துடிப்பான குஜராத்” சர்வதேச மாநாட்டிற்கு நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும். இந்த மாநாடு முதன் முதலில் 2003-ஆம் ஆண்டு துவக்கப்பட்டதை நான் இப்போது நினைவு கூர்கிறேன். அன்று முதல் இன்று வரை இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
ஜப்பான், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட கூட்டாளி நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக, ”துடிப்பான குஜராத்” மாநாட்டின் ஆரம்ப கால பங்குதாரர்களான ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், பல சர்வதேச அமைப்புகளும், நிறுவனங்களுக்கும் இந்த நிகழ்ச்சியின் பங்குதாரர்களாக உள்ளனர். அனைவரின் இந்த பங்குக்கு எனது நன்றி. இங்கு கூடியுள்ள அனைத்து இளம் தொழில் அதிபர்களுக்கும் வர்த்தக தலைவர்களுக்கும் உங்கள் வருகை ஊக்கமாக அமைந்துள்ளது. உங்களது ஆதரவு இல்லாமல் இந்த நிகழ்ச்சி மாநாடு எட்டு பகுதியை கண்டிருக்காது. ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தை விட சிறப்பாகவும் பெரியதாகவும் அமைந்துவருகிறது.
குறிப்பாகக கடந்த மூன்று மாநாடுகள் மிக பெரிய அளவில் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், வர்த்தகத் தலைவர்களின் மாற்றம் பலதரப்பு அமைப்புகளின் பங்களிப்பு இந்த நிகழ்ச்சியை உண்மையான சர்வதேச நிகழ்ச்சியாக மாற்றியுள்ளது.
இந்த மாநாட்டில் பங்குபெறும் அனைவரும் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி இந்த மாநாட்டின் முழு பலனையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். நூற்றுக்கணக்கான நிறுவனகள் தங்களது தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை காட்சிக்கு வைத்துள்ள வணிக நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியையும் நீங்கள் பார்வையிட வேண்டும்.
மகாத்மா காந்தி மற்றும் சர்தார் பட்டேல் வாழ்ந்த மண்ணான குஜாரத், இந்தியாவின் வர்த்தகத் துடிப்பையும் பிரதிபலிக்கிறது. பல காலங்களாக வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் முன்னோடியாக உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த மண்ணின் மக்கள் வாய்ப்புகள் தேடி ஏழு கடல் தாண்டி சென்றுள்ளனர். இன்றும் கூட, இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக வெளிநாடுகளில் வாழ்ந்து பணிபுரிகின்றனர். மேலும், அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் ஒரு சிறிய-குஜராத்தை ஏற்படுத்தியுள்ளனர். நாங்கள் பெருமையாக சொல்கிறோம்: எங்கு ஒரு குஜராத்தி வாழ்கிறானோ, அங்கு என்றும் குஜராத் வாழும்.
தற்போது குஜராத்தில் காற்றாடி விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றாடிகள் நாம் அனைவரும் மேலோங்கி பறக்க நமக்கு ஊக்கம் அளிக்கட்டும்.
நண்பர்களே!
நான் அடிக்கடி கூறுவது போல இந்தியாவின் வலிமை இந்த மூன்றில் தான் அமைந்துள்ளது: ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தேவை. (three Ds: Democracy, Demography and Demand.)
நமது பெரிய பலம் நமது ஆழமான ஜனநாயகம். ஜனநாயகத்தில் பயனுள்ள மற்றும் வேகமாக பாதையில் ஆளுமை முறையை செலுத்த முடியாது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஜனநாயக முறையிலும் சிறந்த மற்றும் வேகமாக ஆளுமை முறையை கொண்டுவர முடியும் என்பதை நாங்கள் பார்த்துள்ளோம்.
மேலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான முறையில் போட்டியிடும் கலாச்சாரத்தை ஏற்படுத்தி உள்ளோம். நல்லாட்சி முறையை அடிப்படையாக கொண்டு மாநிலங்கள் மதிப்பிடப் படுகின்றன. இந்த செயலாக்கத்தில் உலக வங்கி எங்களுக்கு உதவியாக உள்ளது.
மக்கள் தொகையை பற்றி கூறுகையில், துடிப்பான இளைஞர்களை கொண்டது நமது நாடு. ஒழுக்கமான அர்ப்பணிக்கப்பட்ட, மற்றும் திறமையான இந்திய இளைஞர்கள் உலக அளவில் ஈடிணையற்ற பணியாளர்களாக அமைந்துள்ளனர். உலக அரங்கில் நாம் இரண்டாவது பெரிய ஆங்கிலம் பேசும் நாடாக உள்ளோம். நமது இளைஞர்கள் வெறும் பணி தேடுபவர்களாக இல்லை. அவர்கள் தடைகளை தகர்த்தி முயற்சிகள் மேற்கொண்டு தொழில் முனைவோர் ஆக விரும்புகின்றனர்.
தேவைகளை பொறுத்தவரை, வளர்ந்து வரும் நமது நடுத்தர மக்கள் தொகை பெரும் உள்நாட்டு சந்தை வாய்பை அளிக்கிறது.
இந்திய நாட்டை சுற்றியுள்ள கடல்கள், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற உலகத்தின் பெரிய சந்தைகளுடன் நம்மை இணைக்கிறது.
இயற்கை நமக்கு வரமாக அமைந்துள்ளது. நமது மூன்று பயிர் காலம், ஏராளமான உணவு, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய நமக்கு உதவுகின்றன.
நம்மிடம் உள்ள பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இணையற்றவை. நமது கலாச்சாரம் மற்றும் அதன் சின்னங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. நமது கல்வி நிறுவனகளுக்கும் அறிஞர்களுக்கும் உலகம் முழுவது அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியா தற்போது வளர்ந்து வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமாக திகழ்கிறது. உலக அளவில் அதிகப்படியான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை வழங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
நமது பொழுதுபோக்குத் துறை உலகெங்கும் புதிய புயலை ஏற்படுத்தி வருகிறது. இவை அனைத்தும், குறைந்த செலவில், தரமான வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது.
நண்பர்களே!
ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தூய்மையான ஆட்சி முறையை அளிக்கும் உறுதியோடு ஆட்சிக்கு வந்த முதல் அரசு, எங்களது அரசாகும். நமது அரசியல் மற்றும் பொருளாதார முறையில் நல்ல மாற்றத்தை கொண்டுவருவதே எங்களது நோக்கமும் குறிக்கோளுமாகும். இது தொடர்பாக நாங்கள் பல தொடர் முடிவுகளும் முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம். உதாரணாமாக கீழ்கண்ட மாற்றங்களை கொண்டு வந்தூளோம்
- உறவு சார்ந்த ஆட்சி முறையில் இருந்து அமைப்பு சார்ந்த ஆட்சி முறை
- உசிதமான நிர்வாகத்திலிருந்து கொள்கை சார்ந்த நிர்வாகம்
- சீரற்ற தலையீட்டில் இருந்து தொழில் நுட்பவியல் சார்ந்த தலையீடு
- ஒருதலை சார்பில் இருந்து சம வாய்ப்பு
- ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தில் இருந்து ஒழுங்கு முறைச் சார்ந்த பொருளாதாரம்
இந்த மாற்றத்தை கொண்டு வருவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இணைய ஆட்சி முறை எளிதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நான் அடிக்கடி கூறுவேன். கொள்கை சார் ஆட்சி முறையின் அவசியத்தையும் நான் வலியுறுத்தி வருகிறேன். இணையவழி செயல்முறை முடிவெடுத்தல் வேகமாகவும் வெளிப்படையாகவும் அமைய உதவும். இதன் முடிவாக, நாங்கள் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தன் விருப்பப்படி தீர்மானிக்கும் உரிமையை ஒழித்து வெளிபடைத்தன்மையை கொண்டுவர முயற்சிகள் செய்து வருகிறோம்.
என்னை நம்புங்கள், உலகின் சிறந்த டிஜிட்டல் பொருளாதார நாடாகும் தொடக்க தருவாயில் நாம் உள்ளோம். உங்களில் பலருக்கு இந்தியாவில் இந்த மாற்றம் கொண்டுவரவேண்டும். உங்களுக்கு இந்த மாற்றம் நடைபெறுகிறது என்பதை நான் பெருமையாக கூறுகிறேன்.
இந்தியாவின் ஆற்றலை அறிந்து சரியான பொருளாதாரத்தை ஏற்படுத்த நாங்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளோம். இதன் முடிவுகள் ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துவருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பெரும் பொருளாதார சுட்டிக்காட்டிகளில் கணிசமான முன்னேற்றம் உள்ளது.
இந்தியா உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரம் சரிவில் உள்ளபோதும் நம் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம் இன்று, உலக பொருளாதாரத்தில் இந்தியாதான் பிரகாசமாக இடத்தில் உள்ளது. உலக வளர்ச்சியின் இயந்திரமாக நாம் காணப்படுகிறோம்.
வரும் நாட்களில் இன்னும் சிறந்த வளர்ச்சி இருக்கும் என உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இதர நிறுவனங்கள் கணித்துள்ளன. 2014-15 ஆம் ஆண்டு உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 12.5 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. Its contribution to global growth is sixty eight per cent higher, than its share of the world economy. உலக வளர்ச்சிக்கு இதன் பங்களிப்பு உலக பொருளாதாரத்தில் இதன் பங்கைவிட 68 சதவீதம் அதிகம் தொழிலுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்கே எனது முன்னுரிமை. நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க நாம் இதைச் செய்யவேண்டும். இந்த புத்துணர்ச்சியோடு, சில வரலாற்று முயற்ச்சிகளை நாம் செயல்படுத்தப் போகிறோம். பொருட்கள் மற்றும் சேவைகள் வரியும் இதில் அடங்கும்.
வங்கி நொடிப்பு மற்றும் திவால் நிலை தொகுப்புச் சட்டம், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், புதிய நடுவர் கட்டமைப்பை ஒரு புதிய அறிவுசார் சொத்து உரிமைகள் ஆட்சி ஆகியவை செயல் முறையில் உள்ளது. இவை அனைத்தும் நாம் எந்த பாதையில் பயணிக்கிறோம் என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டு. இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்தும் முயற்ச்சியை எனது அரசு உறுதியோடு மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே!
தொழில் புரிவதை சுலபமாக்குதலுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். உரிமம் பெறும் முறையை எளிமையாக்குதல், ஒப்புதல், வருவாய் மற்றும் ஆய்வுகள் தொடர்பான செயல்முறைகள் மற்றும் விதிகளை சுலபமாக்கி பகுத்தறியப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை கட்டமைப்பு மேம்படுத்தும் நோக்கோடு, பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான செயல் மையங்கள் அமைக்கப்படுவதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். நல்லாட்சி முறை அளிப்போம் என்ற எங்களது உறுதியின் ஒரு பகுதி இது.
பல்வேறு குறியீடுகள் கொண்ட சர்வதேச தரப்பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் எங்களது முயற்சிகளின் பலன்களை சுட்டிக்காட்டுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் வெளிவந்த சர்வதேச அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள், கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றில் இந்திய முன்னேறுகிறது அதனால் இந்தியாவின் பொருளாதாரமும் முன்னேறுகிறது என்பதை உறுதி செய்கிறது.
உலக வங்கியின் வணிகம் செய்தல் அறிக்கை பட்டியலில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு வெளியிட்ட உலக முதலீடு அறிக்கை 2016-ல் வெளியிடப்பட்ட 2016-18-ல் பொருளாதார் வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
உலக பொருளாதார அமைப்பின் “உலகளாவிய போட்டித்திறன் அறிக்கை 2015-16 மற்றும் 2016-17”-ல் இந்தியா 32 இடங்கள் முன்னேறியுள்ளது.
உலக அறிவுசார் சொத்து அமைப்புடன் இனைந்து மற்ற நிறுவனங்கள் கொண்டு வந்த “சர்வதேச புதிய கண்டுபிடிப்பு குறியீடு 2016”-ல் நாம் 16 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
உலக வங்கி வெளியிட்ட 2016-ஆம் ஆண்டிற்கான அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து செயல்திறன் பட்டியலில் நாம் 19 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
சர்வதேச சிறந்த நடைமுறைகள் நோக்கி நாம் முன்னேறுவதை நீங்கள் காணலாம். நாளுக்கு நாள் நாம் உலகத்தோடு அதிகமாக ஒன்றிணைந்து வருகிறோம். நமது கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் நமது நம்பிக்கையை நல்ல முறையில் ஊக்குவித்து வருகிறது. எளிதாக தொழில் நடத்த ஏதுவான இடமாக நமது நாட்டை மாற்ற மேலும் எளிமையான நடைமுறைகளை நாம் கொண்டுவர இவை நமக்கு ஊன்றுகோலாக உள்ளது.
வணிகங்களை நிறுவ மற்றும் வளர தேவையான நடவடிக்கைகளை எளிமையாக்க ஏதுவான வகையில் நாளுக்குநாள் நமது கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும் முறைப்படுத்தப்படுகிறது.
பல்வேறு துறைகளில் பலவிதமான முறைகளில் நமது அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது மிகவும் உலகத்தொடர்பு உடைய பொருளாதாரத்தில் இந்தியாவும் ஒன்று.
வர்த்தக சூழலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் உள்நாடு மற்றும் வெளிநாடு முதலீட்டாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை நிறுவனங்களை ஊக்குவிக்கும் சூழல் நமது நாட்டில் உருவெடுத்துள்ளது. இளைஞர்களின் சக்தியை வெளிக் கொண்டுவரும் இது மனதுக்கு ஆனந்தத்தை அளிக்கிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள மொத்த அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு 130 பில்லியன் அமெரிக்க டாலராகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு அதன் முன் இரண்டு ஆண்டுகளை விட 60 சதவிதம் அதிகமாகும். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு கடந்த ஆண்டு தான் அதிகமாகும்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு பெறப்படும் நாடுகளின் எண்ணிக்கையும் துறைகளும் பல்வகையாகப் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஆசிய-பசுபிக் பகுதியில் அதிகபடியான மூலதன முதலீடு பெரும் நாடுகளில் இந்தியா முதன்மை இடம் வகிக்கிறது. உலகளவில் அந்நிய நேரடி முதலீடு பெறும் நாடுகளில் பட்டியலின் முதல் பத்து வரிசையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
ஆனால் இது இதோடு முடிவடையாது. முதலீட்டுக்கான லாபத்தை ஈட்டும் தருவதை பொறுத்தவரை இந்தியா மற்ற எல்லா நாடுகளையும் பின் தள்ளியுள்ளது. அடிப்படை லாபக் குறியீட்டு பட்டியலில் இந்தியா முதல் இடைத்தை பிடித்துள்ளது.
நண்பர்களே!
இதுவரை இந்தியாவிற்கு கிடைத்துள்ள அடையாளத்தில் மிகவும் பெரியது “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டம். உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் சர்வதேச மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தை கொண்டது இத்திட்டம்.
मैं साथियो ये अनुभव करता हूं, मैं दुनिया में जहां-जहां गया; मैं अगर पांच बार “Make in India” बोलता था वहां तो Host country लीडर 50 बार “Make in India” बोलते थे। एक प्रकार से “Make in India” ये दुनिया की नजरों में भारत को एक Investment का destination बना चुका है। भारत में राज्यों के initiative, केंद्र सरकार का सहयोग, ये संयुक्त प्रयास “Make in India” के लिए बहुत सारे द्वार खोल चुका है।
इस Opportunity का लाभ हिन्दुस्तान के राज्यों के बीच में Competition पैदा हो, Healthy Competition हो और वो भी Good Governance and Eco-System के आधार पर हो। Competition पहले भी हुआ करती थी, 15 साल पहले एक राज्य दूसरे से ज्यादा चीजें दे देता था, दूसरे तीसरे से ज्यादा देता था; देने की स्पर्धा होती थी, आखिर अगर कोई नहीं आता था लेकिन जहां-जहां Good Governance को बल दिया गया, जहां-जहां Proper Eco-System पैदा किया गया, जहां-जहां Regulations को ठीक किया गया, जहां-जहां Business Environment को Friendly बनाया गया, वहां पर अधिक मात्रा में दुनिया के बाहर के लोग भी आने लगे और इसलिए “Make in India” या दुनिया में कहीं पर भी समझाना पड़े ऐसी स्थिति नहीं है। और मैं गुजरात सरकार को अभिनंदन करता हूं, उन्होंने अपनी Progressive नीतियों के आधार पर Good Governance को बल देते हुए Foreign Direct Investment को Attract करने में बहुत ही अग्रिमता सिद्ध की है। गुजरात सरकार की पूरी टीम को इसके लिए मैं बहुत-बहुत बधाई देता हूं।
“இந்தியாவில் தயாரிப்போம்” திட்டம் சமீபத்தில் தனது இரண்டாம் ஆண்டு விழாவை கண்டது.
உலகில் உள்ள உற்பத்தி நாடுகள் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
2015-16- ஆம் ஆண்டு உற்பத்தி துறையில் நமது மொத்த மதிப்பு கூடல் ஒன்பது சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன் முன் மூன்று ஆண்டுகளை விட குறிப்பிட்ட ஆண்டின் வளர்ச்சி ஐந்தில் இருந்து ஆறு சதவீதம் அதிகமாகும்.
இவை அனைத்தும் நமது வேலைவாய்ப்பு சந்தையை பெருக்கவும் நமது மக்களின் பொருட்கள் வாங்கும் திறனையும் அதிகரிக்கிறது. ஆனால் உண்மையான திறன் இதைவிட அதிகமானது.
சில உதாரணங்கள்: இந்தியாவில் உணவு பதனிடும் தொழிற்துறை வரும் 10 ஆண்டுகளில் இன்னும் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்தியாவின் வாகன எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இது உலகின் மிகவும் ஈர்க்கப்படும் வாகனச் சந்தையாக அமைந்துள்ளது.
அரசாங்க அளவில், நமது வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாகும் ஊரக மற்றும் நகர மக்களையும் சேர்த்ததாக இருக்க வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
கீழ் கொண்டவை உள்ள இந்தியாவை உருவாக்க நாங்க உறுதியோடு உள்ளோம்:
- சிறந்த வேலைவாய்ப்பு
- சிறந்த வருமானம்
- சிறந்த பொருள் வாங்கும் திறன்
- சிறந்த வாழ்க்கை தரம்
- மற்றும் சிறந்த வாழ்க்கை நிலைமைகள்
நண்பர்களே!
நமது வளர்ச்சி தேவைகள் மிகவும் அதிகம். நமது வளர்ச்சி திட்டம் லட்சியத்தை கொண்டது.
உதாரணமாக:
- நாம் நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வீடு அமைத்து தர வேண்டும்
हर गरीब को घर होना चाहिए और अपना घर होना चाहिए और 2022 तक होना चाहिए, ये सपना ले करके हम चल रहे हैं।
- நாம் நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்
800 millions 35 से कम age group के Indians जो एक प्रकार से युवा भारत है। 800 million youth जिनकी उम्र 35 thirty five से कम है, इन हाथ में हुनर हो, काम का अवसर हो, तो नया हिन्दुस्तान हमारी आंखों के सामने बना करके खड़ा कर देंगे, ये विश्वास हिन्दुस्तान के नौजवानों के प्रति मेरा है, हम सबका है और हम सबका जिम्मा भी है कि उस अवसर को हम दें। और हम अवसर दे सकते हैं, संभावनाएं भरपूर पड़ी हैं।
- நாம் சுத்தமான எரிசக்தியை உறபத்தி செய்ய வேண்டும்
- நாம் சாலைகள் மற்றும் ரயில்களை வேகமாக அமைக்க வேண்டும்
- நாம் கனிமவள ஆய்வு மேலும் சுற்றுசூழலுக்கு ஏதுவாக மாற்ற வேண்டும்
- நாம் மிக வலுவான நகர வசதிகளை அமைக்க வேண்டும்
- நமது வாழ்க்கைத் தரத்தை மேலும் மேலும் சிறப்பானதாக மாற்ற வேண்டும்
அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை நோக்கி நாம் பயணிக்கிறோம்: முக்கிய மற்றும் சமூக துறைகள் இரண்டிலும்; ஊரகம் மற்றும் நகர பகுதிகள் இரண்டிலும். சரக்கு முனையங்கள், தொழில் முனையங்கள், அதிவேக மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள், அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து தொழில் பூங்காக்கள், ஸ்மார்ட் நகரங்கள், கடலோர பகுதி மையங்கள், மண்டல விமான நிலையங்கள், குடிநீர், சுகாதாரம் மற்றும் மின்சார திட்டங்கள் இதில் அடங்கும். ஒவ்வொருவருக்குமான மின்சார பயன்பாடு அளவு அதிகமாக வேண்டும். இது இருப்பினும், புதுபிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் உருதிபாடோடு உள்ளோம்.
நாங்கள் சுற்றுலாத்துறையை பெரிய அளவில் ஊக்குவிக்கும் முனைப்போடு உள்ளோம். இதற்கு சுற்றுலா உள்கட்டமைப்பு அவசியம்.
जब मैं renewable energy की बात करता हूं Hundred Seventy Five Giga Watt, एक जमाना था हम Megawatt की चर्चा करते भी डरते थे, आज देश Giga Watt के सपने देख रहा है। ये बहुत बड़ा, बहुत बड़ा बदलाव है। Hundred Seventy Five Giga Watt renewable energy, Energy-mix जिसमें Solar हो, Wind हो, Nuclear हो और दुनिया जो Global Warming से परेशान है, उस विश्व को बचाने का सपना हमने भी देखा है। और हम भी Hundred Seventy Five Giga Watt के Contribution से विश्व को Global Warming से बचाने के उस संकल्प को पूरा करने में हिन्दुस्तान अपनी नंबर एक की भूमिका अदा करने के लिए कृतसंकल्प हो करके आगे बढ़ रहा है, तो मैं पूरे विश्व को निमंत्रण देता हूं आइए, Hundred Seventy Five Giga Watt renewable energy के क्षेत्र में Investment के लिए Sky is the limit और हमारी Policies are very progressive. और मुझे विश्वास है कि मानवता का भी ये काम है जीवन की तरफ देखने का एक दृष्टिकोण बदलने का ये अवसर है। हमने दो शताब्दी Exploitation of Nature के अंदर खपा दी हैं। अब हमारा दायित्व है कि आने वाली शताब्दियों को Exploitation of Nature के हमारे सोच में से बाहर ला करके हमारी Nature को Strengthen करने की Basic चीजों को ले करके चलना इसका अवसर है। और उस बात को ले करके हम चलेंगे तो हम अवश्य ही विश्व में एक बड़े परिवर्तन की संभावनाओं में बहुत बड़ी अहम भूमिका अदा कर सकते हैं।
சாலைகள் மற்றும் ரயில் பாதை அமைக்கும் இலக்கை நாங்கள் பன்மடங்கு உயர்த்தி உள்ளோம். லட்சக்கணக்கான வீடுகளை அதிகமாக்க்கும் முயற்ச்சியில் உள்ளதால், உலக கட்டுமான சந்தையில் இந்திய சந்தை பெரிதாக வளர உள்ளது. இவை அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு எண்ணற்ற வாய்ப்பை அளிக்கிறது. உங்களில் பலர் எங்களோடு இனைந்து கீழ்கண்ட துறைகளில் பணிபுரியலாம்.
- வன்பொருள் முதல் மென்பொருள் வரை
- மென் திறன் முதல் அறிவியில் திறன் வரை
- பாதுகாப்பு அமைப்பு முதல் இணைய பாதுகாப்பு வரை
- மருத்துவம் முதல் சுற்றுலா வரை
இந்த மொத்த கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் விட இந்தியாவில்தான் அதிக வாய்ப்பு உள்ளது என்பதை நான் தைரியமாக கூறுவேன். மொத்த நூற்றாண்டுக்கான அனைத்து வாய்ப்பையும் இன்று இந்தியா வழங்குகிறது. நாங்கள் இது அனைத்தையும் சுத்தமாக, சுற்றுசூழலுக்கு ஏற்ப மற்றும் நிலையாக அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். சுற்றுசூழலை பாதுகாத்து இயற்கைக்கான நமது கடமையை முழு வீச்சோடு செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். இறுதியில், இந்தியா இதற்காகத்தான் ஆண்டாண்டுகளாக நின்றது.
- பாரம்பரியமும் அமைதியும் நிறைந்த தேசமான
- ஒற்றுணர்வும் உற்சாகமும் நிறைந்த தேசமான
- ஆய்வுகள் மற்றும் நிறுவனங்கள் நிறைந்த தேசமான
- வரவேற்புகள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த தேசமான
இந்தியாவிற்கு வாருங்கள்
மீண்டும், கீழ்கண்டவற்றின் ஒரு பகுதியாக இருக்க நான் உங்களை வரவேற்கிறேன், அழைக்கிறேன்-
- இன்றைய இந்தியா
- நாளைய இந்தியா
எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நான் உங்களோடு நான் கைகோர்த்து நிற்பேன் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
The @VibrantGujarat journey has come a long way from its beginning in 2003 to the present. pic.twitter.com/iRX4XpT1iA
— PMO India (@PMOIndia) January 10, 2017
Gujarat, a land of enterprise and entrepreneurship. pic.twitter.com/riJFFE287P
— PMO India (@PMOIndia) January 10, 2017
India's strengths. pic.twitter.com/eVs1NiRbGe
— PMO India (@PMOIndia) January 10, 2017
Youth-led development. Creating job creators, not job seekers. pic.twitter.com/wj90QI5PMg
— PMO India (@PMOIndia) January 10, 2017
Corruption-free governance for a prosperous and developed India. pic.twitter.com/mev2DLnLvb
— PMO India (@PMOIndia) January 10, 2017
A paradigm shift. pic.twitter.com/IW6KOwICtj
— PMO India (@PMOIndia) January 10, 2017
India, a bright spot in the global economy. pic.twitter.com/dNSfsXHkq4
— PMO India (@PMOIndia) January 10, 2017
Making it simpler for business to be established and grow in India. pic.twitter.com/P3FDb0qTSb
— PMO India (@PMOIndia) January 10, 2017
Inclusive growth, more jobs, better incomes, purchasing power and quality of life. pic.twitter.com/Xu4xfaJL00
— PMO India (@PMOIndia) January 10, 2017
#TransformingIndia with an ambitious development agenda. pic.twitter.com/FOAuEMR1Kq
— PMO India (@PMOIndia) January 10, 2017
India: a land of many opportunities and a commitment to protect the environment. pic.twitter.com/3QgK2pIK4L
— PMO India (@PMOIndia) January 10, 2017
Welcome to India! pic.twitter.com/pMJcTpUWdT
— PMO India (@PMOIndia) January 10, 2017