மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான மீனாட்சி க்ஷத்ரியா தன்னை நி-க்ஷய் மித்ரா-வாகப் பதிவு செய்து கொண்டதற்காகவும், காசநோயாளிகளை தமது சேமிப்பைக் கொண்டு பராமரித்த குறிப்பிடத்தக்க பணிக்காகவும், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"குறிப்பிடத்தக்க இந்த செயல், காசநோய் இல்லாத இந்தியாவை அடைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும்."
Noteworthy gesture, which will boost the efforts towards achieving TB-free India. https://t.co/IAFh4k65Em
— Narendra Modi (@narendramodi) February 4, 2023