பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 2021 நவம்பர் வரை ஒவ்வொரு மாதமும் இலவச உணவு தானியங்கள் தொடர்ந்து கிடைக்கும்.
2021 ஜூன் 7 வரை, அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 69 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது.
2021 மே-ஜூன் மாதங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டை ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், கோவா, கேரளா, லட்சத்தீவுகள், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, புதுச்சேரி, பஞ்சாப், தெலங்கானா மற்றும் திரிபுரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எடுத்து சென்று விட்டன.
2021 மே மாதத்திற்கான மொத்த ஒதுக்கீட்டை அந்தமான் & நிகோபார் தீவுகள், அசாம், பிகார், சத்தீஸ்கர், டாமன் டையு தாத்ரா & நாகர் ஹவேலி, தில்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, லடாக், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 23 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எடுத்து சென்று விட்டன.
அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் சுமூகமான விநியோகத்தை உறுதி செய்திட, நாடு முழுவதற்கும் உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் அனுப்பி வருகிறது. 2021 மே மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 46 ரேக்குகள் எனும் விகிதத்தில் 1433 உணவு தானிய ரேக்குகள் இந்திய உணவு கழகத்தால் நிரப்பப்பட்டன.
உணவு மானியம், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து, விற்பனையாளர் கட்டணம்/கூடுதல் விற்பனையாளர் கட்டணம் என இதற்கான மொத்த செலவையும் இந்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எந்த செலவையும் பகிர்ந்து கொள்ள தேவையில்லை.
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கிழ் வழங்கப்படும் உணவு தானியங்களை குறித்த காலத்திற்குள் விநியோகிக்கும் படி அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களையும் இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து ஏழை மக்களை பாதுகாப்பதற்காக இத்திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது.
இதன் மூலம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ வீதம் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: