பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தலைமையிலான உயர்மட்ட பணிக்குழுவின் கூட்டம் 2020 செப்டம்பர் 18 அன்று நடந்தது.
தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த குழுவின் கூட்டத்தில் தில்லி, பஞ்சாப், ஹரியானா ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், வேளாண் அமைச்சகம், சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இதர அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகமைகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், எதிர்வரும் காலத்துக்கான செயல்திட்டமும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
கூட்டத்தை முன்னதாகவே நடத்துவதற்கு காரணம் சருகுகளை எரிப்பதன் மீது சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும், மற்றும் தேவைப்படும் இதர இடையீடுகளுக்கும் தான் என்று முதன்மை செயலாளர் கூறினார்.
ஒட்டுமொத்த நிலைமையை ஆய்வு செய்தபிறகு, பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் சருகுகளை எரிப்பது கடந்த வருடம் அதிகமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இதை தவிர்ப்பதற்கு தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை முதன்மை செயலாளர் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்