பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீட்டைப் பெற்றுள்ள பூஞ்ச் நகரைச் சேர்ந்த சஞ்சாலா தேவியின் வாழ்வு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது குறித்து, ஜம்முவின் பூஞ்ச் நகரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜுகல் கிஷோர் ஷர்மா விவரித்திருந்த தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதில் அளித்தார்.
அதில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், தாய்மார்கள் மற்றும் மகள்களின் வாழ்வை எளிதாக்கி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“நமது தாய்மார்கள் மற்றும் மகள்களின் வாழ்வை பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் எவ்வாறு எளிதாக்குகிறது என்பதை ஜம்மு காஷ்மீரின் சஞ்சாலா தேவி அவர்களின் மகிழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.”
जम्मू-कश्मीर की चंचला देवी जी की यह खुशी बताती है कि कैसे प्रधानमंत्री आवास योजना से हमारी माताओं-बहनों का जीवन आसान हो रहा है। https://t.co/4vdKzdok85
— Narendra Modi (@narendramodi) April 14, 2023