பிரகதி எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அடிப்படையிலான இருபத்தி ஏழாவது கலந்துரையாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மேற்கொண்டார்.
இதுவரையில் நடைபெற்ற 26 பிரகதி கூட்டங்களில் ரூ. 11 லடசம் கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட்து. பல்வேறு துறைகளில் பொதுமக்கள் குறைபாடுகளுக்கான தீர்வுகளும் ஆய்வு செய்யப்பட்டது.
இன்று நடந்த இருபத்தி ஏழாவது கூட்ட்த்தில் ரயில்வே, சாலை மற்றும் மின்சாரத் துறையில் எட்டு உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இந்த திட்டங்கள் பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிரா. ஒடிசா, சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், தில்லி, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டங்கள் பரவியுள்ளன.
தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான திட்ட்த்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறையில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகள் பற்றி குறிப்பிட்ட அவர், சுகாதார உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த அழைப்பு விடுத்தார்.
2018 ஏப்ரல் முதல் மே 5 வரை மேற்கொள்ளப்பட்ட ம்கிராம சுயராஜ்ஜிய இயக்கத்தின் முதல் கட்ட்ம் ஏழு முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 16000 கிராமங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார். இரண்டாவது கட்ட கிராம சுயராஜ்ஜிய இயக்கம் 40000 கிராமங்களில் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து அதிகாரிகளும் இந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டு, ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இயன்ற சிறந்த வெளிப்பாடுகளை அடைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
சவுபாக்கிய திட்ட்த்தில் இதுவரை பெறப்பட்டுள்ள முன்னேற்றத்தை பாராட்டிய பிரதமர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 4 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு அளிக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கை நிறவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.