।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
न सरकार से उनको अपेक्षा थी और न ही सरकार उनके प्रति अपनी कोई जवाबदेही समझती थी।
2014 के बाद भाजपा देश को इस सोच से बाहर निकालकर लाई है।
आज भारत के लोग Aspirations से भरे हुए हैं: PM
हमें आराम ही तो नहीं करना है।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
आज भी हम अधीर हैं, बेचैन हैं, आतुर हैं क्योंकि हमारा मूल लक्ष्य, भारत को उस उंचाई पर पहुंचाना है जिसका सपना देश की आजादी के लिए मर-मिटने वालों ने देखा था: PM @narendramodi
ये 8 वर्ष देश के छोटे किसानों, श्रमिकों, मध्यम वर्ग की अपेक्षाओं को पूरा करने वाले रहे हैं।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
ये 8 वर्ष देश के संतुलित विकास, सामाजिक न्याय और सामाजिक सुरक्षा के लिए रहे हैं।
ये 8 वर्ष देश की माताओं-बहनों-बेटियों के सशक्तिकरण, उनकी गरिमा बढ़ाने के प्रयासों के नाम रहे हैं: PM
इस महीने केंद्र की भाजपा सरकार के, एनडीए सरकार के 8 वर्ष पूरे हो रहे हैं।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
ये आठ वर्ष संकल्प के रहे हैं, सिद्धियों के रहे हैं।
ये 8 वर्ष सेवा, सुशासन और गरीब कल्याण को समर्पित रहे हैं: PM @narendramodi
मैं सैचुरेशन की बात करता हूं।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
सैचुरेशन सिर्फ पूर्णता का आकंड़ा भर नहीं है।
ये भेदभाव, भाई-भतीजावाद, तुष्टिकरण, भ्रष्टाचार के चंगुल से देश को बाहर निकालने का माध्यम है: PM @narendramodi
ये भाजपा ही जिसने विकासवाद की राजनीति को देश की राजनीति की मुख्यधारा बना दिया है: PM @narendramodi
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
हमें कभी कोई शॉर्ट-कट नहीं लेना है।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
हमें देशहित से जुड़े जो भी बुनियादी विषय हैं, जो Core-Issues हैं उन्हीं पर आगे बढ़ना है।
और ये Core-Issues क्या हैं?
गरीब का कल्याण, गरीब का जीवन आसान बनाने के लिए, गरीब को सशक्त करने के लिए हमें लगातार काम करना है: PM @narendramodi
मैं आज के युवाओं की भाषा में कहूं, तो जो भारत के समृद्ध भविष्य के code लिखने के लिए लालायित हैं, ऐसे हर युवा को हमें भाजपा के साथ जोड़ना है।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
हमें ये याद रखना है कि परिवारवाद की राजनीति से विश्वासघात खाने वाले देश के युवाओं का विश्वास सिर्फ भाजपा ही लौटा सकती है: PM @narendramodi
नई नेशनल एजुकेशन पॉलिसी में स्थानीय भाषाओं को प्राथमिकता देना, हर क्षेत्रीय भाषा के प्रति हमारे कमिटमेंट को दिखाता है।
— narendramodi_in (@narendramodi_in) May 20, 2022
भाजपा, भारतीय भाषाओं को भारतीयता की आत्मा मानती है और राष्ट्र के बेहतर भविष्य की कड़ी मानती है: PM @narendramodi