பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோன் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். தொடர்ந்து 3-வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்துத் தெரிவித்தார். அதற்கு அதிபர் மேக்ரோனிடம் நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்தியா – பிரான்ஸ் இடையேயான வலுவான, நம்பிக்கை கொண்ட உத்திசார்ந்த கூட்டாண்மையை வரும் காலங்களில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.
இருநாடுகளுக்கு இடையேயான உறவு 2047-ன் படி திட்டமிடப்பட்ட உறுதிப்பாடுகளை நிறைவேற்ற தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். வரலாற்று சிறப்புமிக்க 80-வது ஆண்டு தினத்தையொட்டி அதிபர் மேக்ரோனுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.
எதிர்வரும் பாரீஸ் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்தவும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
Delighted to receive a phone call from my dear friend, @EmmanuelMacron. Conveyed my commitment to work together to accomplish the ambitious 'Horizon 2047' roadmap. The strong and trusted Strategic Partnership between India & France is slated to scale newer heights in the times to…
— Narendra Modi (@narendramodi) June 6, 2024