India & Indonesia agree to prioritize defence and security cooperation.
India & Indonesia agree to build a strong economic & development partnership that strengthens the flow of ideas, trade, capital etc
Both countries agree to work closely in the fields of pharmaceuticals, IT & software, & skill development.
Agreement to speed up establishment of Chairs of Indian & Indonesian Studies in each other's universities.

மேதகு அதிபர் ஜோக்கோ விடோடோ அவர்களே,

பெருமைமிகு பிரதிநிதிகளே

ஊடகத் துறை நண்பர்களே

முதற்கண், அச்சை என்ற இடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவில் தமது முதலாவது அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ஜோக்கோ விடோடோவை வரவேற்பதில் பெருமை அடைகிறேன். 2014 நவம்பர் மாதம் நான் முதன் முறையாக அதிபர் விடோடோவை சந்தித்து  நமது ஒத்துழைப்பு எவ்வாறு இருநாடுகளுக்கும் மற்றும் அது சார்ந்த மண்டலத்துக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று விரிவாக விவாதித்துள்ளேன்.

மேதகு அதிபர் அவர்களே,

தாங்கள் ஒரு மாபெரும் நாட்டின் தலைவர். உலக நாடுகளில் மிக அதிகமான முஸ்லீம் மக்களை கொண்டுள்ள இந்தோனேசியா ஜனநாயகம், பன்மை தன்மை, பன்முகத் தன்மை, சமுக நல்லிணத்துக்கு உதாரணமாக திகழ்கிறது. இவையே நாங்கள் போற்றும் நன்நெறிகளாகும். நமது நாடுகளும் சமுதாயங்களும் நமது வரலாறு முழுவதுமாக வலுவான வர்த்தக பண்பாட்டு உறவுகளை வளர்த்து வருகின்றன. நாம் விரைவான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மாற்றங்களை மத்தியமாக கொண்டுள்ள புவிப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். நமது பாதுகாப்பு பங்களிப்புக்கு உங்களது பயணம் வலுவையும் வேகத்தையும் அளிக்கிறது. அமைதி, வளம், நிலைத்த தன்மை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு சக்தியாக இந்தியா பசிபிக் மண்டலத்தில் ஒரு சக்தியாக விளங்குகிறது.

நண்பர்களே,

எமது கிழக்கு நோக்கி செயல்படும் கொள்கையில் இந்தோனேசியா இந்தியாவின் மிகுந்த மதிப்பு மிக்க கூட்டாளியாகும். இந்தோனேசியா தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய பொருளாதாரம் இந்தியா உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று இரண்டு மிகப்பெரிய ஜனநாயகங்களாகவும்  பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களாகவும் விளங்கும் நாம் பொருளாதார பாதுகாப்பு அக்கறைகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். நாம் பொதுவான கவலைகளையும் சவால்களையும் எதிர் கொண்டுள்ளோம். நம்மிடையேயான ஒத்துழைப்பு முழுமை குறித்தும் அதிபர் உடனான எனது விரிவான பேச்சுக்களில் விவாதித்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்த உடன்பட்டுள்ளோம். இரண்டு முக்கிய கடல்சார் நாடுகளாகவும் அண்டை நாடுகளாகவும் உள்ள நாம் கடல் பாறைகளின் பத்திரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யவும், பேரிடர் பதில் நடவடிக்கைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைக்க உடன்பட்டுள்ளோம். இந்தத் துறையில் நமது அலுவல் பட்டியல் கடல்சார் ஒத்துழைப்பு குறித்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நமது ஒத்துழைப்பு பயங்கரவாதம், அமைப்பு சார் குற்றங்கள், போதை மருந்து, மனித கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் விரிவாக்கப்பட்டு அமைந்துள்ளது.

நண்பர்களே,

அதிபரும் நானும் கருத்துகள், வர்த்தகம், மூலதனம் மற்றும் இருநாடுகளின் மக்கள் ஆகியவற்றை பரிமாற்றம் செய்வதை வலுப்படுத்தும் பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும் உடன்பட்டுள்ளோம். மருந்துகள் தகவல் தொழில்நுடபம், மென்பொருள் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தோனேசியாவுடன் நெருங்கி உழைக்க இந்திய நிறுவனங்களை ஊக்குவிப்பதில் நானும் அதிபர் விடோடோவும் ஒப்புக் கொண்டுள்ளோம். வளர்ந்து வரும் இரண்டு நாடுகள் என்ற முறையில் அடிப்படை வசதி மேம்பாடு, இருவழி முதலீடுகள், ஆகியவற்றின் மூலம் நமது திறன்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த வகையில் தலைமை நிர்வாக அதிகாரிகள் அமைப்பு இருநாட்டு தொழில்களை பயன்படுத்தும் புதிய விரிவான ஆழமான வழிவகைகளை அடையாளம் காண்பதில் தலைமை ஏற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த வகையில் இந்தியா- ஆசியான் வரியற்ற வர்த்தக உடன்பாட்டை விரைவாக அமல்படுத்துவது, மண்டல விரிவான பொருளாதார ஒத்துழைப்பை இறுதி செய்வது ஆகியன முக்கிய பணிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். விண்வெளித் துறையில் நம்மிடையேயான 20 வருட ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளோம். இருதரப்பு ஒத்துழைப்பு செயல் பட்டியலை முன் நடத்தி செல்ல தற்போதுள்ள அமைச்சர்கள் நிலை அமைப்பின் கூட்டத்தை விரைவாக நடத்தி நமது பங்களிப்பின் வேகத்தை சீராக்க அதிபரும் நானும் உத்தரவிட்டுள்ளோம்.

நண்பர்களே,

வரலாற்று உறவுகள், வலுவான பண்பாட்டு பிணைப்புகள் ஆகியன நாம் பகிர்ந்து கொண்டுள்ள பாரம்பரியங்கள் ஆகும். நமது வரலாற்றுப் பூர்வ இணைப்புகள் குறித்த ஆராய்ச்சியை துாண்டி விடுவதன் முக்கியத்துவத்தை அதிபரும் நானும் உணர்ந்துள்ளோம். நமது பல்கலை கழகங்களில் பரஸ்பர இந்திய மற்றும் இந்தோனேஷிய ஆய்வு இருக்கைகளை விரைந்து ஏற்படுத்த உடன்பட்டுள்ளோம் நமது கல்வி உதவித் தொகை மற்றும் பயிற்சி திட்டங்களை விரிவாக்கவும் உடன்பட்டுள்ளோம். நேரடி இணைப்புகளை மேம்படுத்துவது இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவது ஆகிவற்றின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்ட ஒன்றாகும். இந்த வகையில் கருடா இந்தோனேசியாவின் மும்பைக்கான நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கும் முடிவை நாம் வரவேற்கிறோம்.

மேதகு அதிபர் அவர்களே

உங்கள் வருகைக்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நமது இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் உங்கள் வலுவான நோக்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். நமது பேச்சு வார்த்தைகளும் நாம் இன்று கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களும் அலுவல் பட்டியலுக்கு உருவம் கொடுத்து  நமது முக்கியமாக உறவுக்கு புதிய பாதையையும் தீவிரத்தையும் சேர்க்கும் என்று நம்புகிறேன். எனது உரையை முடிப்பதற்கு முன் இந்தோனேசியாவிலுள்ள நமது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi