குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் ஜுஜ்வா கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டப் பயனாளிகள் இணைந்து நடத்திய இ-கிருஹப்பிரவேச நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து பார்வையிட்டார். மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் பிரதான நிகழ்ச்சியுடன் வீடியோ இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு பயனாளிகள் சிலருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இதே நிகழ்ச்சியில் பிரதமர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் சிலருக்கு தீனதயாள் உபாத்யாய ஊரக திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சர் கிராமோதய திட்டம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கடிதங்களை விநியோகித்தார். பெண் வங்கி முகவர்களுக்கு மினி-ஏ.டி.எம்.கள் மற்றும் நியமனக் கடிதங்களை அவர் வழங்கினார்.
அஸ்டோல் நீர் விநியோகத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ரக்ஷாபந்தன் விழா நெருங்கி வருவதாக குறிப்பிட்டார். ரக்ஷா பந்தன் அன்பளிப்பாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பெயரில் வீடு ஒன்றைப் பெற்றிருப்பதாக அவர் கூறினார். புதிய வீடு ஒன்று தன்னுடன் புதிய கனவுகளைக் கொண்டு வருகிறது என்றும் அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கு குடும்பத்தில் புதிய கூட்டு உற்சாகத்தையும் கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இந்த இ-கிரஹப் பிரவேசத்தின் போது பார்க்கப்படும் வீடுகள் உயர்ந்த தரத்துடன் இருப்பதாக கூறிய அவர், நடுத்தரகர்கள் யாரும் இல்லை என்பதாலேயே இது சாத்தியமானதாக தெரிவித்தார். 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்வதே மத்திய அரசின் தொலைநோக்கு பார்வை என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் ஆடம்பரமான வீடுகள் பெறுவது குறித்து நீண்ட காலம் பேசப்படுவதாக பிரதமர் கூறினார். ஆனால் தற்போது ஏழைகள் தங்களுக்கு சொந்தமான வீடுகள் பெறுவது குறித்து பேச்சுக்கள் மாறியுள்ளதாக அவர் கூறினார்.
இன்று அடிக்கல் நாட்டப்படும் அஸ்டோல் நீர் விநியோக திட்டம் உருவாக்கப்படுவதில் ஒரு பொறியியல் அற்புதம் என்று கூறிய பிரதமர், தூய்மையான குடிநீர் மக்களை நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்றார்.
சொந்த வீடு, மின்சாரம், தூய்மையான குடிநீர், மற்றும் தூய்மையான சமையல் எரிபொருள் ஆகியவற்றை ஏழைகள் அணுகச் செய்வதன் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு விரும்புவதாக பிரதமர் விளக்கிப் பேசினார்.
I got an opportunity to talk to women across the state today who got their homes under PM Awas Yojana.
— PMO India (@PMOIndia) August 23, 2018
The wonderful homes under PM Awas Yojana are being made possible because there are no middlemen: PM
It is my dream, it is our endeavour to ensure that every Indian has his own house by 2022.
— PMO India (@PMOIndia) August 23, 2018
Till now, we only heard about politicians getting their own homes.
Now, we are hearing about the poor getting their own homes: PM