பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று நடைபெற்ற துணைக் குடியரசுத் தலைவர் திரு. ஹமீத் அன்சாரி அவர்கள் எழுதிய ‘குடிமகனும் சமூகமும்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்திய குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த நூலை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், இந்த நூலின் மூலமாக வருங்காலத் தலைமுறையினருக்குத் தனது சிந்தனைகளை வழங்கியுள்ளதற்காக துணைக் குடியரசுத் தலைவரை பிரதமர் பாராட்டினார்.
இன்றைய தொழில்நுட்பம் குடிமக்களை இணையத்தின் குடிமக்களாக மாற்றியுள்ளதோடு, பாரம்பரியமான எல்லைகளும் மறைந்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் இந்தியாவில் குடிமகனுக்கும் சமூகத்திற்கும் இடையே குடும்பம் என்ற பகுதி உள்ளது என்றும் அதுவே நமது மிகப்பெரிய வலிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு வகையான பேச்சுமொழிகளை, மொழிகளை பேசுகின்ற, வேறுபட்ட பல நம்பிக்கைகளையும் கொண்டுள்ள மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் நாடாக இந்தியா இருப்பது குறித்து பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கு இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருமே பங்களிப்பு செய்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.