துருக்கி குடியரசுத் தலைவர் மேதகு திரு. ரிசெப் தயீப் எர்டோகன் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தொலைபேசியில் அழைத்தார்.
இந்தியாவில் சமீபத்தில் நடைபெர்ற பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோகன் தனது அஞ்சலிகளை தெரிவித்ததோடு, இந்தத் தாக்குதல்களில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
உலகின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மிகப் பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது என்று இத்தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக உடனடியாக, நன்கு தெரியும் வகையிலான, மாற்றமேதுமற்ற வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.