உலகச் சுகாதார தினத்தையொட்டி பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில், “மானுட மேம்பாட்டுக்கு நல்ல ஆரோக்கியம் சுகாதாரம் அடித்தளம் ஆகும். இந்த உலக சுகாதார தினத்தில், அனைவரும் மிகச் சிறந்த உடல்நலத்துடன் வளர்ச்சியின், புதிய உயரங்களைத் தொடர்ந்து எட்டுவதற்கு வாழ்த்துகிறேன்.
“உலக சுகாதாரம்: எல்லோருக்கும் எல்லா இடத்திலும்” என்று உலகச் சுகாதார நிறுவனமும் இதர நிறுவனங்களும் தேர்ந்தெடுத்துள்ள கருத்துருவை நான் வரவேற்கிறேன். அனைவருக்கும் சுகாதாரத்துக்கான இந்தத் தேடலே “ஆயுஷ்மான் பாரத்” என்ற மிகப் பெரிய சுகாதார நலத் திட்டத்தை உருவாக்கத் தூண்டுகோலாக அமைந்தது” என்று குறிப்பிட்டார்.
Good health is the foundation of human progress. This #WorldHealthDay, I wish all of you remain in the best health and continue to scale new heights of growth. pic.twitter.com/yQJUW6v9WF
— Narendra Modi (@narendramodi) April 7, 2018
I welcome the theme ‘Universal health coverage: everyone, everywhere’ that has been chosen by @WHO and others. It is the quest for #HealthForAll that inspired us to create Ayushman Bharat, the largest healthcare programme in the world. #FitIndia pic.twitter.com/B6Ns8EC2Fe
— Narendra Modi (@narendramodi) April 7, 2018