ஜப்பானில் ஹகிபிஸ் சூறாவளியில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜப்பானில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் உயிரிழந்தோருக்கு இந்தியர்கள் அனைவரின் சார்பாக நான் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயற்கைச் சீற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகளிலிருந்து விரைவில் இயல்பு நிலை திரும்ப நான் விரும்புகிறேன். ஜப்பான் மக்களின் மன உறுதி மற்றும் எதையும் எதிர்கொள்ளும் துணிவு, எனது நண்பர் ஷின்சோ அபேயின் தலைமைத்துவம் ஆகியவை சூறாவளிக்குப் பிந்தைய நிலைமையை விரைவாகவும், தீவிரமாகவும் சமாளிக்க உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இயற்கைப் பேரிடர்களுக்கு எதிரான ஜப்பானின் முன்தயாரிப்பு நிலை வெகுவாக பாராட்டத்தக்கது. இக்கட்டான இந்தத் தருணத்தில் ஜப்பானுடன் இந்தியா ஒருமைப்பாட்டுடன் நிற்கிறது. உடனடியாக உதவியில் ஈடுபட்டதற்காக ஜப்பானில் ஏற்கனவே திட்டமிட்டப்படி பயணத்தில் இருந்த இந்திய கடற்படை வீரர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
インド国民を代表して、大型台風ハギビス(台風19号)の犠牲となった方々にお悔やみを申し上げます。この自然災害による損害や破壊からの早期の回復を願っております。
— Narendra Modi (@narendramodi) October 13, 2019
日本の皆さんの災害に対する備えと困難に打ち勝つ強さ、そして私の友人である安倍首相のリーダーシップにより、日本が災害の影響から迅速に回復することを確信しています。日本の自然災害に対する備えは高く評価されています。
— Narendra Modi (@narendramodi) October 13, 2019
インドはこの困難な時に日本と共にあります。現在日本に駐留中のインド海軍も、必要な支援を提供する用意ができています
— Narendra Modi (@narendramodi) October 13, 2019
I offer condolences on behalf of all Indians on the loss of life caused by super-typhoon #Hagibis in Japan. I wish early recovery from the damage and devastation caused by this natural calamity.
— Narendra Modi (@narendramodi) October 13, 2019
I am sure that the preparedness and resilience of the Japanese people and the leadership of my friend @AbeShinzo would be able to address the aftermath effectively and quickly. Japan’s preparedness against natural disasters is well appreciated.
— Narendra Modi (@narendramodi) October 13, 2019
India stands in solidarity with Japan at this difficult hour. Personnel of the Indian Navy, in Japan on a scheduled visit, will be happy to assist immediately.
— Narendra Modi (@narendramodi) October 13, 2019