அயோத்தியில் ஜனவரி 22 (திங்கட்கிழமை) அன்று ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, "நேற்று அயோத்தியில் நாம் பார்த்தது வரவிருக்கும் ஆண்டுகளில் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும்" என்று கூறியுள்ளார்.
அயோத்தியில் குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை பிரமாண்ட விழாவைக் காட்சிப்படுத்தும் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"நேற்று, ஜனவரி 22 -ம் தேதி, அயோத்தியில் நாம் பார்த்தது பல ஆண்டுகளுக்கு நமது நினைவுகளில் நிலைத்திருக்கும்."
What we saw in Ayodhya yesterday, 22nd January, will be etched in our memories for years to come. pic.twitter.com/8SXnFGnyWg
— Narendra Modi (@narendramodi) January 23, 2024